ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1

குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
    கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
    பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
    உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும், வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள், ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான். பருகாமலேயே, மலத்தைப் போக்கும் அமுதமாவான். பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான். பாட்டில் பண்ணாக உள்ளான். ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான். நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான். முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன், முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன்.

குறிப்புரை:

குருகாம் - நிறத்தைத் தாங்குகின்ற ; ` காவும் ` என்னும் பெயரெச்சத்து ஈற்று உயிர்மெய்கெட்டது. எதுகை நோக்கிக் ககர ஒற்று மிகாதாயிற்று. அன்றி, குருகு, வெண்மை என்றலும் ஒன்று. இனி, ` குருகு ஆம் வயிரம் ` எனக்கொண்டு ` கைவளையாதற்குரிய வயிரம் ` என்றுரைத்தலும் ஆம். ` வயிரம் ஆம் ` முதலியவற்றில் ` ஆம் ` ` ஆவான் ` என்னும்பொருட்டு. நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம். ` கோளே ` என்னும் ஏகாரம் தேற்றம். தான், அசைநிலை. பருகா அமுதம் ` விலக்குருவகம். பருகிய பின்னர் மிருத்யுவை ( மரணத்தை ) ப் போக்கும் அமுதம்போலாது, பருகாமலே ( மலத்தைப் ) போக்கும் அமுதமாய் உள்ளவன் ` என்பதாம். இரதம் - சுவை. பாலின் நெய் முதலிய மூன்றும் சுட்டிக் கூறா உவமங்கள். ஆக்கங்கள் உவமை குறித்தன. ` வயிரமாம் ` என்புழியும் ` ஆம் ` அன்னது. ` மற்றொருகால் தனியனுமாம் ` என்பதைத் தழுவிநிற்றலின் ` பாகனுமாம் ` என்னும் உம்மை, எதிரது தழுவிய எச்சம் ; இறைவன், உலகத்தைத் தொழிற் படுத்துங்கால் ` தானும், தன் சத்தியும் ` என இருதிறப்பட்டு நிற்றலும், அவை அனைத்தும் ஒடுங்கியபின்னர் வாளாவிருக்குங்கால், சத்தி தன்னிடத்தில் அடங்கியிருப்பத் தான் ஒருவனாயே நிற்றலும் உடையன் என்க. ` பெண்ணுரு ஒருதிறனாகின்று ; அவ்வுரு - தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும் ` ( புறம். கடவுள் வாழ்த்து .) என்றதுங் காண்க. மீள வுலகத்தைத் தொழிற்படுத்த நினையுங்கால் இருதிறனாய் நிற்பன் ஆதலின், ` ஓருரு வாயினை ; மானாங் காரத்து - ஈரியல்பாய் ` என்றருளிச்செய்தார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள். ( தி.1 திருவெழுகூற்றிருக்கை.) உள் - வாயினுள். ` உரையாடி ` என்பது, ` நா உரையாடுதற்கு ஏதுவாய் உள்ள முதல்வன் ` என்னும் பொருள தாய், கிழமைப் பொருளில் வந்த, ` நாவிற்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று. கரு - முதல். ` உலகுக்கு ` என்பது, தாப்பிசையாய், முன்னருஞ் சென்று இயைந்தது. ` கண் ` என்றது, நடாத்துவோனாதல் பற்றி. ` முன்னே தோன்றிநின்று நடாத்துவான் ` என்பது பொருளாகலின், ` முன்னே தோன்றும் ` என்றது, உடம்பொடு புணர்த்தல். இத் திருப் பாட்டுள், ` வயிரம் ` என்றதனால், இறைவனது சிறப்பினையும், ` நாள், கிழமை, கோள் ` என்றவற்றால், அவன் காலமாய் நின்று அதனை நடாத்தி, உலகினைத் தொழிற்படுத்துதலையும், ` அமுதம் ` என்றதனால், அவனது இன்பம், அருள், ஆற்றல் என்பவற்றையும், ` பாலின் நெய் ` முதலிய மூன்றாலும், அவன், உடலில் உயிர்போல உலகத்தோடு ஒன்றாய் நிற்றலையும், ` உமைபாகனும் ` என்றதனால், அவனது, ` தடத்தநிலை, சொரூபநிலை ` என்னும் இருநிலைகளையும், ` நாவிற்கு உரையாடி ` என்றதனால், எல்லாப் பொருள்களையும் இயக்குதலையும் அருளிச் செய்தவாறாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
15. तिरुक्करुकाऊर

षिव रंगीन वाटिका स्वरूप हैं, ब्रह्म सदृष कठोर स्वभाव वाले हैं। नक्षत्र के रूप में दिन स्वरूप हैं। उस दिन के अनुरूप वार स्वरूप हैं। वे स्वयं ब्रह्माण्ड स्वरूप, बिन स्वाद के अमृत स्वरूप परमानन्द देनेवाले, दुग्ध में स्थित घी सदृष हैं वे फल के स्वाद सदृष हैं। वे गीत के राग स्वरूप हैं। उमा देवी को अपने अद्र्धांग में रखे हुए हैं। जिह्वा की स्तुति के लिए आदि मूल स्वरूप हैं। वे भक्तों के लिए आँख स्वरूप हैं। वे प्रकाषपुंज हैं, करुकाऊर में प्रतिष्ठित मेरे पिताश्री हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is a white brilliant;
He is asterism,
the day of the week,
the planet,
The nectar unquaffed,
the ghee in milk,
The essence of fruit and the pann of song;
Sometimes He is concorporate with Uma;
He is the Indweller-- the subject of tongue`s praise;
He is the Source of the cosmos;
He,
the Eye Of the Universe is its ruling Lord.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀭𑀼𑀓𑀸𑀫𑁆 𑀯𑀬𑀺𑀭𑀫𑀸𑀗𑁆 𑀓𑀽𑀶𑀼 𑀦𑀸𑀴𑀸𑀫𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀗𑁆 𑀓𑀺𑀵𑀫𑁃𑀬𑀸𑀫𑁆 𑀓𑁄𑀴𑁂 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀧𑀭𑀼𑀓𑀸 𑀅𑀫𑀼𑀢𑀫𑀸𑀫𑁆 𑀧𑀸𑀮𑀺𑀷𑁆 𑀦𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁆
𑀧𑀵𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀇𑀭𑀢𑀫𑀸𑀫𑁆 𑀧𑀸𑀝𑁆𑀝𑀺𑀶𑁆 𑀧𑀡𑁆𑀡𑀸𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀉𑀫𑁃𑀬𑀸𑀴𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓 𑀷𑀼𑀫𑀸𑀫𑁆
𑀉𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶 𑀦𑀸𑀯𑀺𑀶𑁆 𑀓𑀼𑀭𑁃𑀬𑀸𑀝𑀺𑀬𑀸𑀫𑁆
𑀓𑀭𑀼𑀯𑀸 𑀬𑀼𑀮𑀓𑀼𑀓𑁆𑀓𑀼 𑀫𑀼𑀷𑁆𑀷𑁂 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুরুহাম্ ৱযিরমাঙ্ কূর়ু নাৰাম্
কোৰ‍্ৰুঙ্ কিৰ়মৈযাম্ কোৰে তান়াম্
পরুহা অমুদমাম্ পালিন়্‌ নেয্যাম্
পৰ়ত্তিন়্‌ ইরদমাম্ পাট্টির়্‌ পণ্ণাম্
ওরুহাল্ উমৈযাৰোর্ পাহ ন়ুমাম্
উৰ‍্নিণ্ড্র নাৱির়্‌ কুরৈযাডিযাম্
করুৱা যুলহুক্কু মুন়্‌ন়ে তোণ্ড্রুঙ্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
कुरुहाम् वयिरमाङ् कूऱु नाळाम्
कॊळ्ळुङ् किऴमैयाम् कोळे ताऩाम्
परुहा अमुदमाम् पालिऩ् नॆय्याम्
पऴत्तिऩ् इरदमाम् पाट्टिऱ् पण्णाम्
ऒरुहाल् उमैयाळोर् पाह ऩुमाम्
उळ्निण्ड्र नाविऱ् कुरैयाडियाम्
करुवा युलहुक्कु मुऩ्ऩे तोण्ड्रुङ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಕುರುಹಾಂ ವಯಿರಮಾಙ್ ಕೂಱು ನಾಳಾಂ
ಕೊಳ್ಳುಙ್ ಕಿೞಮೈಯಾಂ ಕೋಳೇ ತಾನಾಂ
ಪರುಹಾ ಅಮುದಮಾಂ ಪಾಲಿನ್ ನೆಯ್ಯಾಂ
ಪೞತ್ತಿನ್ ಇರದಮಾಂ ಪಾಟ್ಟಿಱ್ ಪಣ್ಣಾಂ
ಒರುಹಾಲ್ ಉಮೈಯಾಳೋರ್ ಪಾಹ ನುಮಾಂ
ಉಳ್ನಿಂಡ್ರ ನಾವಿಱ್ ಕುರೈಯಾಡಿಯಾಂ
ಕರುವಾ ಯುಲಹುಕ್ಕು ಮುನ್ನೇ ತೋಂಡ್ರುಙ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
కురుహాం వయిరమాఙ్ కూఱు నాళాం
కొళ్ళుఙ్ కిళమైయాం కోళే తానాం
పరుహా అముదమాం పాలిన్ నెయ్యాం
పళత్తిన్ ఇరదమాం పాట్టిఱ్ పణ్ణాం
ఒరుహాల్ ఉమైయాళోర్ పాహ నుమాం
ఉళ్నిండ్ర నావిఱ్ కురైయాడియాం
కరువా యులహుక్కు మున్నే తోండ్రుఙ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුරුහාම් වයිරමාඞ් කූරු නාළාම්
කොළ්ළුඞ් කිළමෛයාම් කෝළේ තානාම්
පරුහා අමුදමාම් පාලින් නෙය්‍යාම්
පළත්තින් ඉරදමාම් පාට්ටිර් පණ්ණාම්
ඔරුහාල් උමෛයාළෝර් පාහ නුමාම්
උළ්නින්‍ර නාවිර් කුරෛයාඩියාම්
කරුවා යුලහුක්කු මුන්නේ තෝන්‍රුඞ්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
കുരുകാം വയിരമാങ് കൂറു നാളാം
കൊള്ളുങ് കിഴമൈയാം കോളേ താനാം
പരുകാ അമുതമാം പാലിന്‍ നെയ്യാം
പഴത്തിന്‍ ഇരതമാം പാട്ടിറ് പണ്ണാം
ഒരുകാല്‍ ഉമൈയാളോര്‍ പാക നുമാം
ഉള്‍നിന്‍റ നാവിറ് കുരൈയാടിയാം
കരുവാ യുലകുക്കു മുന്‍നേ തോന്‍റുങ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
กุรุกาม วะยิระมาง กูรุ นาลาม
โกะลลุง กิฬะมายยาม โกเล ถาณาม
ปะรุกา อมุถะมาม ปาลิณ เนะยยาม
ปะฬะถถิณ อิระถะมาม ปาดดิร ปะณณาม
โอะรุกาล อุมายยาโลร ปากะ ณุมาม
อุลนิณระ นาวิร กุรายยาดิยาม
กะรุวา ยุละกุกกุ มุณเณ โถณรุง
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရုကာမ္ ဝယိရမာင္ ကူရု နာလာမ္
ေကာ့လ္လုင္ ကိလမဲယာမ္ ေကာေလ ထာနာမ္
ပရုကာ အမုထမာမ္ ပာလိန္ ေန့ယ္ယာမ္
ပလထ္ထိန္ အိရထမာမ္ ပာတ္တိရ္ ပန္နာမ္
ေအာ့ရုကာလ္ အုမဲယာေလာရ္ ပာက နုမာမ္
အုလ္နိန္ရ နာဝိရ္ ကုရဲယာတိယာမ္
ကရုဝာ ယုလကုက္ကု မုန္ေန ေထာန္ရုင္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
クルカーミ・ ヴァヤラマーニ・ クール ナーラアミ・
コリ・ルニ・ キラマイヤーミ・ コーレー ターナーミ・
パルカー アムタマーミ・ パーリニ・ ネヤ・ヤーミ・
パラタ・ティニ・ イラタマーミ・ パータ・ティリ・ パニ・ナーミ・
オルカーリ・ ウマイヤーローリ・ パーカ ヌマーミ・
ウリ・ニニ・ラ ナーヴィリ・ クリイヤーティヤーミ・
カルヴァー ユラクク・ク ムニ・ネー トーニ・ルニ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
guruhaM fayiramang guru nalaM
gollung gilamaiyaM gole danaM
baruha amudamaM balin neyyaM
baladdin iradamaM baddir bannaM
oruhal umaiyalor baha numaM
ulnindra nafir guraiyadiyaM
garufa yulahuggu munne dondrung
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
كُرُحان وَیِرَمانغْ كُورُ ناضان
كُوضُّنغْ كِظَمَيْیان كُوۤضيَۤ تانان
بَرُحا اَمُدَمان بالِنْ نيَیّان
بَظَتِّنْ اِرَدَمان باتِّرْ بَنّان
اُورُحالْ اُمَيْیاضُوۤرْ باحَ نُمان
اُضْنِنْدْرَ ناوِرْ كُرَيْیادِیان
كَرُوَا یُلَحُكُّ مُنّْيَۤ تُوۤنْدْرُنغْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
kʊɾʊxɑ:m ʋʌɪ̯ɪɾʌmɑ:ŋ ku:ɾɨ n̺ɑ˞:ɭʼɑ:m
ko̞˞ɭɭɨŋ kɪ˞ɻʌmʌjɪ̯ɑ:m ko˞:ɭʼe· t̪ɑ:n̺ɑ:m
pʌɾɨxɑ: ˀʌmʉ̩ðʌmɑ:m pɑ:lɪn̺ n̺ɛ̝jɪ̯ɑ:m
pʌ˞ɻʌt̪t̪ɪn̺ ʲɪɾʌðʌmɑ:m pɑ˞:ʈʈɪr pʌ˞ɳɳɑ:m
ʷo̞ɾɨxɑ:l ʷʊmʌjɪ̯ɑ˞:ɭʼo:r pɑ:xə n̺ɨmɑ:m
ʷʊ˞ɭn̺ɪn̺d̺ʳə n̺ɑ:ʋɪr kʊɾʌjɪ̯ɑ˞:ɽɪɪ̯ɑ:m
kʌɾɨʋɑ: ɪ̯ɨlʌxɨkkɨ mʊn̺n̺e· t̪o:n̺d̺ʳɨŋ
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kurukām vayiramāṅ kūṟu nāḷām
koḷḷuṅ kiḻamaiyām kōḷē tāṉām
parukā amutamām pāliṉ neyyām
paḻattiṉ iratamām pāṭṭiṟ paṇṇām
orukāl umaiyāḷōr pāka ṉumām
uḷniṉṟa nāviṟ kuraiyāṭiyām
karuvā yulakukku muṉṉē tōṉṟuṅ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
кюрюкaм вaйырaмаанг курю наалаам
коллюнг кылзaмaыяaм коолэa таанаам
пaрюкa амютaмаам паалын нэйяaм
пaлзaттын ырaтaмаам пааттыт пaннаам
орюкaл юмaыяaлоор паака нюмаам
юлнынрa наавыт кюрaыяaтыяaм
карюваа ёлaкюккю мюннэa тоонрюнг
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
ku'rukahm waji'ramahng kuhru :nah'lahm
ko'l'lung kishamäjahm koh'leh thahnahm
pa'rukah amuthamahm pahlin :nejjahm
pashaththin i'rathamahm pahddir pa'n'nahm
o'rukahl umäjah'loh'r pahka numahm
u'l:ninra :nahwir ku'räjahdijahm
ka'ruwah julakukku munneh thohnrung
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
kòròkaam vayeiramaang körhò naalhaam
kolhlhòng kilzamâiyaam koolhèè thaanaam
paròkaa amòthamaam paalin nèiyyaam
palzaththin irathamaam paatdirh panhnhaam
oròkaal òmâiyaalhoor paaka nòmaam
òlhninrha naavirh kòrâiyaadiyaam
karòvaa yòlakòkkò mònnèè thoonrhòng
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
curucaam vayiiramaang cuurhu naalhaam
colhlhung cilzamaiiyaam coolhee thaanaam
parucaa amuthamaam paalin neyiiyaam
palzaiththin irathamaam paaittirh painhnhaam
orucaal umaiiyaalhoor paaca numaam
ulhninrha naavirh curaiiyaatiiyaam
caruva yulacuiccu munnee thoonrhung
cainhnhaang carucaavuu reinthai thaanee
kurukaam vayiramaang koo'ru :naa'laam
ko'l'lung kizhamaiyaam koa'lae thaanaam
parukaa amuthamaam paalin :neyyaam
pazhaththin irathamaam paaddi'r pa'n'naam
orukaal umaiyaa'loar paaka numaam
u'l:nin'ra :naavi'r kuraiyaadiyaam
karuvaa yulakukku munnae thoan'rung
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
কুৰুকাম্ ৱয়িৰমাঙ কূৰূ ণালাম্
কোল্লুঙ কিলমৈয়াম্ কোলে তানাম্
পৰুকা অমুতমাম্ পালিন্ ণেয়্য়াম্
পলত্তিন্ ইৰতমাম্ পাইটটিৰ্ পণ্নাম্
ওৰুকাল্ উমৈয়ালোৰ্ পাক নূমাম্
উল্ণিন্ৰ ণাৱিৰ্ কুৰৈয়াটিয়াম্
কৰুৱা য়ুলকুক্কু মুন্নে তোন্ৰূঙ
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.