நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி, பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான், கடவூர் உறை உத்தமனாவான்.

குறிப்புரை:

பாலன் - உபமன்னியுமுனிவர் ( வியாக்கிரபாத முனிவருடைய திருமகனார் ). பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து :- ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி.9 திருப்பல்லாண்டு 9). ஈந்து, ஈய்ந்து என்றிரு வடிவும் உண்டு. ஈத்தல் ஈதல் என்னும் இரண்டும் முறையே ஈத்து ஈந்து என்றாய வினை எச்சத்திற்கு அடியான தொழிற் பெயர். ` ஈத்துவக்குமின்பம் ` ( குறள் 228) ` ஈத்தளிக்கவல்லான் ` ( குறள் . 387) ` ஈத்துமொருவுக ` ( தி.4 ப.83 பா.1). ` ஈத்தலும் ஈதலும்போலப் பாத்தலும் பாதலும் ஒன்று ஆதலிற் பாதீடாயிற்று ` என்று ( தொல். புறத். 3. உரையில் ) நச்சினார்க்கினியர் உரைத்தார். அவ்வாறு ` ஈ ` என்னும் முதனிலையும் பகு என்றதன் திரிபாய பா என்பதும் ஒன்றாகா. பகுத்திடுதல், பகுத்தீடு, பாத்தீடு, பாதீடு என்று மருவிய அதனை மருவாத சொல்லொடு கூட்டி ஒன்றெனல் நன்றன்று. ஈதலும் ஈத்தலும் ஒன்று என்றுமட்டும் உரைத்திருக்கலாம். ` அவர் எமக்கு ஈந்தது இவ்வூர் ` ( குறள் 1142) ` ஈத்திரங்கான். ஈத்தொறும் மகிழான், ஈத்தொறுமாவள்ளியன் ` ( பதிற்றுப் பத்து 61) என்பவற்றால், ஈந்தது, ஈத்தது என்ற இரண்டு வடிவும் அறிக. ஈத்தொறும் என்றும் ஈயுந்தொறும் என்றும் வேறுபட வரும். ` கண்மணியனையாற்குக் காட்டுக என்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும். ஈத்த வோலைகொண்டு ... தேயமும் ` ( சிலப் . 2. 13. 76 - 8) என்றதில் ` ஈத்ததும் ` ` ஈத்த ` என்பனவும் ஈந்ததும் ஈந்த என்பனவும் வெவ்வேறே. வலித்தல் மெலித்தல் என்ன இடமின்றி நிற்கின்றன அவை. ` ஈத்த நிறை ` ( கலித்தொகை. 138) ` ஈத்த இம்மா ` ( ? 139 - 140) ` ஈத்த பயம் ` ( ? 59) ` ஈத்தவை ` ( ? 84) ` ஈத்தார் ` ( ? 109) ` ஈத்தை ` ` தருவாய் ` ( ? 86) ` ஈதல் ` ( ? 27 ; 61) ` ஈயும் வண்கையவன் ` பாடலுள் இருத்தல் உணர்க. ` ஈ ` என்னும் முதனிலை வினை ( ? 42) ஈவாய் ( ? 100) என்றிருவடிவும் நல்லிசைப் புலவர் வேறுபாட்டிற்கொள்ளும் வடிவு வேறுபாட்டினை ஆராய்ந்துணர்க. ஈகின்ற, ஈயும், ஈகின்றான் என்பனவற்றிற்கு மற்றதன் வடிவில்லை, இறந்தகாலத்தில் மட்டும் அவ்வடிவம் பயின்றுளது. முனி - மார்க்கண்டர். ஆய்க் காய்ந்த பிரான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాలకడలి నొసగితి చిఱుబాలుడు ఉపమన్యునికై పెను మఱ్ఱి
పలుకొమ్మల నీడ వేదముల సనకాది మునులకుపదేశించితి
శూలము పాశము తాల్చి మార్కండేయుని కొనిపోవచ్చిన
కాలుని కనలి తన్నిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जब उपमन्यु मुनि दूध के लिए रोये तो प्रभु ने क्षीर सागर को ही लाकर उन्हें पिलाया। कल्लाल वृक्ष के नीचे सनकादि मुनियों को वेदार्थ सिखाने वाले हैं। मार्कण्डेय की जान लेने के लिए शूल और रस्सी (मौत का फंदा) लेकर पीछा करते समय उसे दुत्कार कर विनष्ट करने वाले हैं। वे प्रभु कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 4th verse granting the ocean of milk to the lad Upamaṉyu;
initiating the four sages into the meaning of the Vētam-s by sitting under the banyan tree which rose growing thick.
is the master who grew angry with Kālaṉ who came running, pressing round, and following, holding in his hand a trident and a noose, on behalf of the great sage Mārkkaṇṭēyaṉ .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀮𑀷𑀼𑀓𑁆 𑀓𑀸𑀬𑀷𑁆𑀶𑀼 𑀧𑀸𑀶𑁆𑀓𑀝 𑀮𑀻𑀦𑁆𑀢𑀼 𑀧𑀡𑁃𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢
𑀆𑀮𑀺𑀷𑀺𑀶𑁆 𑀓𑀻𑀵𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀸𑀭𑀡 𑀫𑁄𑀢𑀺 𑀬𑀭𑀼𑀫𑀼𑀷𑀺𑀓𑁆𑀓𑀸𑀬𑁆𑀘𑁆
𑀘𑀽𑀮𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀘𑀫𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢𑀝𑀭𑁆𑀦𑁆 𑀢𑁄𑀝𑀺𑀯𑀦𑁆𑀢
𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀧𑀺 𑀭𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পালন়ুক্ কাযণ্ড্রু পার়্‌কড লীন্দু পণৈত্তেৰ়ুন্দ
আলিন়ির়্‌ কীৰ়িরুন্ দারণ মোদি যরুমুন়িক্কায্চ্
সূলমুম্ পাসমুঙ্ কোণ্ডু তোডর্ন্দডর্ন্ দোডিৱন্দ
কালন়ৈক্ কায্ন্দবি রান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
पालऩुक् कायण्ड्रु पाऱ्कड लीन्दु पणैत्तॆऴुन्द
आलिऩिऱ् कीऴिरुन् दारण मोदि यरुमुऩिक्काय्च्
सूलमुम् पासमुङ् कॊण्डु तॊडर्न्दडर्न् दोडिवन्द
कालऩैक् काय्न्दबि राऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಾಲನುಕ್ ಕಾಯಂಡ್ರು ಪಾಱ್ಕಡ ಲೀಂದು ಪಣೈತ್ತೆೞುಂದ
ಆಲಿನಿಱ್ ಕೀೞಿರುನ್ ದಾರಣ ಮೋದಿ ಯರುಮುನಿಕ್ಕಾಯ್ಚ್
ಸೂಲಮುಂ ಪಾಸಮುಙ್ ಕೊಂಡು ತೊಡರ್ಂದಡರ್ನ್ ದೋಡಿವಂದ
ಕಾಲನೈಕ್ ಕಾಯ್ಂದಬಿ ರಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
పాలనుక్ కాయండ్రు పాఱ్కడ లీందు పణైత్తెళుంద
ఆలినిఱ్ కీళిరున్ దారణ మోది యరుమునిక్కాయ్చ్
సూలముం పాసముఙ్ కొండు తొడర్ందడర్న్ దోడివంద
కాలనైక్ కాయ్ందబి రాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාලනුක් කායන්‍රු පාර්කඩ ලීන්දු පණෛත්තෙළුන්ද
ආලිනිර් කීළිරුන් දාරණ මෝදි යරුමුනික්කාය්ච්
සූලමුම් පාසමුඞ් කොණ්ඩු තොඩර්න්දඩර්න් දෝඩිවන්ද
කාලනෛක් කාය්න්දබි රාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
പാലനുക് കായന്‍റു പാറ്കട ലീന്തു പണൈത്തെഴുന്ത
ആലിനിറ് കീഴിരുന്‍ താരണ മോതി യരുമുനിക്കായ്ച്
ചൂലമും പാചമുങ് കൊണ്ടു തൊടര്‍ന്തടര്‍ന്‍ തോടിവന്ത
കാലനൈക് കായ്ന്തപി രാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
ปาละณุก กายะณรุ ปารกะดะ ลีนถุ ปะณายถเถะฬุนถะ
อาลิณิร กีฬิรุน ถาระณะ โมถิ ยะรุมุณิกกายจ
จูละมุม ปาจะมุง โกะณดุ โถะดะรนถะดะรน โถดิวะนถะ
กาละณายก กายนถะปิ ราณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာလနုက္ ကာယန္ရု ပာရ္ကတ လီန္ထု ပနဲထ္ေထ့လုန္ထ
အာလိနိရ္ ကီလိရုန္ ထာရန ေမာထိ ယရုမုနိက္ကာယ္စ္
စူလမုမ္ ပာစမုင္ ေကာ့န္တု ေထာ့တရ္န္ထတရ္န္ ေထာတိဝန္ထ
ကာလနဲက္ ကာယ္န္ထပိ ရာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
パーラヌク・ カーヤニ・ル パーリ・カタ リーニ・トゥ パナイタ・テルニ・タ
アーリニリ・ キーリルニ・ ターラナ モーティ ヤルムニク・カーヤ・シ・
チューラムミ・ パーサムニ・ コニ・トゥ トタリ・ニ・タタリ・ニ・ トーティヴァニ・タ
カーラニイク・ カーヤ・ニ・タピ ラーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
balanug gayandru bargada lindu banaiddelunda
alinir gilirun darana modi yarumuniggayd
sulamuM basamung gondu dodarndadarn dodifanda
galanaig gayndabi rangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
بالَنُكْ كایَنْدْرُ بارْكَدَ لِينْدُ بَنَيْتّيَظُنْدَ
آلِنِرْ كِيظِرُنْ دارَنَ مُوۤدِ یَرُمُنِكّایْتشْ
سُولَمُن باسَمُنغْ كُونْدُ تُودَرْنْدَدَرْنْ دُوۤدِوَنْدَ
كالَنَيْكْ كایْنْدَبِ رانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:lʌn̺ɨk kɑ:ɪ̯ʌn̺d̺ʳɨ pɑ:rkʌ˞ɽə li:n̪d̪ɨ pʌ˞ɳʼʌɪ̯t̪t̪ɛ̝˞ɻɨn̪d̪ʌ
ˀɑ:lɪn̺ɪr ki˞:ɻɪɾɨn̺ t̪ɑ:ɾʌ˞ɳʼə mo:ðɪ· ɪ̯ʌɾɨmʉ̩n̺ɪkkɑ:ɪ̯ʧ
su:lʌmʉ̩m pɑ:sʌmʉ̩ŋ ko̞˞ɳɖɨ t̪o̞˞ɽʌrn̪d̪ʌ˞ɽʌrn̺ t̪o˞:ɽɪʋʌn̪d̪ʌ
kɑ:lʌn̺ʌɪ̯k kɑ:ɪ̯n̪d̪ʌβɪ· rɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
pālaṉuk kāyaṉṟu pāṟkaṭa līntu paṇaitteḻunta
āliṉiṟ kīḻirun tāraṇa mōti yarumuṉikkāyc
cūlamum pācamuṅ koṇṭu toṭarntaṭarn tōṭivanta
kālaṉaik kāyntapi rāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
паалaнюк кaянрю пааткатa линтю пaнaыттэлзюнтa
аалыныт килзырюн таарaнa мооты ярюмюныккaйч
сулaмюм паасaмюнг контю тотaрнтaтaрн тоотывaнтa
кaлaнaык кaйнтaпы раанкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
pahlanuk kahjanru pahrkada lih:nthu pa'näththeshu:ntha
ahlinir kihshi'ru:n thah'ra'na mohthi ja'rumunikkahjch
zuhlamum pahzamung ko'ndu thoda'r:nthada'r:n thohdiwa:ntha
kahlanäk kahj:nthapi 'rahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
paalanòk kaayanrhò paarhkada liinthò panhâiththèlzòntha
aalinirh kii1ziròn thaaranha moothi yaròmònikkaaiyçh
çölamòm paaçamòng konhdò thodarnthadarn thoodivantha
kaalanâik kaaiynthapi raankada vöròrhâi yòththamanèè
paalanuic caayanrhu paarhcata liiinthu panhaiiththelzuintha
aalinirh ciilziruin thaaranha moothi yarumuniiccaayic
chuolamum paaceamung coinhtu thotarinthatarin thootivaintha
caalanaiic caayiinthapi raancata vuururhai yuiththamanee
paalanuk kaayan'ru paa'rkada lee:nthu pa'naiththezhu:ntha
aalini'r keezhiru:n thaara'na moathi yarumunikkaaych
soolamum paasamung ko'ndu thodar:nthadar:n thoadiva:ntha
kaalanaik kaay:nthapi raankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
পালনূক্ কায়ন্ৰূ পাৰ্কত লীণ্তু পণৈত্তেলুণ্ত
আলিনিৰ্ কিলীৰুণ্ তাৰণ মোতি য়ৰুমুনিক্কায়্চ্
চূলমুম্ পাচমুঙ কোণ্টু তোতৰ্ণ্ততৰ্ণ্ তোটিৱণ্ত
কালনৈক্ কায়্ণ্তপি ৰান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.