நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
066 திருநாகேச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.

குறிப்புரை:

கடகரியுரியார் - மதயானைத் தோலுடுத்தவர். கரத்தையுடையது கரி. ஆளர் - ஆள்பவர். படவரவு - படத்தையுடைய பாம்பு. அரவு அரையர் - அரவைக் கட்டிய அரையினர். பாரிடம் - பூதங்கள். குடமுடை முழவம் - `குடமுழா` இது சிற்சில திருக்கோயில்களில் இன்றும் காணப்படும். `கூடுமே குடமுழவம் வீணைதாளம் குறுநடைய சிறு பூதம் முழக்க. மாக்கூத்து ஆடுமே`. (தி.6 ப.4 பா.5). `மாக்கூத்து` - `மகாதாண்டவம்`, `மாநடம்`. கூளிகள் - பேய்கள். பூதங்களும் பாடுவன எனினும், ஈண்டுப் பாரிடம் ஆர்ப்பக் கூளிகள் பாட என்றதால், பேய்களே கொள்ளப்படுவன. பேய்கள் பாடப் பல் பூதங்கள் துதிசெய...... மாநடம் ஆடும் வித்தகனார்`. (தி.2 ப. 102 பா. 7). `பூதகணம் ஆட ஆடும் சொக்கன் காண்` (தி.6 ப. 87 பா. 2) `பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்` (தி.5 ப.29 பா.10)`பயின்ற பல்பூதம் பல்லாயிரங்கொள் கருவி நாடற்கரியதொர் கூத்தும்` (தி.4 ப.2 பா.8) என்பவற்றில், பூதங்கள் பாடலும் ஆடலும் இறைவன் ஆடுங்கால் அன்றிப் பலி கொள்ளுங்காலும் உள்ளமை உணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఏనుగు తోలు వలిపముకాగ నిప్పులుమియు
పెను పరశు చేపూని పామును నడుమున కట్టి
కని భూతములు వాయిద్యముల మ్రోయింప
చనె దెయ్యములు పాడిన నటనమాడి నాగేశ్వరము

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ने गजचर्म को धारण किया। आग उगलने वाले तापयुक्त परषु अस्त्र को धारण किया। सर्प को कमर में बाँध लिया। भूतगणों के साथ अट्टहास करते हुए प्रतिदिन नृत्य करने वाले हैं। वे नागेच्चरम् में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
has a skin of a rutting elephant.
has a fire and battle-axe wears on his waist a cobra with a hood many pūtams join together and play on kutamuḻāvam in a high pitch.
Civaṉ in nākavīccaran is the god who dances without stopping daily, when the pēys sing.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀓𑀭𑀺 𑀬𑀼𑀭𑀺𑀬𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆 𑀓𑀷𑀷𑁆𑀫𑀵𑀼 𑀯𑀸𑀴𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀧𑀝𑀯𑀭 𑀯𑀭𑁃𑀬𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀭𑀺𑀝𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀗𑁆 𑀓𑀽𑀝𑀺𑀓𑁆
𑀓𑀼𑀝𑀫𑀼𑀝𑁃 𑀫𑀼𑀵𑀯 𑀫𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀓𑁆 𑀓𑀽𑀴𑀺𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆
𑀦𑀝𑀦𑀯𑀺 𑀮𑀝𑀺𑀓𑀴𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀓𑀯𑀻𑀘𑁆 𑀘𑀭𑀯 𑀷𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডহরি যুরিযর্ পোলুঙ্ কন়ন়্‌মৰ়ু ৱাৰর্ পোলুম্
পডৱর ৱরৈযর্ পোলুম্ পারিডম্ পলৱুঙ্ কূডিক্
কুডমুডৈ মুৰ়ৱ মার্প্পক্ কূৰিহৰ‍্ পাড নাৰুম্
নডনৱি লডিহৰ‍্ পোলুম্ নাহৱীচ্ চরৱ ন়ারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே 


Open the Thamizhi Section in a New Tab
கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே 

Open the Reformed Script Section in a New Tab
कडहरि युरियर् पोलुङ् कऩऩ्मऴु वाळर् पोलुम्
पडवर वरैयर् पोलुम् पारिडम् पलवुङ् कूडिक्
कुडमुडै मुऴव मार्प्पक् कूळिहळ् पाड नाळुम्
नडनवि लडिहळ् पोलुम् नाहवीच् चरव ऩारे 
Open the Devanagari Section in a New Tab
ಕಡಹರಿ ಯುರಿಯರ್ ಪೋಲುಙ್ ಕನನ್ಮೞು ವಾಳರ್ ಪೋಲುಂ
ಪಡವರ ವರೈಯರ್ ಪೋಲುಂ ಪಾರಿಡಂ ಪಲವುಙ್ ಕೂಡಿಕ್
ಕುಡಮುಡೈ ಮುೞವ ಮಾರ್ಪ್ಪಕ್ ಕೂಳಿಹಳ್ ಪಾಡ ನಾಳುಂ
ನಡನವಿ ಲಡಿಹಳ್ ಪೋಲುಂ ನಾಹವೀಚ್ ಚರವ ನಾರೇ 
Open the Kannada Section in a New Tab
కడహరి యురియర్ పోలుఙ్ కనన్మళు వాళర్ పోలుం
పడవర వరైయర్ పోలుం పారిడం పలవుఙ్ కూడిక్
కుడముడై ముళవ మార్ప్పక్ కూళిహళ్ పాడ నాళుం
నడనవి లడిహళ్ పోలుం నాహవీచ్ చరవ నారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩහරි යුරියර් පෝලුඞ් කනන්මළු වාළර් පෝලුම්
පඩවර වරෛයර් පෝලුම් පාරිඩම් පලවුඞ් කූඩික්
කුඩමුඩෛ මුළව මාර්ප්පක් කූළිහළ් පාඩ නාළුම්
නඩනවි ලඩිහළ් පෝලුම් නාහවීච් චරව නාරේ 


Open the Sinhala Section in a New Tab
കടകരി യുരിയര്‍ പോലുങ് കനന്‍മഴു വാളര്‍ പോലും
പടവര വരൈയര്‍ പോലും പാരിടം പലവുങ് കൂടിക്
കുടമുടൈ മുഴവ മാര്‍പ്പക് കൂളികള്‍ പാട നാളും
നടനവി ലടികള്‍ പോലും നാകവീച് ചരവ നാരേ 
Open the Malayalam Section in a New Tab
กะดะกะริ ยุริยะร โปลุง กะณะณมะฬุ วาละร โปลุม
ปะดะวะระ วะรายยะร โปลุม ปาริดะม ปะละวุง กูดิก
กุดะมุดาย มุฬะวะ มารปปะก กูลิกะล ปาดะ นาลุม
นะดะนะวิ ละดิกะล โปลุม นากะวีจ จะระวะ ณาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတကရိ ယုရိယရ္ ေပာလုင္ ကနန္မလု ဝာလရ္ ေပာလုမ္
ပတဝရ ဝရဲယရ္ ေပာလုမ္ ပာရိတမ္ ပလဝုင္ ကူတိက္
ကုတမုတဲ မုလဝ မာရ္ပ္ပက္ ကူလိကလ္ ပာတ နာလုမ္
နတနဝိ လတိကလ္ ေပာလုမ္ နာကဝီစ္ စရဝ နာေရ 


Open the Burmese Section in a New Tab
カタカリ ユリヤリ・ ポールニ・ カナニ・マル ヴァーラリ・ ポールミ・
パタヴァラ ヴァリイヤリ・ ポールミ・ パーリタミ・ パラヴニ・ クーティク・
クタムタイ ムラヴァ マーリ・ピ・パク・ クーリカリ・ パータ ナールミ・
ナタナヴィ ラティカリ・ ポールミ・ ナーカヴィーシ・ サラヴァ ナーレー 
Open the Japanese Section in a New Tab
gadahari yuriyar bolung gananmalu falar boluM
badafara faraiyar boluM baridaM balafung gudig
gudamudai mulafa marbbag gulihal bada naluM
nadanafi ladihal boluM nahafid darafa nare 
Open the Pinyin Section in a New Tab
كَدَحَرِ یُرِیَرْ بُوۤلُنغْ كَنَنْمَظُ وَاضَرْ بُوۤلُن
بَدَوَرَ وَرَيْیَرْ بُوۤلُن بارِدَن بَلَوُنغْ كُودِكْ
كُدَمُدَيْ مُظَوَ مارْبَّكْ كُوضِحَضْ بادَ ناضُن
نَدَنَوِ لَدِحَضْ بُوۤلُن ناحَوِيتشْ تشَرَوَ ناريَۤ 


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽʌxʌɾɪ· ɪ̯ɨɾɪɪ̯ʌr po:lɨŋ kʌn̺ʌn̺mʌ˞ɻɨ ʋɑ˞:ɭʼʌr po:lɨm
pʌ˞ɽʌʋʌɾə ʋʌɾʌjɪ̯ʌr po:lɨm pɑ:ɾɪ˞ɽʌm pʌlʌʋʉ̩ŋ ku˞:ɽɪk
kʊ˞ɽʌmʉ̩˞ɽʌɪ̯ mʊ˞ɻʌʋə mɑ:rppʌk ku˞:ɭʼɪxʌ˞ɭ pɑ˞:ɽə n̺ɑ˞:ɭʼɨm
n̺ʌ˞ɽʌn̺ʌʋɪ· lʌ˞ɽɪxʌ˞ɭ po:lɨm n̺ɑ:xʌʋi:ʧ ʧʌɾʌʋə n̺ɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
kaṭakari yuriyar pōluṅ kaṉaṉmaḻu vāḷar pōlum
paṭavara varaiyar pōlum pāriṭam palavuṅ kūṭik
kuṭamuṭai muḻava mārppak kūḷikaḷ pāṭa nāḷum
naṭanavi laṭikaḷ pōlum nākavīc carava ṉārē 
Open the Diacritic Section in a New Tab
катaкары ёрыяр поолюнг канaнмaлзю ваалaр поолюм
пaтaвaрa вaрaыяр поолюм паарытaм пaлaвюнг кутык
кютaмютaы мюлзaвa маарппaк кулыкал паатa наалюм
нaтaнaвы лaтыкал поолюм наакавич сaрaвa наарэa 
Open the Russian Section in a New Tab
kadaka'ri ju'rija'r pohlung kananmashu wah'la'r pohlum
padawa'ra wa'räja'r pohlum pah'ridam palawung kuhdik
kudamudä mushawa mah'rppak kuh'lika'l pahda :nah'lum
:nada:nawi ladika'l pohlum :nahkawihch za'rawa nah'reh 
Open the German Section in a New Tab
kadakari yòriyar poolòng kananmalzò vaalhar poolòm
padavara varâiyar poolòm paaridam palavòng ködik
kòdamòtâi mòlzava maarppak kölhikalh paada naalhòm
nadanavi ladikalh poolòm naakaviiçh çarava naarèè 
catacari yuriyar poolung cananmalzu valhar poolum
patavara varaiyar poolum paaritam palavung cuutiic
cutamutai mulzava maarppaic cuulhicalh paata naalhum
natanavi laticalh poolum naacaviic cearava naaree 
kadakari yuriyar poalung kananmazhu vaa'lar poalum
padavara varaiyar poalum paaridam palavung koodik
kudamudai muzhava maarppak koo'lika'l paada :naa'lum
:nada:navi ladika'l poalum :naakaveech sarava naarae 
Open the English Section in a New Tab
কতকৰি য়ুৰিয়ৰ্ পোলুঙ কনন্মলু ৱালৰ্ পোলুম্
পতৱৰ ৱৰৈয়ৰ্ পোলুম্ পাৰিতম্ পলৱুঙ কূটিক্
কুতমুটৈ মুলৱ মাৰ্প্পক্ কূলিকল্ পাত ণালুম্
ণতণৱি লটিকল্ পোলুম্ ণাকৱীচ্ চৰৱ নাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.