மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பதிக வரலாறு : பண் : கௌசிகம்

நான் மறை வாழவந்தவராகிய புகலிவேந்தர் பஞ்சவன் நாட்டுளோர்க்கு நன்னெறி காட்ட வந்தவர் ஆதலின் சின்னங்கள் ஒலிக்க வையையாற்றின் கரையை மருவினார் . பருவ மகளிர் உள்ளம் தம் பதியிடத்தில் விரைந்து செல்லும் ஆறுபோல , அவ்வாறும் தன் பதியான கடலை நோக்கி விரைந்து ஓடுகின்றது . அரசன் , ஆளுடைய பிள்ளையாரையும் அமணரையும் ` ஆற்றில் அவரவர் ஏட்டை விடுக ` என்றான் . அமணர் விட்ட ஏடு ` அத்திநாத்தி ` என்பதைக் கொண்டது . அது இரண்டாவதாயுள்ள நாத்தியை வெள்ளத்தில் காட்டிற்று . அமணர் வெட்கத்துடன் பிள்ளையாரது திருஞானப் பாடலை விடச்சொல்லினர் . தேசுடைப் பிள்ளையார் பாசுரம் பாடலுற்றார் . அதுவே இத்திருப்பதிகம் . இப்பதிகத்துக்குச் சேக்கிழார் பெருமான் விளக்கியருளிய உரைக்குறிப்பே போற்றப்பெறுகிறது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.