இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய பிரமனும் உன்னை அளந்தறிய இயலாதவரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.

குறிப்புரை:

வடம் - ஆலமரம்.
இங்கு ஆலிலையை உணர்த்திற்று. நுடங்கு உள - அசைவுள்ள, தூங்க என்றபடி. இடந்த - பெயர்ந்த. இடை அல்லி - கொப்பூழிடையில். பூத்த - (அகவிதழையுடைய) தாமரையொடு, கிடந்தவன் - திருமால். இருந்தவன் - அம்மலர்மேல் இருந்த பிரமன். புடம் - மறைப்பு. கருள் - இருள். இருள் மறைக்கப்பட்டாற்போல (ஒளிப்பிழம்பாய் இருந்தும் இருவரும் அடிமுடி காணாது) அறியாமையான் மறைக்கப்பட்டார்கள். \\\\\\"கருள்தரு கண்டத்து எம் கயிலையார்\\\\\\" (தி.3 பதி. 109 பா. 4). புடங்கருள் செய்து - புள்தங்க அருள் செய்து எனப்பிரித்துக் கருடப்புள், அன்னப்புள் இரண்டின் மேலும் தங்க அருள்செய்து எனலும் ஆம். பெயரெச்சத்து அகரம் தொக்கது. புள்தங்கு - புட்டங்கு என இரட்டிக்காதது, எதுகை நோக்கிற்றாம். தி.2 பதி.92 பா.1 காண்க. `புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி வட்டஞ்சூழ்ந்தடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே` (தி.2 பதி.92 பா.21), என்பதில், புள் + தன் = புட்டன் என்று புணர்ந்தமையால், இங்கும் புள்தங்கு என்பனவற்றின் புணர்ச்சி எனக்கொள்வதில் தடைஇராது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం వెలసిన ఓ ఈశ్వరా! మర్రిఆకుపై శయనించు [వటపత్రశాయి] విష్ణువు వరాహ రూమమున, ఆతని నాభినుండి ఆవిర్భవించిన తామరనుండి
ఉద్భవించిన బ్రహ్మ హంస రూపమున నిన్ను కొలుచుటకు ఆకాశ, పాతాళ మార్గములకు పయనించి,
ఆ కృత్యము నెరవేరక నిజరూపములతో నీ చెంత నిలువ, ఒక దివ్యజ్యోతిరూపమును దాల్చి, వారి ముంగిట నిలిచి, వారు నీకు వందనమొసగు విధమున దర్శనమిచ్చి,
సృష్టి కార్యమును, దానిని రక్షించు కర్తవ్యమును వారలకొసగి వారిని అనుగ్రహించి, అదృశ్యమైపోయితివి.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම සමිඳුනි‚ නුග පත හොවනා වෙණු ද කමල මත බඹු ද වෙහෙසී ඔබ අග මුල සොයනට වූයේ‚ යළි සරණ ගිය දෙදෙනට ගුරුළා ද හංසයා ද වාහනය කර ගන්නට සලසා ලොව මැවීමත් රැකීමත් දෙදෙනට පැවරූ අප දෙව් සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who was lying in the lotus which blossomed in the navel and was moving and shaking to make with the leaf of the banyan tree to be torn (Māl).
and the one who was seated on that lotus flower could not comprehend by measuring to make then bow before you after stretching their bodies straight following you, you vanished from them by your veiling power by making their vision dark
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀝𑀗𑁆𑀓𑁂𑁆𑀝 𑀦𑀼𑀝𑀗𑁆𑀓𑀼𑀡 𑀯𑀺𑀝𑀦𑁆𑀢𑀯𑀺𑀝𑁃 𑀬𑀮𑁆𑀮𑀺𑀓𑁆
𑀓𑀺𑀝𑀦𑁆𑀢𑀯 𑀷𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀯 𑀷𑀴𑀦𑁆𑀢𑀼𑀡𑀭 𑀮𑀸𑀓𑀸𑀭𑁆
𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢𑀯 𑀭𑀼𑀝𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀧𑁆
𑀧𑀼𑀝𑀗𑁆𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫 𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱডঙ্গেড নুডঙ্গুণ ৱিডন্দৱিডৈ যল্লিক্
কিডন্দৱ ন়িরুন্দৱ ন়ৰন্দুণর লাহার্
তোডর্ন্দৱ রুডম্বোডু নিমির্ন্দুডন়্‌ ৱণঙ্গপ্
পুডঙ্গরুৰ‍্সেয্ তোণ্ড্রিন়ৈ পুর়ম্বযম মর্ন্দোয্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய்


Open the Thamizhi Section in a New Tab
வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய்

Open the Reformed Script Section in a New Tab
वडङ्गॆड नुडङ्गुण विडन्दविडै यल्लिक्
किडन्दव ऩिरुन्दव ऩळन्दुणर लाहार्
तॊडर्न्दव रुडम्बॊडु निमिर्न्दुडऩ् वणङ्गप्
पुडङ्गरुळ्सॆय् तॊण्ड्रिऩै पुऱम्बयम मर्न्दोय्

Open the Devanagari Section in a New Tab
ವಡಂಗೆಡ ನುಡಂಗುಣ ವಿಡಂದವಿಡೈ ಯಲ್ಲಿಕ್
ಕಿಡಂದವ ನಿರುಂದವ ನಳಂದುಣರ ಲಾಹಾರ್
ತೊಡರ್ಂದವ ರುಡಂಬೊಡು ನಿಮಿರ್ಂದುಡನ್ ವಣಂಗಪ್
ಪುಡಂಗರುಳ್ಸೆಯ್ ತೊಂಡ್ರಿನೈ ಪುಱಂಬಯಮ ಮರ್ಂದೋಯ್

Open the Kannada Section in a New Tab
వడంగెడ నుడంగుణ విడందవిడై యల్లిక్
కిడందవ నిరుందవ నళందుణర లాహార్
తొడర్ందవ రుడంబొడు నిమిర్ందుడన్ వణంగప్
పుడంగరుళ్సెయ్ తొండ్రినై పుఱంబయమ మర్ందోయ్

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වඩංගෙඩ නුඩංගුණ විඩන්දවිඩෛ යල්ලික්
කිඩන්දව නිරුන්දව නළන්දුණර ලාහාර්
තොඩර්න්දව රුඩම්බොඩු නිමිර්න්දුඩන් වණංගප්
පුඩංගරුළ්සෙය් තොන්‍රිනෛ පුරම්බයම මර්න්දෝය්


Open the Sinhala Section in a New Tab
വടങ്കെട നുടങ്കുണ വിടന്തവിടൈ യല്ലിക്
കിടന്തവ നിരുന്തവ നളന്തുണര ലാകാര്‍
തൊടര്‍ന്തവ രുടംപൊടു നിമിര്‍ന്തുടന്‍ വണങ്കപ്
പുടങ്കരുള്‍ചെയ് തൊന്‍റിനൈ പുറംപയമ മര്‍ന്തോയ്

Open the Malayalam Section in a New Tab
วะดะงเกะดะ นุดะงกุณะ วิดะนถะวิดาย ยะลลิก
กิดะนถะวะ ณิรุนถะวะ ณะละนถุณะระ ลาการ
โถะดะรนถะวะ รุดะมโปะดุ นิมิรนถุดะณ วะณะงกะป
ปุดะงกะรุลเจะย โถะณริณาย ปุระมปะยะมะ มะรนโถย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝတင္ေက့တ နုတင္ကုန ဝိတန္ထဝိတဲ ယလ္လိက္
ကိတန္ထဝ နိရုန္ထဝ နလန္ထုနရ လာကာရ္
ေထာ့တရ္န္ထဝ ရုတမ္ေပာ့တု နိမိရ္န္ထုတန္ ဝနင္ကပ္
ပုတင္ကရုလ္ေစ့ယ္ ေထာ့န္ရိနဲ ပုရမ္ပယမ မရ္န္ေထာယ္


Open the Burmese Section in a New Tab
ヴァタニ・ケタ ヌタニ・クナ ヴィタニ・タヴィタイ ヤリ・リク・
キタニ・タヴァ ニルニ・タヴァ ナラニ・トゥナラ ラーカーリ・
トタリ・ニ・タヴァ ルタミ・ポトゥ ニミリ・ニ・トゥタニ・ ヴァナニ・カピ・
プタニ・カルリ・セヤ・ トニ・リニイ プラミ・パヤマ マリ・ニ・トーヤ・

Open the Japanese Section in a New Tab
fadanggeda nudangguna fidandafidai yallig
gidandafa nirundafa nalandunara lahar
dodarndafa rudaMbodu nimirndudan fananggab
budanggarulsey dondrinai buraMbayama marndoy

Open the Pinyin Section in a New Tab
وَدَنغْغيَدَ نُدَنغْغُنَ وِدَنْدَوِدَيْ یَلِّكْ
كِدَنْدَوَ نِرُنْدَوَ نَضَنْدُنَرَ لاحارْ
تُودَرْنْدَوَ رُدَنبُودُ نِمِرْنْدُدَنْ وَنَنغْغَبْ
بُدَنغْغَرُضْسيَیْ تُونْدْرِنَيْ بُرَنبَیَمَ مَرْنْدُوۤیْ



Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɽʌŋgɛ̝˞ɽə n̺ɨ˞ɽʌŋgɨ˞ɳʼə ʋɪ˞ɽʌn̪d̪ʌʋɪ˞ɽʌɪ̯ ɪ̯ʌllɪk
kɪ˞ɽʌn̪d̪ʌʋə n̺ɪɾɨn̪d̪ʌʋə n̺ʌ˞ɭʼʌn̪d̪ɨ˞ɳʼʌɾə lɑ:xɑ:r
t̪o̞˞ɽʌrn̪d̪ʌʋə rʊ˞ɽʌmbo̞˞ɽɨ n̺ɪmɪrn̪d̪ɨ˞ɽʌn̺ ʋʌ˞ɳʼʌŋgʌp
pʊ˞ɽʌŋgʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ t̪o̞n̺d̺ʳɪn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌmə mʌrn̪d̪o:ɪ̯

Open the IPA Section in a New Tab
vaṭaṅkeṭa nuṭaṅkuṇa viṭantaviṭai yallik
kiṭantava ṉiruntava ṉaḷantuṇara lākār
toṭarntava ruṭampoṭu nimirntuṭaṉ vaṇaṅkap
puṭaṅkaruḷcey toṉṟiṉai puṟampayama marntōy

Open the Diacritic Section in a New Tab
вaтaнгкэтa нютaнгкюнa вытaнтaвытaы яллык
кытaнтaвa нырюнтaвa нaлaнтюнaрa лаакaр
тотaрнтaвa рютaмпотю нымырнтютaн вaнaнгкап
пютaнгкарюлсэй тонрынaы пюрaмпaямa мaрнтоой

Open the Russian Section in a New Tab
wadangkeda :nudangku'na wida:nthawidä jallik
kida:nthawa ni'ru:nthawa na'la:nthu'na'ra lahkah'r
thoda'r:nthawa 'rudampodu :nimi'r:nthudan wa'nangkap
pudangka'ru'lzej thonrinä purampajama ma'r:nthohj

Open the German Section in a New Tab
vadangkèda nòdangkònha vidanthavitâi yallik
kidanthava nirònthava nalhanthònhara laakaar
thodarnthava ròdampodò nimirnthòdan vanhangkap
pòdangkaròlhçèiy thonrhinâi pòrhampayama marnthooiy
vatangketa nutangcunha vitainthavitai yalliic
citainthava niruinthava nalhainthunhara laacaar
thotarinthava rutampotu nimirinthutan vanhangcap
putangcarulhceyi thonrhinai purhampayama marinthooyi
vadangkeda :nudangku'na vida:nthavidai yallik
kida:nthava niru:nthava na'la:nthu'nara laakaar
thodar:nthava rudampodu :nimir:nthudan va'nangkap
pudangkaru'lsey thon'rinai pu'rampayama mar:nthoay

Open the English Section in a New Tab
ৱতঙকেত ণূতঙকুণ ৱিতণ্তৱিটৈ য়ল্লিক্
কিতণ্তৱ নিৰুণ্তৱ নলণ্তুণৰ লাকাৰ্
তোতৰ্ণ্তৱ ৰুতম্পোটু ণিমিৰ্ণ্তুতন্ ৱণঙকপ্
পুতঙকৰুল্চেয়্ তোন্ৰিনৈ পুৰম্পয়ম মৰ্ণ্তোয়্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.