எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8

நாயிற் கடையாம் நாயேனை
    நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
    வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
    என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
    கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணையுடைய பெருமானே! நாயினும் கீழான, அடியேனை விரும்பி, நீயே அடிமை கொண்டாய். மாயா காரியமான இப்பிறப்பை உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி ஆராயும் தன்மை நானோ உடையேன்? இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை; ஆதலால் என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய். உன்னுடைய திருவடி நீழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய். அஃது உன் விருப்பம்.

குறிப்புரை :

நயந்து - விரும்பி. `நீயே நயந்து முன்பு என்னை ஆட்கொண்டாய்; அதனால், இன்றும் நீ என்னைப் பிறப்பில் விடினும் விடுவாய்; உன் திருவடிநிழலில் இருத்தினும் இருத்துவாய்; ஆதலின், உடம்பையும் உனக்குரியதாகவே வைத்து நான் வாளா இருப்பதன்றி, என்னை என்னசெய்தல் வேண்டும் என்று ஆராய்ந்து முடிவு செய்தற்கு உரியவன் நான்தானோ? அதிகாரம் இங்கு என்னதோ? உன் விருப்பப் படி செய்தருள்` என்க. `உன் விருப்பப்படி செய்தருள்` என்பது குறிப்பெச்சம்.
மாயப் பிறவி - நிலையில்லாத உடம்பு. ஓகாரம் வினாப் பொருளிலும், தான் பிரிநிலை ஏகாரப் பொருளிலும் வந்தன. அதிகாரம் - தலைமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
నుదుట నేత్రముగల ఓ పరమేశ్వరా! శునకముకంటే హీనమైన, ఈ సేవకుడ్ని ఇష్టపడి, నీకుగ నీవే నన్ను నీ బానిసగ చేసుకుంటివి. నీయొక్క మాయ కార్యమనబడు, నా ఈ జన్మను నీయందే సమర్పించి, నీయొక్క ఆజ్జానుసారము నడుచుకొనక, నీయొక్క ఈ సృష్టిపై పరిశోధనజేయు స్వభావము నాకు గలదా!? ఈ విశ్వమందలి అధికారము నాకు చెందినదా ఏమి!? కాదు! కాదు! అందువలన, నన్ను , నీవు, ఈ శరీరమందుంచిననూ ఉంచెదవు. నీయొక్క దివ్యచరణారవిందముల క్రింద, వాని నీడన, చేర్చిననూ చేర్చుతావు. అదియంతయూ నీయొక్క అభీష్టము ప్రకారమే జరుగును.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಹಣಿಗಣ್ಣುಳ್ಳ ಪರಮಾತ್ಮನೇ ! ನಾಯಿಗಿಂತ ಕೀಳಾದ ಭಕ್ತನನ್ನು ನೀನೇ ಬಯಸಿ ಆಳ್ಗೊಂಡೆ. ಮಾಯಗಾತಿಯಾದ ಈ ಹುಟ್ಟನ್ನು ನಿನಗೇ ಒಪ್ಪಿಸಿ ನಿನ್ನ ಆಜ್ಞೆಯಂತೆ ನಡೆಯುವುದಲ್ಲದೆ ಬೇರೆ ಏನನ್ನು ತಾನೇ ನಾನರಿತಿಹೆನು? ಇಲ್ಲಿ ನನ್ನ ಅಧಿಕಾರವೇನಿದೆ? ಏನೂ ಇಲ್ಲ. ಹಾಗಾಗಿ ನನ್ನನ್ನು ನೀನು ಈ ದೇಹದಲ್ಲಿ ಇಟ್ಟರೂ ಇಡುವೆ. ನಿನ್ನ ಪಾದಗಳ ನೆರಳಿನಲ್ಲಿ ಸೇರಿಸಿಕೊಂಡರೂ ಸೇರಿಸಿಕೊಳ್ಳುವೆ. ಅವೆಲ್ಲಾ ನಿನ್ನ ಇಚ್ಛೆ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

നായിനും കേടുകെ നായാം എില്‍
നയമാര്‍ു നീയായിവ ൈആള്‍ക്കൊതല്ലേ
മായാ ജന്മമിതിനെ നിന്‍വശം
വച്ചിങ്ങിരിക്കുന്‍േ അല്ലാ അതിനെ
ആയുമാറുള്ളോന്‍ ഞാനോ ? അതില്‍
എന്തെനിക്കധികാരം ഇവിടെ ?
കായുമാറാക്കുമോ അല്ലാ നിന്‍
കഴല്‍ കീഴിലാക്കുമോ എ െനീ കനുതലാനേ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බල්ලකුට ද වඩා නීච බල්ලකු වන මාහට,
කැමැත්තෙන්ම ඔබ පිළිසරණ වූවෙහි,
මායා උපත ඔබ අතේමය,
රඳවා ගෙන සිටින්නේ, ඒ ගැන
සොයා බැලීමේ හැකියාවක් මට නැත
කොහෙන්ද මෙහි බලයක්
සිරුරෙන් පිටවුවත්, ඔබ ගේ
සිරි පා කමල යට තබනු මැන තිනෙත්ධාරියනි - 08

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Yang Mulia, oleh kerana kasih sayangMu terhadapku,
Dengan sukarela, menyelamatkanku dan menerimaku sebagai penggemarMu,
Dan telah pun merestuiku, yang dirinya lebih terhina daripada si-anjing!
Selain menyerahkan kehidupanku, yang tidak kekal, kepada Yang Mulia.
Dapatkah ku menganalisis kehidupanku?
Adakah ku perolehi kuasa untuk membuat demikian?
Yang bermata di dahiNya, yang dapat
Membiarkanku menginapi badan ini, atau pun
Meletakku dibawah KakiMu, yang dihiasi rantai!
Segala itu berlaku mengikut perintahMu!

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
ललाट पर चक्षुधारी।
इस निकृश्ट दास को तुमने ही पसंद करके अपनाया।
जन्म बन्धन के चक्र को अपने अधिकार में लेकर जो चाहे करो,
इसके सिवा इसमें छानबीन करने के लिए क्या रखा है?
इसमें मेरा क्या अधिकार है?
मुझे प्रेयस् भी दे सकते हो। चाहो
तो तुम मुझे श्रेयस भी देकर अपने श्रीचरण का
आश्रय भी दे सकते हो।
यह तुम्हारी इच्छा पर निर्भर है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
श्वानादधमं श्वानं मां कृपया त्वं स्वयं अन्वगृहणाः।
मायाग्रस्तं इदं जन्म त्वयि निक्षिप्तम्। तव चित्तं
परीक्षितुं न शक्नोमि। अस्मिन् मम अधिकारो नास्ति।
शरीरे मां प्रवेशय अथवा तव चरणे स्थापय, हे फालनेत्र।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Mich, der ich verkommener bin
Als ein armes, geringes Tier,
hast aus eigenem Antrieb
Du in den Dienst genommen!
Es steht in deiner Gewalt
Das trügerische, Schlimme
Geborenwerdenmüssen;
Darüber zu bestimmen,
Steht mir, o Šiva, nicht zu!
Hab’ ich irgendwelche macht hier?
Wirst du einen neuen Körper
Mir geben, o mein Gebieter?
Wirst du, o Stirnäugiger,
Mich aufnehmen bei deinem Fuß?

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
You Yourself,
in love,
redeemed and ruled me – The basest among dogs.
I should merely place In Your charge my illusive,
embodied life.
Am I competent to reason out things?
O One who sports an eye in the forehead !
You may Confer on me embodiment or keep me Under Your ankleted feet.
Your will prevails.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నాయిఱ్ గఢైయాం నాయేనై
నయన్తు నీయే ఆఢ్గొణ్ఢాయ్
మాయభ్ భిఱవి ఉన్వచమే
వైత్తిఢ్ ఢిరుగ్గుం అతువన్ఱి
ఆయగ్ గఢవేన్ నానోతాన్
ఎన్న తోఇఙ్ గతిగారం
గాయత్ తిఢువాయ్ ఉన్నుఢైయ
గళఱ్గీళ్ వైభ్భాయ్ గణ్ణుతలే. 
ನಾಯಿಱ್ ಗಢೈಯಾಂ ನಾಯೇನೈ
ನಯನ್ತು ನೀಯೇ ಆಢ್ಗೊಣ್ಢಾಯ್
ಮಾಯಭ್ ಭಿಱವಿ ಉನ್ವಚಮೇ
ವೈತ್ತಿಢ್ ಢಿರುಗ್ಗುಂ ಅತುವನ್ಱಿ
ಆಯಗ್ ಗಢವೇನ್ ನಾನೋತಾನ್
ಎನ್ನ ತೋಇಙ್ ಗತಿಗಾರಂ
ಗಾಯತ್ ತಿಢುವಾಯ್ ಉನ್ನುಢೈಯ
ಗೞಱ್ಗೀೞ್ ವೈಭ್ಭಾಯ್ ಗಣ್ಣುತಲೇ. 
നായിറ് ഗഢൈയാം നായേനൈ
നയന്തു നീയേ ആഢ്ഗൊണ്ഢായ്
മായഭ് ഭിറവി ഉന്വചമേ
വൈത്തിഢ് ഢിരുഗ്ഗും അതുവന്റി
ആയഗ് ഗഢവേന് നാനോതാന്
എന്ന തോഇങ് ഗതിഗാരം
ഗായത് തിഢുവായ് ഉന്നുഢൈയ
ഗഴറ്ഗീഴ് വൈഭ്ഭായ് ഗണ്ണുതലേ. 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නායිරං. කටෛයාමං නායේනෛ.
නයනංතු නීයේ කටංකොණංටායං
මායපං පිර.වි උනං.වචමේ
වෛතංතිටං ටිරුකංකුමං අතුවනං.රි.
කයකං කටවේනං. නානෝ.තානං.
එනං.න. තෝඉඞං කතිකාරමං
කායතං තිටුවායං උනං.නු.ටෛය
කළ.රං.කීළං. වෛපංපායං කණංණුතලේ. 
नायिऱ् कटैयाम् नायेऩै
नयन्तु नीये आट्कॊण्टाय्
मायप् पिऱवि उऩ्वचमे
वैत्तिट् टिरुक्कुम् अतुवऩ्ऱि
आयक् कटवेऩ् नाऩोताऩ्
ऎऩ्ऩ तोइङ् कतिकारम्
कायत् तिटुवाय् उऩ्ऩुटैय
कऴऱ्कीऴ् वैप्पाय् कण्णुतले. 
نيياينا مياديكا ريينا
ianeayaan: maayiadak r'iyaan:
يدان'ودا يايني تهنينا
yaadn'okdaa eayeen: uhtn:ayan:
مايسفانأ فيرابي بيما
eamasavnu ivar'ip payaam
رينفاتها مككردي دتهيتهفي
ir'navuhta mukkurid dihthtiav
نتهانانا نفايداكا كيا
naahtaonaan: neavadak kayaa
مراكاتهيكا نقيتها نني
maraakihtak gniaoht anne
يديننأ يفادتهي تهيكا
ayiadunnu yaavudiht htayaak
.لايتهان'ن'كا يبابفي زهكيرزهاكا
.ealahtun'n'ak yaappiav hzeekr'ahzak
นายิร กะดายยาม นาเยณาย
นะยะนถุ นีเย อาดโกะณดาย
มายะป ปิระวิ อุณวะจะเม
วายถถิด ดิรุกกุม อถุวะณริ
อายะก กะดะเวณ นาโณถาณ
เอะณณะ โถอิง กะถิการะม
กายะถ ถิดุวาย อุณณุดายยะ
กะฬะรกีฬ วายปปาย กะณณุถะเล. 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာယိရ္ ကတဲယာမ္ နာေယနဲ
နယန္ထု နီေယ အာတ္ေကာ့န္တာယ္
မာယပ္ ပိရဝိ အုန္ဝစေမ
ဝဲထ္ထိတ္ တိရုက္ကုမ္ အထုဝန္ရိ
အာယက္ ကတေဝန္ နာေနာထာန္
ေအ့န္န ေထာအိင္ ကထိကာရမ္
ကာယထ္ ထိတုဝာယ္ အုန္နုတဲယ
ကလရ္ကီလ္ ဝဲပ္ပာယ္ ကန္နုထေလ. 
ナーヤリ・ カタイヤーミ・ ナーヤエニイ
ナヤニ・トゥ ニーヤエ アータ・コニ・ターヤ・
マーヤピ・ ピラヴィ ウニ・ヴァサメー
ヴイタ・ティタ・ ティルク・クミ・ アトゥヴァニ・リ
アーヤク・ カタヴェーニ・ ナーノーターニ・
エニ・ナ トーイニ・ カティカーラミ・
カーヤタ・ ティトゥヴァーヤ・ ウニ・ヌタイヤ
カラリ・キーリ・ ヴイピ・パーヤ・ カニ・ヌタレー. 
наайыт катaыяaм нааеaнaы
нaянтю ниеa аатконтаай
мааяп пырaвы юнвaсaмэa
вaыттыт тырюккюм атювaнры
ааяк катaвэaн нааноотаан
эннa тооынг катыкaрaм
кaят тытюваай юннютaыя
калзaткилз вaыппаай каннютaлэa. 
:nahjir kadäjahm :nahjehnä
:naja:nthu :nihjeh ahdko'ndahj
mahjap pirawi unwazameh
wäththid di'rukkum athuwanri
ahjak kadawehn :nahnohthahn
enna thohing kathikah'ram
kahjath thiduwahj unnudäja
kasharkihsh wäppahj ka'n'nuthaleh. 
nāyiṟ kaṭaiyām nāyēṉai
nayantu nīyē āṭkoṇṭāy
māyap piṟavi uṉvacamē
vaittiṭ ṭirukkum atuvaṉṟi
āyak kaṭavēṉ nāṉōtāṉ
eṉṉa tōiṅ katikāram
kāyat tiṭuvāy uṉṉuṭaiya
kaḻaṟkīḻ vaippāy kaṇṇutalē. 
:naayi'r kadaiyaam :naayaenai
:naya:nthu :neeyae aadko'ndaay
maayap pi'ravi unvasamae
vaiththid dirukkum athuvan'ri
aayak kadavaen :naanoathaan
enna thoaing kathikaaram
kaayath thiduvaay unnudaiya
kazha'rkeezh vaippaay ka'n'nuthalae. 
சிற்பி