எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு :

ஆத்தும நிவேதனம்
பெரிதும் பணிந்த மொழிகளால் இறைவன் திருவுள்ளத்தைக் குழைவித்த பத்துப் பாடல்களின் தொகுதி குழைத்த பத்து. அம்மொழி களாவன, தம் சுதந்திரம் இன்மையைப் பலவாற்றானும் எடுத்துக் கூறும் சொற்கள். இப்பொருள் பற்றியே இதற்கு, `ஆத்தும நிவேதனம்` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆத்தும நிவேதனம் - `யான்` என்று எழும் சீவபோதத்தை இறைவனுக்கு உணவாகக் கொடுத்தல். இறைவன் சீவபோதத்தை உண்ணுதலாவது, அதனை விழுங்குதல்; அஃதாவது அருட்போதத்துள் அடக்கிக்கொள்ளுதல். வாயிலார் நாயனார் தமது மனவழிபாட்டில் தமது ஆன்ம போதத்தைப் பாகம் பண்ணியதனால் ஆகிய அன்பையே இறைவனுக்குத் திருவமுதாக நிவேதித்தார் என்க. இஃது அந்தாதியாய் முதலிலும், முடிவிலும், `குழைத்தல்` என்னும் சொல்லைப்பெற்று விளங்குதலின், அச்சொற் பற்றியும், `குழைத்த பத்து` எனப் பெயர்பெற்றது. இது, திருப்பெருந் துறையில் அருளிச்செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப் படுவது. இப்பகுதி முழுவதும், அறுசீரடி விருத்தத்தால் ஆயது.

சிற்பி