ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 7

மாதா பிதாவாகி மக்க ளாகி
    மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
    கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
    புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
    அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினை வார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிற முடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` மக்கள் ` என்றது முறைப்பெயர். ` கடல் ` என்றது அதன்கண் உள்ள நீரை ; அது, ` மறிகடல் ` என்பதனாற் பெறப்பட்டது. ` விசும்பு ` என்றது, அதன் குணமாகிய ஓசையைக் குறித்தது. ` கோதாவரி, குமரி ` என்றனவும் அவற்றது நீரையே, ` குழகனாகி, புனிதனாகி, எளிதேயாகி ` என்னும் எச்சங்கள், ` வண்ணர் ` என்பதில் தொக்குநின்ற ` ஆயவர் ` என்பதனோடு முடியும். ` குழகன், புனிதன் ` என்பன, பன்மை ஒருமை மயக்கம். ` எளிது ` என்றது, ` எளிய பொருள் ` என்னும் பொருளது. ` யாதானும் ` என்புழி, ` ஆக ` என்பது வருவிக்க. ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார் என்றபடி. சுவாமிகள், தம்மைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்தியபொழுது, ` எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை ` என நினைந்து பாடினமையைப் பெரிய புராணத்துட் காண்க. அழல் வண்ண வண்ணர் - நெருப்பினது நிறம்போலும் நிறம் உடையவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु तुम ही माता-पिता, जन, समुद्र, आकाष, गोदावरी, कन्याकुमारी स्वरूप हो। तुम व्याघ्रचर्मधारी हो। प्रभु तुम पुष्पांजलि देकर स्तुति करने वाले भक्तों के जन्म बन्धन काटने वाले पुनीत प्रभु हो। प्रभु तुम भक्तों के हितैषी हो। प्रभु तुम ज्योति वर्णवाले हो। प्रभु तुम सर्वगुण सम्पन्न षाष्वत मूर्ति हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As mother,
father and children,
As billowy sea and vast expanse of sky,
As the Godavari and the Kanyakumari,
as the comely One Clad in the tiger- skin,
as the holy One that does away With embodiment of those that hail and adore Him With full- blown blossoms,
as One easy of access To those that think thus: ``Let it be as He wills!
`` He,
whose hue is flame- like,
abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మాతా భితావాగి మగ్గ ళాగి
మఱిగఢలుం మాల్విచుంభున్ తానే యాగిగ్
గోతా విరియాయ్గ్ గుమరి యాగిగ్
గొల్భులిత్తో లాఢైగ్ గుళగ నాగిభ్
భోతాయ మలర్గొణ్ఢు భోఱ్ఱి నినౄ
భునైవార్ భిఱభ్భఱుగ్గుం భునిత నాగి
యాతాను మెననినైన్తార్గ్ గెళితే యాగి
అళల్ వణ్ణ వణ్ణర్తాం నిన్ఱ వాఱే.
ಮಾತಾ ಭಿತಾವಾಗಿ ಮಗ್ಗ ಳಾಗಿ
ಮಱಿಗಢಲುಂ ಮಾಲ್ವಿಚುಂಭುನ್ ತಾನೇ ಯಾಗಿಗ್
ಗೋತಾ ವಿರಿಯಾಯ್ಗ್ ಗುಮರಿ ಯಾಗಿಗ್
ಗೊಲ್ಭುಲಿತ್ತೋ ಲಾಢೈಗ್ ಗುೞಗ ನಾಗಿಭ್
ಭೋತಾಯ ಮಲರ್ಗೊಣ್ಢು ಭೋಱ್ಱಿ ನಿನೄ
ಭುನೈವಾರ್ ಭಿಱಭ್ಭಱುಗ್ಗುಂ ಭುನಿತ ನಾಗಿ
ಯಾತಾನು ಮೆನನಿನೈನ್ತಾರ್ಗ್ ಗೆಳಿತೇ ಯಾಗಿ
ಅೞಲ್ ವಣ್ಣ ವಣ್ಣರ್ತಾಂ ನಿನ್ಱ ವಾಱೇ.
മാതാ ഭിതാവാഗി മഗ്ഗ ളാഗി
മറിഗഢലും മാല്വിചുംഭുന് താനേ യാഗിഗ്
ഗോതാ വിരിയായ്ഗ് ഗുമരി യാഗിഗ്
ഗൊല്ഭുലിത്തോ ലാഢൈഗ് ഗുഴഗ നാഗിഭ്
ഭോതായ മലര്ഗൊണ്ഢു ഭോറ്റി നിന്റു
ഭുനൈവാര് ഭിറഭ്ഭറുഗ്ഗും ഭുനിത നാഗി
യാതാനു മെനനിനൈന്താര്ഗ് ഗെളിതേ യാഗി
അഴല് വണ്ണ വണ്ണര്താം നിന്റ വാറേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාතා පිතාවාකි මකංක ළාකි
මරි.කටලුමං මාලංවිචුමංපුනං තානේ. යාකිකං
කෝතා විරියායංකං කුමරි යාකිකං
කොලංපුලිතංතෝ ලාටෛකං කුළ.ක නා.කිපං
පෝතාය මලරංකොණංටු පෝරං.රි. නිනං.රු.
පුනෛ.වාරං පිර.පංපරු.කංකුමං පුනි.ත නා.කි
යාතානු. මෙන.නිනෛ.නංතාරංකං තෙළිතේ යාකි
අළ.ලං වණංණ වණංණරංතාමං නිනං.ර. වාරේ..
माता पितावाकि मक्क ळाकि
मऱिकटलुम् माल्विचुम्पुन् ताऩे याकिक्
कोता विरियाय्क् कुमरि याकिक्
कॊल्पुलित्तो लाटैक् कुऴक ऩाकिप्
पोताय मलर्कॊण्टु पोऱ्ऱि निऩ्ऱु
पुऩैवार् पिऱप्पऱुक्कुम् पुऩित ऩाकि
याताऩु मॆऩनिऩैन्तार्क् कॆळिते याकि
अऴल् वण्ण वण्णर्ताम् निऩ्ऱ वाऱे.
كيلا كاكما كيفاتهابي تهاما
ikaal' akkam ikaavaahtip aahtaam
ككييا نايتها نبمسفيلما ملداكاريما
kikaay eanaaht n:upmusivlaam muladakir'am
ككييا ريماك كيياريفي تهاكو
kikaay iramuk kyaayiriv aahtaok
بكينا كازهاك كديلا تهاتهليبلو
pikaan akahzuk kiadaal aohthtiluplok
رنني ريربا دن'ورلاما يتهابا
ur'nin: ir'r'aop udn'okralam ayaahtaop
كينا تهانيب مككرببرابي رفانيب
ikaan ahtinup mukkur'appar'ip raavianup
كييا تهايليكي كرتهاننينينمي نتهايا
ikaay eahtil'ek kraahtn:ianin:anem unaahtaay
.رايفا رانني متهارن'ن'فا ن'ن'فا لزهاا
.ear'aav ar'nin: maahtran'n'av an'n'av lahza
มาถา ปิถาวากิ มะกกะ ลากิ
มะริกะดะลุม มาลวิจุมปุน ถาเณ ยากิก
โกถา วิริยายก กุมะริ ยากิก
โกะลปุลิถโถ ลาดายก กุฬะกะ ณากิป
โปถายะ มะละรโกะณดุ โปรริ นิณรุ
ปุณายวาร ปิระปปะรุกกุม ปุณิถะ ณากิ
ยาถาณุ เมะณะนิณายนถารก เกะลิเถ ยากิ
อฬะล วะณณะ วะณณะรถาม นิณระ วาเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာထာ ပိထာဝာကိ မက္က လာကိ
မရိကတလုမ္ မာလ္ဝိစုမ္ပုန္ ထာေန ယာကိက္
ေကာထာ ဝိရိယာယ္က္ ကုမရိ ယာကိက္
ေကာ့လ္ပုလိထ္ေထာ လာတဲက္ ကုလက နာကိပ္
ေပာထာယ မလရ္ေကာ့န္တု ေပာရ္ရိ နိန္ရု
ပုနဲဝာရ္ ပိရပ္ပရုက္ကုမ္ ပုနိထ နာကိ
ယာထာနု ေမ့နနိနဲန္ထာရ္က္ ေက့လိေထ ယာကိ
အလလ္ ဝန္န ဝန္နရ္ထာမ္ နိန္ရ ဝာေရ.
マーター ピターヴァーキ マク・カ ラアキ
マリカタルミ・ マーリ・ヴィチュミ・プニ・ ターネー ヤーキク・
コーター ヴィリヤーヤ・ク・ クマリ ヤーキク・
コリ・プリタ・トー ラータイク・ クラカ ナーキピ・
ポーターヤ マラリ・コニ・トゥ ポーリ・リ ニニ・ル
プニイヴァーリ・ ピラピ・パルク・クミ・ プニタ ナーキ
ヤーターヌ メナニニイニ・ターリ・ク・ ケリテー ヤーキ
アラリ・ ヴァニ・ナ ヴァニ・ナリ・ターミ・ ニニ・ラ ヴァーレー.
маатаа пытааваакы мaкка лаакы
мaрыкатaлюм маалвысюмпюн таанэa яaкык
коотаа вырыяaйк кюмaры яaкык
колпюлыттоо лаатaык кюлзaка наакып
поотаая мaлaрконтю поотры нынрю
пюнaываар пырaппaрюккюм пюнытa наакы
яaтааню мэнaнынaынтаарк кэлытэa яaкы
алзaл вaннa вaннaртаам нынрa ваарэa.
mahthah pithahwahki makka 'lahki
marikadalum mahlwizumpu:n thahneh jahkik
kohthah wi'rijahjk kuma'ri jahkik
kolpuliththoh lahdäk kushaka nahkip
pohthahja mala'rko'ndu pohrri :ninru
punäwah'r pirapparukkum punitha nahki
jahthahnu mena:ninä:nthah'rk ke'litheh jahki
ashal wa'n'na wa'n'na'rthahm :ninra wahreh.
mātā pitāvāki makka ḷāki
maṟikaṭalum mālvicumpun tāṉē yākik
kōtā viriyāyk kumari yākik
kolpulittō lāṭaik kuḻaka ṉākip
pōtāya malarkoṇṭu pōṟṟi niṉṟu
puṉaivār piṟappaṟukkum puṉita ṉāki
yātāṉu meṉaniṉaintārk keḷitē yāki
aḻal vaṇṇa vaṇṇartām niṉṟa vāṟē.
maathaa pithaavaaki makka 'laaki
ma'rikadalum maalvisumpu:n thaanae yaakik
koathaa viriyaayk kumari yaakik
kolpuliththoa laadaik kuzhaka naakip
poathaaya malarko'ndu poa'r'ri :nin'ru
punaivaar pi'rappa'rukkum punitha naaki
yaathaanu mena:ninai:nthaark ke'lithae yaaki
azhal va'n'na va'n'narthaam :nin'ra vaa'rae.
சிற்பி