ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
    தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
    போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
    பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே ! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே ! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே ! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே ! உலகுகள் தோறும் பல உயிர்களாக நிற்பவனே ! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே ! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

சில் உருவாய்ச் சென்று - முதற்கண் சிலவேறு தேவர்களாய் வேறுவேறு அருளை வழங்கி நடந்து. திரண்டாய், பின்னர் அத்துணைத் தேவர்களும் நீ ஒருவனேயாய் ஒன்றி நின்றவனே. ` அத்தேவர்களாலும் அறியப்படாத தேவனே ` என்க. சிவபிரான் இவ்வாறு நிற்கும் நிலையை,` அறிவினால் மிக்க அறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து ` ( தி. 7. ப.55. பா.9.) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ` மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் - தேற்றனே தேற்றத் தெளிவே ` ( தி.8 திருவா. சிவபுரா. 81. 82.) என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தமை காண்க. புல் உயிர் - புல்லாகிய உயிர் ; இதுவே உயிர்களுட்கடைப் பட்டதாதலை, ` புல்லும் மரனும் ஓரறி வினவே ` ( தொல். பொருள் - 583) எனவும், ` புல்லாகிப் பூடாய் ` ( தி.8 திருவா. சிவபு.26) எனவும், வந்தனவற்றால் அறிக. பூட்சி - பூண ( மேற்கொள்ள ) ப்படுவது ; வாழ்க்கை ; அது, தனு கரண புவன போகங்களையும், இன்ப, துன்பங்களையும், யான் எனது என்பனவற்றையும் கொண்டு நிற்றல். ` பார் ` என்றது, ` உலகம் ` என்னும் பொருளது, அதனைப் பற்றுதலும், விடாமையும் அருள் காரணமாக என்க. கல் உயிர் - கல்லின் கண் உள்ள உயிர் ; கல்லின் கண்ணும் உயிர்கள் உள்ளன என்பது, தேரை காணப்படுதல்பற்றி அறியப்படும் ; எனவே, ` கல்லாய் மனிதராய் ` ( தி.8 திருவா. சிவபு -28) என்பதிலும், ` கல் ` என்னும் பெயர் அதன்கண் உள்ள உயிர்மேல் நின்றமை பெறப்படும். ` கனலே ` என்றது, ` ஒளிப் பொருளே ` என்றவாறு. இவ்வாறு அருளிச் செய்தது, கல்லினுள்ளும் கதிரவன் ஒளி, ஊடு சென்று ஆங்கு நுண்ணுயிர்களைக் காத்தல் பற்றி யென்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ आप लघु स्वरूप हैं, विराट स्वरूप भी हैं तुम्हारी जय हो। देवों के लिए अगोचर हो तुम्हारी जय हो। घास में भी जीवन प्रदान करने वाले प्रभु तुम्हारी जय हो। मेरे मन मंदिर में अमिट स्वरूप प्रभु तुम्हारी जय हो। अनेक जीवराषियों के रूप में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय हो। विष्व रक्षक प्रभु तुम्हारी जय हो। पत्थर में भी जीवन दान देने वाले प्रभु तुम्हारी जय हो। कैलास पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You fared forth in many little forms and became The one and only Form,
praise be!
O God unknown to gods,
Praise be!
You invested the grass with life,
praise be!
You entered my chinta,
never to part thereform,
praise be!
As manifested lives,
You pervade everywhere,
praise be!
You hold the world and do not foresake it,
praise be!
You are the fire,
the life of stone,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise ve!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the several forms that becomes the one and only form. You are not knowable even to the devas. You bestowed life even to the grass. You entered my heart and remain there permanently. You are manifest as the many beings in various worlds. You never forsake the world. Your are the fire that manifests as life in the stone too. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
చిల్లురువాయ్చ్ చెనౄ తిరణ్ఢాయ్ భోఱ్ఱి
తేవ రఱియాత తేవే భోఱ్ఱి
భుల్లుయిర్గ్గుం భూఢ్చి భుణర్త్తాయ్ భోఱ్ఱి
భోగాతెన్ చిన్తై భుగున్తాయ్ భోఱ్ఱి
భల్లుయిరాయ్భ్ భార్తోఱుం నిన్ఱాయ్ భోఱ్ఱి
భఱ్ఱి యులగై విఢాతాయ్ భోఱ్ఱి
గల్లుయిరాయ్ నిన్ఱ గనలే భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ಚಿಲ್ಲುರುವಾಯ್ಚ್ ಚೆನೄ ತಿರಣ್ಢಾಯ್ ಭೋಱ್ಱಿ
ತೇವ ರಱಿಯಾತ ತೇವೇ ಭೋಱ್ಱಿ
ಭುಲ್ಲುಯಿರ್ಗ್ಗುಂ ಭೂಢ್ಚಿ ಭುಣರ್ತ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಭೋಗಾತೆನ್ ಚಿನ್ತೈ ಭುಗುನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಭಲ್ಲುಯಿರಾಯ್ಭ್ ಭಾರ್ತೋಱುಂ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಭಱ್ಱಿ ಯುಲಗೈ ವಿಢಾತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಲ್ಲುಯಿರಾಯ್ ನಿನ್ಱ ಗನಲೇ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
ചില്ലുരുവായ്ച് ചെന്റു തിരണ്ഢായ് ഭോറ്റി
തേവ രറിയാത തേവേ ഭോറ്റി
ഭുല്ലുയിര്ഗ്ഗും ഭൂഢ്ചി ഭുണര്ത്തായ് ഭോറ്റി
ഭോഗാതെന് ചിന്തൈ ഭുഗുന്തായ് ഭോറ്റി
ഭല്ലുയിരായ്ഭ് ഭാര്തോറും നിന്റായ് ഭോറ്റി
ഭറ്റി യുലഗൈ വിഢാതായ് ഭോറ്റി
ഗല്ലുയിരായ് നിന്റ ഗനലേ ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

චිලංලුරුවායංචං චෙනං.රු. තිරණංටායං පෝරං.රි.
තේව රරි.යාත තේවේ පෝරං.රි.
පුලංලුයිරංකංකුමං පූටංචි පුණරංතංතායං පෝරං.රි.
පෝකාතෙනං. චිනංතෛ පුකුනංතායං පෝරං.රි.
පලංලුයිරායංපං පාරංතෝරු.මං නිනං.රා.යං පෝරං.රි.
පරං.රි. යුලකෛ විටාතායං පෝරං.රි.
කලංලුයිරායං නිනං.ර. කන.ලේ පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
चिल्लुरुवाय्च् चॆऩ्ऱु तिरण्टाय् पोऱ्ऱि
तेव रऱियात तेवे पोऱ्ऱि
पुल्लुयिर्क्कुम् पूट्चि पुणर्त्ताय् पोऱ्ऱि
पोकातॆऩ् चिन्तै पुकुन्ताय् पोऱ्ऱि
पल्लुयिराय्प् पार्तोऱुम् निऩ्ऱाय् पोऱ्ऱि
पऱ्ऱि युलकै विटाताय् पोऱ्ऱि
कल्लुयिराय् निऩ्ऱ कऩले पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يدان'راتهي رنسي هcيفارللسي
ir'r'aop yaadn'ariht ur'nes hcyaavurullis
ريربا فايتهاي تهاياريرا فاتهاي
ir'r'aop eaveaht ahtaayir'ar aveaht
ريربا يتهاتهرن'ب هيcدبو مككرييللب
ir'r'aop yaahthtran'up ihcdoop mukkriyullup
ريربا يتهانكب تهينسي نتهيكابا
ir'r'aop yaahtn:ukup iahtn:is nehtaakaop
ريربا يرانني مرتهاربا بيراييللب
ir'r'aop yaar'nin: mur'aohtraap pyaariyullap
ريربا يتهادافي كيلايأ ريرب
ir'r'aop yaahtaadiv iakaluy ir'r'ap
ريربا لاينكا رانني يراييللكا
ir'r'aop ealanak ar'nin: yaariyullak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
จิลลุรุวายจ เจะณรุ ถิระณดาย โปรริ
เถวะ ระริยาถะ เถเว โปรริ
ปุลลุยิรกกุม ปูดจิ ปุณะรถถาย โปรริ
โปกาเถะณ จินถาย ปุกุนถาย โปรริ
ปะลลุยิรายป ปารโถรุม นิณราย โปรริ
ปะรริ ยุละกาย วิดาถาย โปรริ
กะลลุยิราย นิณระ กะณะเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိလ္လုရုဝာယ္စ္ ေစ့န္ရု ထိရန္တာယ္ ေပာရ္ရိ
ေထဝ ရရိယာထ ေထေဝ ေပာရ္ရိ
ပုလ္လုယိရ္က္ကုမ္ ပူတ္စိ ပုနရ္ထ္ထာယ္ ေပာရ္ရိ
ေပာကာေထ့န္ စိန္ထဲ ပုကုန္ထာယ္ ေပာရ္ရိ
ပလ္လုယိရာယ္ပ္ ပာရ္ေထာရုမ္ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ပရ္ရိ ယုလကဲ ဝိတာထာယ္ ေပာရ္ရိ
ကလ္လုယိရာယ္ နိန္ရ ကနေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
チリ・ルルヴァーヤ・シ・ セニ・ル ティラニ・ターヤ・ ポーリ・リ
テーヴァ ラリヤータ テーヴェー ポーリ・リ
プリ・ルヤリ・ク・クミ・ プータ・チ プナリ・タ・ターヤ・ ポーリ・リ
ポーカーテニ・ チニ・タイ プクニ・ターヤ・ ポーリ・リ
パリ・ルヤラーヤ・ピ・ パーリ・トールミ・ ニニ・ラーヤ・ ポーリ・リ
パリ・リ ユラカイ ヴィターターヤ・ ポーリ・リ
カリ・ルヤラーヤ・ ニニ・ラ カナレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
сыллюрюваайч сэнрю тырaнтаай поотры
тэaвa рaрыяaтa тэaвэa поотры
пюллюйырккюм путсы пюнaрттаай поотры
поокaтэн сынтaы пюкюнтаай поотры
пaллюйыраайп паартоорюм нынраай поотры
пaтры ёлaкaы вытаатаай поотры
каллюйыраай нынрa канaлэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
zillu'ruwahjch zenru thi'ra'ndahj pohrri
thehwa 'rarijahtha thehweh pohrri
pulluji'rkkum puhdzi pu'na'rththahj pohrri
pohkahthen zi:nthä puku:nthahj pohrri
palluji'rahjp pah'rthohrum :ninrahj pohrri
parri julakä widahthahj pohrri
kalluji'rahj :ninra kanaleh pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
cilluruvāyc ceṉṟu tiraṇṭāy pōṟṟi
tēva raṟiyāta tēvē pōṟṟi
pulluyirkkum pūṭci puṇarttāy pōṟṟi
pōkāteṉ cintai pukuntāy pōṟṟi
palluyirāyp pārtōṟum niṉṟāy pōṟṟi
paṟṟi yulakai viṭātāy pōṟṟi
kalluyirāy niṉṟa kaṉalē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
silluruvaaych sen'ru thira'ndaay poa'r'ri
thaeva ra'riyaatha thaevae poa'r'ri
pulluyirkkum poodchi pu'narththaay poa'r'ri
poakaathen si:nthai puku:nthaay poa'r'ri
palluyiraayp paarthoa'rum :nin'raay poa'r'ri
pa'r'ri yulakai vidaathaay poa'r'ri
kalluyiraay :nin'ra kanalae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி