ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலை பெற்றிருப்பவனே ! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே ! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே ! இடையறாத சொற்களின் ஒலியே ! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே ! காற்றாகி எங்கும் கலந்தவனே ! கயிலை மலையில் உறைபவனே ! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

` போற்றி ` என்பதுபற்றி ஐந்தாம் திருப்பதிகக் குறிப்பின் தொடக்கத்தில் சில கூறப்பட்டன. ` வேறு ` என்னும் உரிச்சொல் ` வேற்று ` எனத் திரிந்து பெயராய் நின்று, வேறாய பொருள்களை யுணர்த்திற்று. ` விண் ` எனப் பின்னர் வருகின்றமையின், ` வேற்றாகி ` என்றருளிச் செய்தார் ; ` விண்ணாகியும் பிற நான்கு பூதங்களாகியும் நின்றவனே ` என்பது பொருள். ` நின்றாய் ` முதலியன, ` நின்றான் ` முதலிய பெயர்கள் விளியேற்று நின்றனவாம். அவற்றின் பின்னெல்லாம், ` நினக்கு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ` என்னை மீளாமே ஆளாக் கொண்டாய் ` என்க. ஊற்று, இன்ப ஊற்று. உள்ளே ஒளித்தாய் - ` புறக் கண்ணிற்குப் புலனாகாது உயிரறிவினுள் நின்றவனே ` என, சுவேதாசுவதரமும் கூறிற்று. ஓவாத சத்தம் - இடையறாத ஓசை. ஒலி - எழுத்து. எழுத்துகளைப் புலப்படுத்தும் ஓசை இடையறாது நிகழ்ந்த வழியே பொருள் புலப்படுமாகலின்,` ஓவாத சத்தத்து ஓலியே ` என்றருளிச் செய்தார். இனி, ` சத்தத்து ` என்னும் அத்து வேண்டாவழிச் சாரியை எனக் கொண்டு, ` அழியாத சத்தமாகிய ஒலியே ( எழுத்தே )` என்றுரைத்தலுமாம். ஓவாமை - அழியாமை. வடமொழியாளர், எழுத்தினை, ` அட்சரம் ` ( அழிவில்லாதது ) என்பர். எழுத்தின் இயல்பு. ` ஓசை யொலியெலாம் ` என்னும் திருத்தாண்டகக் குறிப்பிற் கூறப்பட்டது. ( ப.38 பா.1). ஆற்று - ஆற்றல் ( சத்தி ); முதனிலைத் தொழிற் பெயர் ; அங்கே - விண் முதலிய பூதங்களிலும், உள்ளத்திலும், ஒளியிலும், ஆறங்க நால்வேதங்களிலும் என்க. இது, ` நின்றவாறு ` முதலியவற்றை விளக்கியருளியது, ` காற்றாகி ` என்பதில், ` ஆகி ` என்பது, ` போன்று ` எனப் பொருள் தந்தது. இஃது அங்கே அமர்ந்தமையை உவமையின் வைத்து விளக்கியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
55. तिरुक्कयिलायम्

(अप्पर अनेक तीर्थ स्थलों का भ्रमण करते हुए कैलाष पर्वत को ओर जाने लगे वाराणसी में जाकर प्रभु की वन्दना करने लगे। देह शिथिल एवं जर्जर हो गयी। उस स्थिति में भी वे छाती के बल पर लुढ़कते-लुढ़कते आगे जाने लगे। प्रभु ‘ईष’ उनके समक्ष आकर कहने लगे इस जलाषय में स्नान करने के उपरान्त तुम वापस त्रिरुवैयारु चले जाओ। वहीं पर कैलास पर्वत के दर्षन देंगे। उमापति को ‘सुन्दरेष्वर’ के रूप में दर्षन कर सकते हो, उसी प्रकार तिरुवैयारु में अप्पर ने जिस सुन्दर दृष्य को देखा उसी का वर्णन इस दषक में वर्णित है।)

हे मेरे आराध्यदेव षिव! तुम आकाष, क्षिति, नीर, अग्नि, वायु, इन पंचभूतों से सुषोभित हो, तुम्हारी जय हो। तुम हृदय के अजस्र स्त्रोत्र हो, प्रज्वलित स्वरूप हो, तुम्हारी जय हो। तुम सतत ध्वनि स्वरूप हो, तुम्हारी जय हो। तुम सर्वगुण सम्पन्न हो तुम्हारी जय हो। तुम वेद और उसके अंग स्वरूप हो तुम्हारी जय हो। तुम वायु में प्रतिष्ठित हो तुम्हारी जय हो। तुम कैलास पर्वत में सुषोभित हो तुम्हारी जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You stand as ether and other elements,
praise be!
You have me as Your servitor not to be manumitted,
praise be!
You lie concealed within as the spring,
praise be!
You are the sound of continuous sonance,
praise be!
As energy You abide there,
praise be!
You became The six Angas and the four Vedas,
praise be!
As wind,
You pervade everywhere,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the five elements! You have me as your permanent slave. You hid yourself inside as the source of all joy. You are the eternal sound! You are the power in the five elements. You are the four vedas and the six angas. You pervade everywhere as the wind. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వేఱ్ఱాగి విణ్ణాగి నిన్ఱాయ్ భోఱ్ఱి
మీళామే ఆళెన్నైగ్ గొణ్ఢాయ్ భోఱ్ఱి
ఊఱ్ఱాగి ఉళ్ళే ఒళిత్తాయ్ భోఱ్ఱి
ఓవాత చత్తత్ తొలియే భోఱ్ఱి
ఆఱ్ఱాగి అఙ్గే అమర్న్తాయ్ భోఱ్ఱి
ఆఱఙ్గం నాల్వేత మానాయ్ భోఱ్ఱి
గాఱ్ఱాగి యెఙ్గుఙ్ గలన్తాయ్ భోఱ్ఱి
గయిలై మలైయానే భోఱ్ఱి భోఱ్ఱి.
ವೇಱ್ಱಾಗಿ ವಿಣ್ಣಾಗಿ ನಿನ್ಱಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಮೀಳಾಮೇ ಆಳೆನ್ನೈಗ್ ಗೊಣ್ಢಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಊಱ್ಱಾಗಿ ಉಳ್ಳೇ ಒಳಿತ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಓವಾತ ಚತ್ತತ್ ತೊಲಿಯೇ ಭೋಱ್ಱಿ
ಆಱ್ಱಾಗಿ ಅಙ್ಗೇ ಅಮರ್ನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಆಱಙ್ಗಂ ನಾಲ್ವೇತ ಮಾನಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಾಱ್ಱಾಗಿ ಯೆಙ್ಗುಙ್ ಗಲನ್ತಾಯ್ ಭೋಱ್ಱಿ
ಗಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಭೋಱ್ಱಿ ಭೋಱ್ಱಿ.
വേറ്റാഗി വിണ്ണാഗി നിന്റായ് ഭോറ്റി
മീളാമേ ആളെന്നൈഗ് ഗൊണ്ഢായ് ഭോറ്റി
ഊറ്റാഗി ഉള്ളേ ഒളിത്തായ് ഭോറ്റി
ഓവാത ചത്തത് തൊലിയേ ഭോറ്റി
ആറ്റാഗി അങ്ഗേ അമര്ന്തായ് ഭോറ്റി
ആറങ്ഗം നാല്വേത മാനായ് ഭോറ്റി
ഗാറ്റാഗി യെങ്ഗുങ് ഗലന്തായ് ഭോറ്റി
ഗയിലൈ മലൈയാനേ ഭോറ്റി ഭോറ്റി.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේරං.රා.කි විණංණාකි නිනං.රා.යං පෝරං.රි.
මීළාමේ කළෙනං.නෛ.කං කොණංටායං පෝරං.රි.
ඌරං.රා.කි උළංළේ ඔළිතංතායං පෝරං.රි.
ඕවාත චතංතතං තොලියේ පෝරං.රි.
කරං.රා.කි අඞංකේ අමරංනංතායං පෝරං.රි.
කර.ඞංකමං නාලංවේත මානා.යං පෝරං.රි.
කාරං.රා.කි යෙඞංකුඞං කලනංතායං පෝරං.රි.
කයිලෛ මලෛයානේ. පෝරං.රි. පෝරං.රි..
वेऱ्ऱाकि विण्णाकि निऩ्ऱाय् पोऱ्ऱि
मीळामे आळॆऩ्ऩैक् कॊण्टाय् पोऱ्ऱि
ऊऱ्ऱाकि उळ्ळे ऒळित्ताय् पोऱ्ऱि
ओवात चत्तत् तॊलिये पोऱ्ऱि
आऱ्ऱाकि अङ्के अमर्न्ताय् पोऱ्ऱि
आऱङ्कम् नाल्वेत माऩाय् पोऱ्ऱि
काऱ्ऱाकि यॆङ्कुङ् कलन्ताय् पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
ريربا يرانني كينا'ن'في كيرارفاي
ir'r'aop yaar'nin: ikaan'n'iv ikaar'r'eav
ريربا يدان'و كنينليا مايلامي
ir'r'aop yaadn'ok kiannel'aa eamaal'eem
ريربا يتهاتهليو لايلأ كيرارو
ir'r'aop yaahthtil'o eal'l'u ikaar'r'oo
ريربا يايليتهو تهتهاتهس تهافااو
ir'r'aop eayiloht htahthtas ahtaavao
ريربا يتهانرماا كاينقا كيرارا
ir'r'aop yaahtn:rama eakgna ikaar'r'aa
ريربا يناما تهافايلنا مكانقراا
ir'r'aop yaanaam ahteavlaan: makgnar'aa
ريربا يتهانلاكا نقكنقيي كيراركا
ir'r'aop yaahtn:alak gnukgney ikaar'r'aak
.ريربا ريربا نايياليما ليييكا
.ir'r'aop ir'r'aop eanaayialam ialiyak
เวรรากิ วิณณากิ นิณราย โปรริ
มีลาเม อาเละณณายก โกะณดาย โปรริ
อูรรากิ อุลเล โอะลิถถาย โปรริ
โอวาถะ จะถถะถ โถะลิเย โปรริ
อารรากิ องเก อมะรนถาย โปรริ
อาระงกะม นาลเวถะ มาณาย โปรริ
การรากิ เยะงกุง กะละนถาย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝရ္ရာကိ ဝိန္နာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
မီလာေမ အာေလ့န္နဲက္ ေကာ့န္တာယ္ ေပာရ္ရိ
အူရ္ရာကိ အုလ္ေလ ေအာ့လိထ္ထာယ္ ေပာရ္ရိ
ေအာဝာထ စထ္ထထ္ ေထာ့လိေယ ေပာရ္ရိ
အာရ္ရာကိ အင္ေက အမရ္န္ထာယ္ ေပာရ္ရိ
အာရင္ကမ္ နာလ္ေဝထ မာနာယ္ ေပာရ္ရိ
ကာရ္ရာကိ ေယ့င္ကုင္ ကလန္ထာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ.
ヴェーリ・ラーキ ヴィニ・ナーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
ミーラアメー アーレニ・ニイク・ コニ・ターヤ・ ポーリ・リ
ウーリ・ラーキ ウリ・レー オリタ・ターヤ・ ポーリ・リ
オーヴァータ サタ・タタ・ トリヤエ ポーリ・リ
アーリ・ラーキ アニ・ケー アマリ・ニ・ターヤ・ ポーリ・リ
アーラニ・カミ・ ナーリ・ヴェータ マーナーヤ・ ポーリ・リ
カーリ・ラーキ イェニ・クニ・ カラニ・ターヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ.
вэaтраакы выннаакы нынраай поотры
милаамэa аалэннaык контаай поотры
утраакы юллэa олыттаай поотры
ооваатa сaттaт толыеa поотры
аатраакы ангкэa амaрнтаай поотры
аарaнгкам наалвэaтa маанаай поотры
кaтраакы енгкюнг калaнтаай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры.
wehrrahki wi'n'nahki :ninrahj pohrri
mih'lahmeh ah'lennäk ko'ndahj pohrri
uhrrahki u'l'leh o'liththahj pohrri
ohwahtha zaththath tholijeh pohrri
ahrrahki angkeh ama'r:nthahj pohrri
ahrangkam :nahlwehtha mahnahj pohrri
kahrrahki jengkung kala:nthahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri.
vēṟṟāki viṇṇāki niṉṟāy pōṟṟi
mīḷāmē āḷeṉṉaik koṇṭāy pōṟṟi
ūṟṟāki uḷḷē oḷittāy pōṟṟi
ōvāta cattat toliyē pōṟṟi
āṟṟāki aṅkē amarntāy pōṟṟi
āṟaṅkam nālvēta māṉāy pōṟṟi
kāṟṟāki yeṅkuṅ kalantāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi.
vae'r'raaki vi'n'naaki :nin'raay poa'r'ri
mee'laamae aa'lennaik ko'ndaay poa'r'ri
oo'r'raaki u'l'lae o'liththaay poa'r'ri
oavaatha saththath tholiyae poa'r'ri
aa'r'raaki angkae amar:nthaay poa'r'ri
aa'rangkam :naalvaetha maanaay poa'r'ri
kaa'r'raaki yengkung kala:nthaay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri.
சிற்பி