நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9 பண் : காந்தார பஞ்சமம்

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான். அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது. அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம், சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே.

குறிப்புரை :

முன்னெறியாகிய முதல்வன் என்றும் முன்னெறியாகிய முக்கண்ணன்நெறி என்றும் இயைக்கலாம். முதல்வனை ` முன்னிலை ` ` முன்னெறி ` என்றும் முன்னோர் குறித்தனர். ` நெறியே நின்மலனே ` ( தி.7 ப.24 பா.9) என்று அழைக்கப்பெறும் முதல்வனை ` முன்னெறி ` என்றலில் வியப்பென்னை ? முக்கணன்றன் நெறியே சரணாம். அது சரணாதல் திண்ணம். உயிர்கட்கு வீடுபேறு உண்டாக வேண்டின், முன்னெறி யாகிய முதல்வன்றன் நெறியே சரணாதல் திண்ணம். அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர் எல்லார்க்கும் நமச்சிவாயவே நன்னெறியாவது. ` நன்மையெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை எனப்படுவது வீடுபேறு என்ப. அதனைத் தலைப்படுதற்கு ஏதுவாய்ச் சிறந்த நெறியாகலின், ஞானம் ` நன்னெறி ` எனப்பட்டது. ( மாபாடியம். சூ.8 ) ஞானம் வேறு நமச்சிவாயம் வேறு ஆயினும், ஞானம் விளங்கி ஞேயம் காட்சிப்பட்ட இடத்தும் பயிற்சி வயத்தான் முன்னர்த் தான் நோக்கிய பாசத்தை நோக்கும் நோக்கமாகிய வாசனையை நீக்குதற்குரிய சாதகம் ஆகிய திருவைந்தெழுத்தும் ஞானத்திற்கு ஒப்பாதலின் ` நன்னெறி ` யாயிற்று ( மாபாடியம். சூ.9 ). ` காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது ` ஆதலின், அதுவே ` நன்னெறி ` யாவது என்றாரெனலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మున్నెఱిగిన నాయకుడు ముక్కంటి
తన్నెఱిగిన వారల ఊతకోలుగ
నున్న ఆ తిరుపాదముల పట్టి వీడకున్న
పన్నుగ తోడై నిలచు నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु सबके आदि स्वरूप हैं। वे षिव-धर्म के अग्र स्वरूप हैं। वे त्रिनेत्र हैं। शैव-धर्मानुयायी सभी भक्तों का सद्धर्मप्र्रद यही ‘नमः षिवाय’ पंचाक्षर मंत्र है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the first of all things and who is the oldest path and has three eyes.
it is definite that his path is the refuge for all souls.
namaccivāya is the salvation for all those who reached god, having gone in that path.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మున్నెఱి యాగియ ముతల్వన్ ముగ్గణన్
తన్నెఱి యేచర ణాత ఱిణ్ణమే
అన్నెఱి యేచెన్ఱఙ్ గఢైన్త వర్గ్గెలాం
నన్నెఱి యావతు నమచ్చి వాయవే.
ಮುನ್ನೆಱಿ ಯಾಗಿಯ ಮುತಲ್ವನ್ ಮುಗ್ಗಣನ್
ತನ್ನೆಱಿ ಯೇಚರ ಣಾತ ಱಿಣ್ಣಮೇ
ಅನ್ನೆಱಿ ಯೇಚೆನ್ಱಙ್ ಗಢೈನ್ತ ವರ್ಗ್ಗೆಲಾಂ
ನನ್ನೆಱಿ ಯಾವತು ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
മുന്നെറി യാഗിയ മുതല്വന് മുഗ്ഗണന്
തന്നെറി യേചര ണാത റിണ്ണമേ
അന്നെറി യേചെന്റങ് ഗഢൈന്ത വര്ഗ്ഗെലാം
നന്നെറി യാവതു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුනං.නෙ.රි. යාකිය මුතලංවනං. මුකංකණනං.
තනං.නෙ.රි. යේචර ණාත රි.ණංණමේ
අනංනෙරි. යේචෙනං.ර.ඞං කටෛනංත වරංකංතෙලාමං
නනං.නෙ.රි. යාවතු නමචංචි වායවේ.
मुऩ्ऩॆऱि याकिय मुतल्वऩ् मुक्कणऩ्
तऩ्ऩॆऱि येचर णात ऱिण्णमे
अन्नॆऱि येचॆऩ्ऱङ् कटैन्त वर्क्कॆलाम्
नऩ्ऩॆऱि यावतु नमच्चि वायवे.
نن'كاكم نفالتهام يكييا رينينم
nan'akkum navlahtum ayikaay ir'ennum
ماين'ن'ري تهانا' راسياي رينينتها
eaman'n'ir' ahtaan' araseay ir'ennaht
ملاكيكرفا تهانديكا نقرانسيياي رينينا
maalekkrav ahtn:iadak gnar'neseay ir'en:n:a
.فاييفا هيcهcمانا تهفايا رينيننا
.eavayaav ihchcaman: uhtavaay ir'ennan:
มุณเณะริ ยากิยะ มุถะลวะณ มุกกะณะณ
ถะณเณะริ เยจะระ ณาถะ ริณณะเม
อนเนะริ เยเจะณระง กะดายนถะ วะรกเกะลาม
นะณเณะริ ยาวะถุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္ေန့ရိ ယာကိယ မုထလ္ဝန္ မုက္ကနန္
ထန္ေန့ရိ ေယစရ နာထ ရိန္နေမ
အန္ေန့ရိ ေယေစ့န္ရင္ ကတဲန္ထ ဝရ္က္ေက့လာမ္
နန္ေန့ရိ ယာဝထု နမစ္စိ ဝာယေဝ.
ムニ・ネリ ヤーキヤ ムタリ・ヴァニ・ ムク・カナニ・
タニ・ネリ ヤエサラ ナータ リニ・ナメー
アニ・ネリ ヤエセニ・ラニ・ カタイニ・タ ヴァリ・ク・ケラーミ・
ナニ・ネリ ヤーヴァトゥ ナマシ・チ ヴァーヤヴェー.
мюннэры яaкыя мютaлвaн мюкканaн
тaннэры еaсaрa наатa рыннaмэa
аннэры еaсэнрaнг катaынтa вaрккэлаам
нaннэры яaвaтю нaмaчсы вааявэa.
munneri jahkija muthalwan mukka'nan
thanneri jehza'ra 'nahtha ri'n'nameh
a:n:neri jehzenrang kadä:ntha wa'rkkelahm
:nanneri jahwathu :namachzi wahjaweh.
muṉṉeṟi yākiya mutalvaṉ mukkaṇaṉ
taṉṉeṟi yēcara ṇāta ṟiṇṇamē
anneṟi yēceṉṟaṅ kaṭainta varkkelām
naṉṉeṟi yāvatu namacci vāyavē.
munne'ri yaakiya muthalvan mukka'nan
thanne'ri yaesara 'naatha 'ri'n'namae
a:n:ne'ri yaesen'rang kadai:ntha varkkelaam
:nanne'ri yaavathu :namachchi vaayavae.
சிற்பி