நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 6 பண் : காந்தார பஞ்சமம்

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான். அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான். உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

சலம் - கோட்டம். ` சலங்கெடுத்து நலங் கொடுக்கும் நம்பி ` ( தி.6 ப.20 பா.6) சலத்தாற்பொருள் செய்தே ( குறள் 660) என்புழித் ` தீயவினைகள் ` என்றும் சலம் பற்றிச் சால்பில செய்யார் ( குறள் 956) என்புழி வஞ்சனை என்றும் உரைத்தார் பரிமேலழகர். முன்னதன் விளக்கத்தில், முன் ஆக்கம்போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால் அவை ( அத் தீயவினைகளில் ) சலம் எனப்பட்டன என்றும் உரைத்தார். வெளியே காணப்படுவதற்கு வேறாக உள்ளே இருப்பது சலம் என்பர் வடமொழிப் புலவர். சிவஞானபாடியத்தில் , ` சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதல் ` என்னும் திருவெண்பா உரைக்கண், தம்பால் அடைக்கலம் எனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடன்மையாகலான், முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாதுகாப்போன் ஆகியும் அதுபற்றிக் கோட்டம் உடையன் அல்லனாய்த் தன்னைச் சார்ந்து தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி, அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கெடுத்து, அது செய்யவல்லரல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பன் என்றும், ` சாராதாரை ஒழித்துச் சார்ந்தாரையே பாதுகாப்பது நடுவுநிலை அன்று என்பாரை நோக்கி அவ்வாறு கொள்ளினும் அஃது ஆண்டைக்குத் தலைமைக் குணம் ஆவது அன்றி இழுக்கு அன்மையான் அமையும் என்பார், சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் எனப் பழமொழி எடுத்துக் காட்டி, உண்மையான் நோக்கவல்லார்க்கு அது நடுவு நிலைமையே கோட்டம் அன்று என அறிவுறுத்துவார், சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் என வேறுபடுத்துக் காட்டினார். சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் உண்டு என்பதூஉம், அது நடுவுநிலைமையே கோட்டம் அன்று என்பதூஉம், ஏனைச்சமயத் தார்க்கும் உடன்பாடாகலின், அஃது ஈண்டைக்கு உழமை ஆயிற்று ` என்றும் உரைத்தருளினமை உணர்க. ` சலமிலனாய் ` எனத்தொடங்கும் சிவஞானசித்தியையும் அதனுரையையும் ஈண்டு உணர்க. சங்கரன் - ` சுகத்தைப் பண்ணுகின்றவன் ` ( சிலப்பதிகாரம். நாடுகாண்காதை :- 186. அடியார்க்கு நல்லாருரை ) சம் - சுகம், இன்பம். கரன் - செய்பவன். சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன் - ஞானத்தால் தனை அடைந்தவர்க்கே அவர்தம் இருவினையும் நீக்கிப் பேரின்ப நலம் அருள்வோன். சலம் என்பதன் விளக்கத்தில் ஈதும் அடங்கும். ` தயாமூல தன்மம் என்னும் தத்துவத்தின்வழி நின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் கொடுக்கும் நலம் ` ( தி.6 ப.20 பா.6) சார்ந்தோர்க்கே உண்டு. நாள்தொறும் நல்குவான் நலன் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ` ` என்றும் இன்பம் பெருகும் இயல்பு.` ( தி.12 பெரிய. புரா.12). ` நெல்லு நீள்வயல் நீலக்குடி யரன்நல்லநாமம் நவிற்றியுய்ந்தேன் நன்றே ` என்புழியும் ஈண்டுப் பிரிப்பதுபோற் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். குலம் இலர் ஆகிலும் :- ` ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் ` என்றபடி குலத்துக்கு தொண்டர் குழாஅத்துக்கு ` குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ ` ( தி.5. ப.77 பா.8) ` ஏகம்பம் மேவினாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குத் தலைவர் ` ` புனிதனைப் போற்றுவார் மனிதரிற் றலையான மனிதரே ` ` தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ ` ` குலவராக குலம் இலரும் ஆக குணம் புகழுங்கால் உலகினல்லகதி பெறுவரேனும் ...... அடிகள் பாதம் நினைவார்களே ` ( தி.2 ப.115 பா.6) ` பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே ` ( தி.7 ப.72 ப.11) என்ற குலமே சைவ குலம் ; சிவத் தொண்டக்குலம். ` நலம் இலராக, நலமது உண்டாக, நாடவர் நாடறிகின்ற குலம் இலராக, குலமது உண்டாக ` அவற்றைப் பொருட்படுத்தாமல் அவரது தவத்தையே பொருட்படுத்தி அத் தவம் பணி குலச்சிறை குணமே அடியார் திறத்தில் அனைவர்க்கும் வேண்டும். அதற்கு ஏற்பதோர் நலம் ` சங்கரன் ` என்னும் பெயர்க்கண் முதற்சொல்லின் பொருளாம். சங்கரன் தரும் நலனெல்லாம் அவனது திருவைந்தெழுத்து நல்கும். ` கொல்வாரேனும் ` ( தி.3 ப.49 பா.5) ` நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் ` ( தி.3 ப.49 பா.7) என்று அருளிய ஆளுடையபிள்ளையார் திருப் பாடல்களையும் இங்குக் கருதுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
చలనము లేని శంకరుని తప్ప ఇతరము చేరిన వారి విడచు
కలుగనీడు అశుభముల మది తోచు కరుణ కతమున భక్తుల
కులము లేకున్నను గుణము నెంచు తన దాసులగని
పలు శుభముల నిచ్చు నెడతెగక నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव अहैतुक भाव से कृपा प्रदान करनेवाले हैं। जीवराषियों के हितैषी हैं, आश्रय पानेवाले भक्तों पर कृपा प्रदान करनेवाले हैं। भक्तों के रक्षक हैं। शील व सदाचारवाले व भक्ति के परिवेष में रहनेवाले, भक्तों को सुख प्रदान करनेवाले हैं। ‘नमः षिवाय’ मंत्र ही मार्ग प्रदर्षक है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ, the dispenser of good things has no partiality.
does not do any good except to people who approach him.
grants daily goodthings.
though some do not have noble lineage.
namaccivāya will give abundantly good things suitable to that birth.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
చలమిలన్ చఙ్గరన్ చార్న్త వర్గ్గలాల్
నలమిల నాఢొఱు నల్గు వానలన్
గులమిల రాగిలుఙ్ గులత్తుగ్ గేఱ్భతోర్
నలమిగగ్ గొఢుభ్భతు నమచ్చి వాయవే.
ಚಲಮಿಲನ್ ಚಙ್ಗರನ್ ಚಾರ್ನ್ತ ವರ್ಗ್ಗಲಾಲ್
ನಲಮಿಲ ನಾಢೊಱು ನಲ್ಗು ವಾನಲನ್
ಗುಲಮಿಲ ರಾಗಿಲುಙ್ ಗುಲತ್ತುಗ್ ಗೇಱ್ಭತೋರ್
ನಲಮಿಗಗ್ ಗೊಢುಭ್ಭತು ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
ചലമിലന് ചങ്ഗരന് ചാര്ന്ത വര്ഗ്ഗലാല്
നലമില നാഢൊറു നല്ഗു വാനലന്
ഗുലമില രാഗിലുങ് ഗുലത്തുഗ് ഗേറ്ഭതോര്
നലമിഗഗ് ഗൊഢുഭ്ഭതു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

චලමිලනං. චඞංකරනං. චාරංනංත වරංකංකලාලං
නලමිල නා.ටොරු. නලංකු වාන.ලනං.
කුලමිල රාකිලුඞං කුලතංතුකං කේරං.පතෝරං
නලමිකකං කොටුපංපතු නමචංචි වායවේ.
चलमिलऩ् चङ्करऩ् चार्न्त वर्क्कलाल्
नलमिल ऩाटॊऱु नल्कु वाऩलऩ्
कुलमिल राकिलुङ् कुलत्तुक् केऱ्पतोर्
नलमिकक् कॊटुप्पतु नमच्चि वायवे.
للاكاكرفا تهانرس نراكانقس نلاميلاس
laalakkrav ahtn:raas narakgnas nalimalas
نلانفا كلنا ردونا لاميلانا
nalanaav uklan: ur'odaan alimalan:
رتهابركاي كتهتهلاك نقلكيرا لاميلاك
raohtapr'eak kuhthtaluk gnulikaar alimaluk
.فاييفا هيcهcمانا تهببدو ككاميلانا
.eavayaav ihchcaman: uhtappudok kakimalan:
จะละมิละณ จะงกะระณ จารนถะ วะรกกะลาล
นะละมิละ ณาโดะรุ นะลกุ วาณะละณ
กุละมิละ รากิลุง กุละถถุก เกรปะโถร
นะละมิกะก โกะดุปปะถุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စလမိလန္ စင္ကရန္ စာရ္န္ထ ဝရ္က္ကလာလ္
နလမိလ နာေတာ့ရု နလ္ကု ဝာနလန္
ကုလမိလ ရာကိလုင္ ကုလထ္ထုက္ ေကရ္ပေထာရ္
နလမိကက္ ေကာ့တုပ္ပထု နမစ္စိ ဝာယေဝ.
サラミラニ・ サニ・カラニ・ チャリ・ニ・タ ヴァリ・ク・カラーリ・
ナラミラ ナートル ナリ・ク ヴァーナラニ・
クラミラ ラーキルニ・ クラタ・トゥク・ ケーリ・パトーリ・
ナラミカク・ コトゥピ・パトゥ ナマシ・チ ヴァーヤヴェー.
сaлaмылaн сaнгкарaн сaaрнтa вaрккалаал
нaлaмылa нааторю нaлкю ваанaлaн
кюлaмылa раакылюнг кюлaттюк кэaтпaтоор
нaлaмыкак котюппaтю нaмaчсы вааявэa.
zalamilan zangka'ran zah'r:ntha wa'rkkalahl
:nalamila nahdoru :nalku wahnalan
kulamila 'rahkilung kulaththuk kehrpathoh'r
:nalamikak koduppathu :namachzi wahjaweh.
calamilaṉ caṅkaraṉ cārnta varkkalāl
nalamila ṉāṭoṟu nalku vāṉalaṉ
kulamila rākiluṅ kulattuk kēṟpatōr
nalamikak koṭuppatu namacci vāyavē.
salamilan sangkaran saar:ntha varkkalaal
:nalamila naado'ru :nalku vaanalan
kulamila raakilung kulaththuk kae'rpathoar
:nalamikak koduppathu :namachchi vaayavae.
சிற்பி