நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 5 பண் : காந்தார பஞ்சமம்

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

விரதிகள் - விரதத்தை மேற்கொண்டவர்கள். ` விரதங்களாவன இன்ன அறம் செய்வல் எனவும் இன்ன மறம் ( பாவம் ) ஒழிவல் எனவும் தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன.` ( திருக்குறள், துறவறவியலின் தொடக்கம், பரிமேலழகருரை ) அவ்விரதங்கள், வினைமாசு தீர்ந்து அகக் கருவிகள் தூயன ஆதற்பொருளனவாய்க் காக்கப்படுவன, விரதங்களால் உள்ளம் முதலிய உட்கருவிகள் தூயன ஆயவழி உணர்வு தோன்றும். அவ்வுணர்வு மெய்யுணர்வு. அவ்வுணர்வால் உணரப்பெற்றது மெய்ப்பொருள். அப்பொருளை மறவாது நினைப்பூட்டுவது திருவெண்ணீறு. அதனால், விரதிகட்கெல்லாம் திருவெண்ணீறு அருங்கலம் ஆயிற்று. திருநீறணிந்த விரதிகளைக் கண்ட நல்வினை, யாவர்க்கும் மெய்ப்பொருளை நினைப்பிக்கும் அருட்பொருள் ஆதலின், அதனினும் அருங்கலம் பிறிதில்லை. ` பராவணம் ஆவது நீறு ` ஆதலின், அதுவே வண்ணம் நிறைந்த அருங்கலம். அந்தணர்க்கு அருமறைகளும் ஆறங்கங்களும் அருங்கலம். பிறைக்கு இறைவன் திருமுடி அருங்கலம். முடிக்குப் பிறை கலம் என்னாமை அறிக. சைவர் எல்லோரையும் உளப்படுத்தி நங்களுக்கு நமச்சிவாய மந்திரம் அருங்கலம் என்றருளியது உளங்கொளத் தக்கது. ` சைவ பூடணம் ` எனப்படும் திருநீறும் கண்டிகையும் புறத்தருங்கலம். திருவைத்தெழுத்து நாவினுக்கும் அகத்தினுக்கும் உயிர்க்கும் உணர்விற்கும் உரிய அகத்தருங்கலம். ( தி.4. ப.11. பா.2)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పూనిన వ్రతమునకు ఎనలేని అందము విభూతి
విన బ్రాహ్మణులకు ఎనలేని అందము వేదము
కన చందురినికి అందము ఎనలేని స్వామి జటల చేరిక
మనబోటి భక్తులకు అందము ఎనలేని నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
व्रत, पूजा आदि करनेवालों का लक्षण त्रिपुण्ड्र धारण करना है। ब्राह्मणों का लक्षण वेद व वेदांगों का अध्ययन करना है। अर्धचन्द्र का लक्षण षिव की जटा-जूट में सुषोभित होना है। हम भक्तों का लक्षण ‘नमः षिवाय’ मंत्र का उच्चारण है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
for all the people who have taken religious vows, that which sets off the beauty is well-burnt sacred ash.
that which sets off the beauty of brahmins is being well-versed in the abstruse vētams and six aṅkams.
that which sets off the beauty of the crescent is the shining and long head of Civaṉ.
namaccivāya sets off the beauty of us who are caivaītes.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వెన్తనీ ఱరుఙ్గలం విరతి గఢ్గెలాం
అన్తణర్గ్ గరుఙ్గల మరుమఱై యాఱఙ్గం
తిఙ్గళుగ్ గరుఙ్గలన్ తిగళు నీణ్ముఢి
నఙ్గళుగ్ గరుఙ్గల నమచ్చి వాయవే.
ವೆನ್ತನೀ ಱರುಙ್ಗಲಂ ವಿರತಿ ಗಢ್ಗೆಲಾಂ
ಅನ್ತಣರ್ಗ್ ಗರುಙ್ಗಲ ಮರುಮಱೈ ಯಾಱಙ್ಗಂ
ತಿಙ್ಗಳುಗ್ ಗರುಙ್ಗಲನ್ ತಿಗೞು ನೀಣ್ಮುಢಿ
ನಙ್ಗಳುಗ್ ಗರುಙ್ಗಲ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
വെന്തനീ റരുങ്ഗലം വിരതി ഗഢ്ഗെലാം
അന്തണര്ഗ് ഗരുങ്ഗല മരുമറൈ യാറങ്ഗം
തിങ്ഗളുഗ് ഗരുങ്ഗലന് തിഗഴു നീണ്മുഢി
നങ്ഗളുഗ് ഗരുങ്ഗല നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙනංතනී ර.රුඞංකලමං විරති කටංතෙලාමං
අනංතණරංකං කරුඞංකල මරුමරෛ. යාර.ඞංකමං
තිඞංකළුකං කරුඞංකලනං තිකළු. නීණංමුටි
නඞංකළුකං කරුඞංකල නමචංචි වායවේ.
वॆन्तनी ऱरुङ्कलम् विरति कट्कॆलाम्
अन्तणर्क् करुङ्कल मरुमऱै याऱङ्कम्
तिङ्कळुक् करुङ्कलन् तिकऴु नीण्मुटि
नङ्कळुक् करुङ्कल नमच्चि वायवे.
ملاكيدكا تهيرافي ملاكانقررا نيتهانفي
maalekdak ihtariv malakgnurar' een:ahtn:ev
مكانقرايا ريمارما لاكانقركا كرن'تهانا
makgnar'aay iar'amuram alakgnurak kran'ahtn:a
ديمن'ني زهكاتهي نلاكانقركا كلكانقتهي
idumn'een: uhzakiht n:alakgnurak kul'akgniht
.فاييفا هيcهcمانا لاكانقركا كلكانقنا
.eavayaav ihchcaman: alakgnurak kul'akgnan:
เวะนถะนี ระรุงกะละม วิระถิ กะดเกะลาม
อนถะณะรก กะรุงกะละ มะรุมะราย ยาระงกะม
ถิงกะลุก กะรุงกะละน ถิกะฬุ นีณมุดิ
นะงกะลุก กะรุงกะละ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္ထနီ ရရုင္ကလမ္ ဝိရထိ ကတ္ေက့လာမ္
အန္ထနရ္က္ ကရုင္ကလ မရုမရဲ ယာရင္ကမ္
ထိင္ကလုက္ ကရုင္ကလန္ ထိကလု နီန္မုတိ
နင္ကလုက္ ကရုင္ကလ နမစ္စိ ဝာယေဝ.
ヴェニ・タニー ラルニ・カラミ・ ヴィラティ カタ・ケラーミ・
アニ・タナリ・ク・ カルニ・カラ マルマリイ ヤーラニ・カミ・
ティニ・カルク・ カルニ・カラニ・ ティカル ニーニ・ムティ
ナニ・カルク・ カルニ・カラ ナマシ・チ ヴァーヤヴェー.
вэнтaни рaрюнгкалaм вырaты каткэлаам
антaнaрк карюнгкалa мaрюмaрaы яaрaнгкам
тынгкалюк карюнгкалaн тыкалзю нинмюты
нaнгкалюк карюнгкалa нaмaчсы вааявэa.
we:ntha:nih ra'rungkalam wi'rathi kadkelahm
a:ntha'na'rk ka'rungkala ma'rumarä jahrangkam
thingka'luk ka'rungkala:n thikashu :nih'nmudi
:nangka'luk ka'rungkala :namachzi wahjaweh.
ventanī ṟaruṅkalam virati kaṭkelām
antaṇark karuṅkala marumaṟai yāṟaṅkam
tiṅkaḷuk karuṅkalan tikaḻu nīṇmuṭi
naṅkaḷuk karuṅkala namacci vāyavē.
ve:ntha:nee 'rarungkalam virathi kadkelaam
a:ntha'nark karungkala maruma'rai yaa'rangkam
thingka'luk karungkala:n thikazhu :nee'nmudi
:nangka'luk karungkala :namachchi vaayavae.
சிற்பி