நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 3 பண் : காந்தார பஞ்சமம்

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும். இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

` விண் உற அடுக்கிய விறகு ` என்றதால், அடுக்கிய அவ்விறகின் மிகுதியையும், ` வெவ்வழல் உண்ணிய ( விறகு அடுக்கிற் ) புகில் அவை (- அவ்விறகுகள் ) ஒன்றும் இல்லையாம் என்றதால், தீச்சிறிதாயினும் எல்லா விறகுகளையும் எரித்தொழிக்கும் பெருவன்மையுடைமையையும் உணர்த்தி உவமம் ஆக்கினார். பலவுலகிற் பலபிறவியிற் பண்ணிப்பண்ணிப் பயின்ற பாவங்களை யெல்லாம் பொருந்தி நின்று அவை அற்றொழிய ஒழிக்கவல்லது திருவைந்தெழுத்து. இது பொருள் ( உவமேயம் ). விண்ணுற அடுக்கிய விறகு போல்வது பண்ணிய உலகினிற் பயின்ற பாவம். அவ்விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாதல் போல்வது திருவைந்தெழுத்து அப் பாவத்தை நண்ணி நின்று அறுக்கப் பாவம் முற்றும் அற்றொழிதல். விறகு x பாவம். அழல் x அஞ்செழுத்து. உண்ணிய புகில் :- சிவஞானபோதக் காப்புரையில் \\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\' அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ` உண்ணிய புகில் ` என்றாற்போல \\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\' என்றுள்ளதுணர்க. பண்ணியவுலகு - செய் வினைக்குத்தக அமைத்த புவனம். ` பண்ணிய சாத்திரப் பேய்கள் ` என்புழிப் போல மாயாகாரியம் என்றதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
వేయక వరుసగపెట్టి వేగిరకట్టి నింగి ముట్ట
చేయగ ఆకట్టెలలో దూరి ఒక నిప్పురవ్వ బూది
చేయు అటులే మనుజుల కర్మ సంచయము
పాయక తోడై నిలచి కాచునది నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
आसमान तक ऊँचा ईंधन जमाकर रखने पर भी, उसे जलाने के लिए थोड़ी सी आग पर्याप्त है। उसी तरह पूर्व जन्मों, कर्मबन्धनों को काटनेवाला ‘नमः षिवाय’ मंत्र का उच्चारण है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
if the fire enters into the firewood piled to reach the sky, to consume it, nothing will be left.
namaccivaya will root out the sins which the soul commits and gets practice in this would, drawing near them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
విణ్ణుఱ వఢుగ్గియ విఱగిన్ వెవ్వళల్
ఉణ్ణియ భుగిలవై యొనౄ మిల్లైయాం
భణ్ణియ వులగినిఱ్ భయిన్ఱ భావత్తై
నణ్ణినిన్ ఱఱుభ్భతు నమచ్చి వాయవే.
ವಿಣ್ಣುಱ ವಢುಗ್ಗಿಯ ವಿಱಗಿನ್ ವೆವ್ವೞಲ್
ಉಣ್ಣಿಯ ಭುಗಿಲವೈ ಯೊನೄ ಮಿಲ್ಲೈಯಾಂ
ಭಣ್ಣಿಯ ವುಲಗಿನಿಱ್ ಭಯಿನ್ಱ ಭಾವತ್ತೈ
ನಣ್ಣಿನಿನ್ ಱಱುಭ್ಭತು ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
വിണ്ണുറ വഢുഗ്ഗിയ വിറഗിന് വെവ്വഴല്
ഉണ്ണിയ ഭുഗിലവൈ യൊന്റു മില്ലൈയാം
ഭണ്ണിയ വുലഗിനിറ് ഭയിന്റ ഭാവത്തൈ
നണ്ണിനിന് ററുഭ്ഭതു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණංණුර. වටුකංකිය විර.කිනං. වෙවංවළ.ලං
උණංණිය පුකිලවෛ යොනං.රු. මිලංලෛයාමං
පණංණිය වුලකිනි.රං. පයිනං.ර. පාවතංතෛ
නණංණිනිනං. ර.රු.පංපතු නමචංචි වායවේ.
विण्णुऱ वटुक्किय विऱकिऩ् वॆव्वऴल्
उण्णिय पुकिलवै यॊऩ्ऱु मिल्लैयाम्
पण्णिय वुलकिऩिऱ् पयिऩ्ऱ पावत्तै
नण्णिनिऩ् ऱऱुप्पतु नमच्चि वायवे.
لزهافاففي نكيرافي يكيكدفا ران'ن'في
lahzavvev nikar'iv ayikkudav ar'un'n'iv
مياليلمي رنيو فيلاكيب يني'ن'أ
maayiallim ur'noy iavalikup ayin'n'u
تهيتهفابا رانييب رنيكيلاف يني'ن'ب
iahthtavaap ar'niyap r'inikaluv ayin'n'ap
.فاييفا هيcهcمانا تهببررا ننيني'ن'نا
.eavayaav ihchcaman: uhtappur'ar' nin:in'n'an:
วิณณุระ วะดุกกิยะ วิระกิณ เวะววะฬะล
อุณณิยะ ปุกิละวาย โยะณรุ มิลลายยาม
ปะณณิยะ วุละกิณิร ปะยิณระ ปาวะถถาย
นะณณินิณ ระรุปปะถุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္နုရ ဝတုက္ကိယ ဝိရကိန္ ေဝ့ဝ္ဝလလ္
အုန္နိယ ပုကိလဝဲ ေယာ့န္ရု မိလ္လဲယာမ္
ပန္နိယ ဝုလကိနိရ္ ပယိန္ရ ပာဝထ္ထဲ
နန္နိနိန္ ရရုပ္ပထု နမစ္စိ ဝာယေဝ.
ヴィニ・ヌラ ヴァトゥク・キヤ ヴィラキニ・ ヴェヴ・ヴァラリ・
ウニ・ニヤ プキラヴイ ヨニ・ル ミリ・リイヤーミ・
パニ・ニヤ ヴラキニリ・ パヤニ・ラ パーヴァタ・タイ
ナニ・ニニニ・ ラルピ・パトゥ ナマシ・チ ヴァーヤヴェー.
выннюрa вaтюккыя вырaкын вэввaлзaл
юнныя пюкылaвaы йонрю мыллaыяaм
пaнныя вюлaкыныт пaйынрa паавaттaы
нaннынын рaрюппaтю нaмaчсы вааявэa.
wi'n'nura wadukkija wirakin wewwashal
u'n'nija pukilawä jonru milläjahm
pa'n'nija wulakinir pajinra pahwaththä
:na'n'ni:nin raruppathu :namachzi wahjaweh.
viṇṇuṟa vaṭukkiya viṟakiṉ vevvaḻal
uṇṇiya pukilavai yoṉṟu millaiyām
paṇṇiya vulakiṉiṟ payiṉṟa pāvattai
naṇṇiniṉ ṟaṟuppatu namacci vāyavē.
vi'n'nu'ra vadukkiya vi'rakin vevvazhal
u'n'niya pukilavai yon'ru millaiyaam
pa'n'niya vulakini'r payin'ra paavaththai
:na'n'ni:nin 'ra'ruppathu :namachchi vaayavae.
சிற்பி