நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1 பண் : காந்தார பஞ்சமம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.

குறிப்புரை :

சொல் துணை வேதியன் - சொல்லளவான வேத முதல்வன். வேதம் ( வாசகம் ) சொல்வடிவாகத்தான் அச்சொல்லின் ( வாச்சியப் ) பொருள் வடிவானவன் என்க. சோதி - பரஞ்சோதி. வானவன் - அழியாத வீட்டுலகினன். பொன் துணை திருந்து அடி - பொன்னடி, துணையடி, திருந்தடி எனப் பொலிவும் இணையும் செம்மையும் கொள்க. அடி பொருந்தக் கைதொழலாவது உள்ளத்தை அடியும் அடியை உள்ளமும் பற்றக் கொண்டு, கை குவித்து வணங்குதல். கையொன்று செய்யக் கருத்தொன்று எண்ணலாகாது. கல்துணைப் பூட்டி - கல்லைத் துணையாகப் பூணச்செய்து. கல்லொடு கட்டி என்றபடி. கடலிற் பாய்ச்சினும் கை அடிதொழ நற்றுணையாவது திருவைந்தெழுத்து. கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை, ` கல்லினோ டெனைப் பூட்டி அமண்கையர், ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால், நெல்லு நீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே ` என்றுள்ள வாய்மையால் உண்மையாதல் உணர்க. இருவினையாகிய பாசத்தால், மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின், மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரை ஏறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந்தெழுத்து, உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ்வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ ? ` இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய்யஞ்செழுத்து அரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ ` ( தி.12 பெரியபுராணம். 1394). திருவைந்தெழுத்து இருவினைக் கயிற்றால் மலங்களாகிய மூன்று கல்லொடு கட்டி வீழ்த்தப் பெற்ற அஞ்ஞானியரைப் பவசாகரத்தினின்று முத்திக் கரையிலேற்றும் ஆற்றல் வாய்ந்தது. அப் பிறவிப் பெருங்கடலிலே மூன்று கல்மேல் ஏறிய அஞ்ஞானத்தரையும் முத்திக் கரை ஏற்ற வல்ல மெய்யெழுத்து, மெய்ஞ்ஞானத்தரசை இச்சிறு கடலிலே ஒரு கல்லின் மேல் ஏற்றி யிடலைச் சொல்லாதே அறியலாம். ஒரு கல் முக்கல் என்னும் நயம் அறியாமல், ` இருவினைப் பாசமும் ` எனப் பிரித்துப் பொருந்தா உரை யெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது. ` நற்றுணை ` என்பதற்கு ` நற்றாள் ` என்றதற்குப் பரிமேலழகர் உரைத்ததுரைத்துக் கொள்க. ( தி.7 ப.35 பா.8.) ( பேரூர்ப். நிருத்தப்படலம் - 74).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పలుకులలో వేదమై కెంజ్యోతి స్వరూపమై
కలుగచేయు నాకము ఆబంగరు పాదముల పట్టిన
కలుకంబము కట్టి నడు కదలిని విడిచిన
కలరూపై తోడై నిలుచునది నమశ్శివాయమే!

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
11. पोदु

राग: गान्धार पंचमम्

(भयंकर शूलरोग से पीडि़त होने पर अप्पर जैन धर्म को त्याग कर शैव धर्म में आ गये। इस पर जैन धर्मावलम्बी क्रुद्ध होकर उन्हें नाना प्रकार से यातनाएँ देने लगे। उन्हें पत्थर में बाँधकर समुद्र में फेंक दिया। अप्पर ‘नमः षिवाय’ मंत्र के उच्चारण से पत्थर को नाव के रूप में परिणत कर किनारे आ गये। इस दषक में ‘नमः षिवाय’ मंत्र की महिमा वर्णित है।)

षिव नाद स्वरूप हैं, ज्योतिर्मय स्वरूप हैं। सुन्दर दिव्य स्वरूप वन्दनीय प्रभु हैं। पत्थर से बाँधकर समुद्र में फेंकने पर ‘नमः षिवाय’ मंत्र ने ही मुझे बचाया।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the first cause who is the Vētam-s which are in the form of words the supreme being, the light divine.
who is the world of salvation which knows no destruction.
as I worship with joined hands, the heart to hold the feet, and the feet to hold the heart, the feet which are perfect, two in number and as valuable as gold.
though I was bound to a stone pillar and thrown into the sea;
namaccivāya is the companion which will grant salvation.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
చొఱౄణై వేతియన్ చోతి వానవన్
భొఱౄణైత్ తిరున్తఢి భొరున్తగ్ గైతొళగ్
గఱౄణైభ్ భూఢ్ఢియోర్ గఢలిఱ్ భాయ్చ్చినుం
నఱౄణై యావతు నమచ్చి వాయవే.
ಚೊಱೄಣೈ ವೇತಿಯನ್ ಚೋತಿ ವಾನವನ್
ಭೊಱೄಣೈತ್ ತಿರುನ್ತಢಿ ಭೊರುನ್ತಗ್ ಗೈತೊೞಗ್
ಗಱೄಣೈಭ್ ಭೂಢ್ಢಿಯೋರ್ ಗಢಲಿಱ್ ಭಾಯ್ಚ್ಚಿನುಂ
ನಱೄಣೈ ಯಾವತು ನಮಚ್ಚಿ ವಾಯವೇ.
ചൊറ്റുണൈ വേതിയന് ചോതി വാനവന്
ഭൊറ്റുണൈത് തിരുന്തഢി ഭൊരുന്തഗ് ഗൈതൊഴഗ്
ഗറ്റുണൈഭ് ഭൂഢ്ഢിയോര് ഗഢലിറ് ഭായ്ച്ചിനും
നറ്റുണൈ യാവതു നമച്ചി വായവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

චොරං.රු.ණෛ වේතියනං. චෝති වාන.වනං.
පොරං.රු.ණෛතං තිරුනංතටි පොරුනංතකං කෛතොළ.කං
කරං.රු.ණෛපං පූටංටියෝරං කටලිරං. පායංචංචිනු.මං
නරං.රු.ණෛ යාවතු නමචංචි වායවේ.
चॊऱ्ऱुणै वेतियऩ् चोति वाऩवऩ्
पॊऱ्ऱुणैत् तिरुन्तटि पॊरुन्तक् कैतॊऴक्
कऱ्ऱुणैप् पूट्टियोर् कटलिऱ् पाय्च्चिऩुम्
नऱ्ऱुणै यावतु नमच्चि वायवे.
نفانفا تهياسو نيتهيفاي ني'ررسو
navanaav ihtaos nayihteav ian'ur'r'os
كزهاتهوكي كتهانربو ديتهانرتهي تهني'رربو
kahzohtiak kahtn:urop idahtn:uriht htian'ur'r'op
منهيcهcيبا رليداكا ريأاديدبو بني'رركا
munihchcyaap r'iladak raoyiddoop pian'ur'r'ak
.فاييفا هيcهcمانا تهفايا ني'ررنا
.eavayaav ihchcaman: uhtavaay ian'ur'r'an:
โจะรรุณาย เวถิยะณ โจถิ วาณะวะณ
โปะรรุณายถ ถิรุนถะดิ โปะรุนถะก กายโถะฬะก
กะรรุณายป ปูดดิโยร กะดะลิร ปายจจิณุม
นะรรุณาย ยาวะถุ นะมะจจิ วายะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစာ့ရ္ရုနဲ ေဝထိယန္ ေစာထိ ဝာနဝန္
ေပာ့ရ္ရုနဲထ္ ထိရုန္ထတိ ေပာ့ရုန္ထက္ ကဲေထာ့လက္
ကရ္ရုနဲပ္ ပူတ္တိေယာရ္ ကတလိရ္ ပာယ္စ္စိနုမ္
နရ္ရုနဲ ယာဝထု နမစ္စိ ဝာယေဝ.
チョリ・ルナイ ヴェーティヤニ・ チョーティ ヴァーナヴァニ・
ポリ・ルナイタ・ ティルニ・タティ ポルニ・タク・ カイトラク・
カリ・ルナイピ・ プータ・ティョーリ・ カタリリ・ パーヤ・シ・チヌミ・
ナリ・ルナイ ヤーヴァトゥ ナマシ・チ ヴァーヤヴェー.
сотрюнaы вэaтыян сооты ваанaвaн
потрюнaыт тырюнтaты порюнтaк кaытолзaк
катрюнaып путтыйоор катaлыт паайчсынюм
нaтрюнaы яaвaтю нaмaчсы вааявэa.
zorru'nä wehthijan zohthi wahnawan
porru'näth thi'ru:nthadi po'ru:nthak käthoshak
karru'näp puhddijoh'r kadalir pahjchzinum
:narru'nä jahwathu :namachzi wahjaweh.
coṟṟuṇai vētiyaṉ cōti vāṉavaṉ
poṟṟuṇait tiruntaṭi poruntak kaitoḻak
kaṟṟuṇaip pūṭṭiyōr kaṭaliṟ pāycciṉum
naṟṟuṇai yāvatu namacci vāyavē.
so'r'ru'nai vaethiyan soathi vaanavan
po'r'ru'naith thiru:nthadi poru:nthak kaithozhak
ka'r'ru'naip pooddiyoar kadali'r paaychchinum
:na'r'ru'nai yaavathu :namachchi vaayavae.
சிற்பி