நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
011 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு : பண் : காந்தார பஞ்சமம்

` நீடிய வேலைகலக்கும் நெடுமந்தரகிரி போல ஓடி உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக ஆகுலம் ஆக்கிய யானை , ஆண்ட அரசை வணங்கி அஞ்சி மீண்டு , ஏவியவரையே கொன்று சென்றது . அது கண்ட அமணர் ஆராய்ந்து , அரசைக் கல்லொடு கட்டிக் கடலிற் பாய்ச்ச முடிவுசெய்து , அரசன் இசைவு பெற்று , அவ்வாறே கடலருகில் ஏகினர் . நாவுக்கரசரும் திருநின்ற செம்மையுள்ளம் சிறப்பச் சென்றார் . மன்னவன் சொன்னபடி முடித்து அப்பதகர் மீண்டனர் . உறைப்புடைய மெய்த்தொண்டர் , எந்தையை ஏத்துவன் என்று சிவனஞ்செழுத்தும் துதித்துப் பாடியது இந் நற்றமிழ்ப்பாமாலைத் திருப்பதிகம் `.

சிற்பி