ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
    மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வெள்ளிய பிறைமதியைச் சூடியவன். மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன். பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன். இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை :

பால் மதி - பால்போலும் ( களங்கமில்லாத ) மதி ; ` பகுப்பாய மதி ` எனலுமாம். செற்றார்கள் - பகைத்தவர்கள். செற்றான் - அழித்தான். மரகதம் - மரகதம்போல்பவன். ` திகழொளியை, தேனை, பாலை ` என்பதனை மேலே ( தாண் -1) காண்க. குற்றாலம், பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று. ` கூத்தாட வல்லானை ` என்றருளிச்செய்தது, எல்லா வகை ஆடலும் புரிதல் கருதி. காளியொடு ஆடினமையையும் கருதுக. ` ஞானம் பெற்றான் ` என்றதும், பான்மை வழக்கு. ` பெற்றார்கள் ` என்பதும் பாடம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is the One that wears the young,
milk-white crescent;
He is the primal One who is all the three worlds;
He is the Destroyer of the triple,
hostile citadels;
He is the abiding Light,
the Emerald,
The Honey and the Milk.
He is the beauteous One that presides over Kutraalam;
He is the Dancer,
the King,
the God of Gnosis;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
mu'r'raatha paalmathiyanj soodi naanai
moovulaku:n thaanaaya muthalvan thannaich
se'r'raarka'l puramoon'runj se'r'raan thannaith
thikazho'liyai marakathaththaith thaenaip paalaik
ku'r'raalath thamar:nthu'raiyung kuzhakan thannaik
kooththaada vallaanaik koanai gnaanam
pe'r'raanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி