மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : காந்தார பஞ்சமம்

தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல
தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம்
ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத் தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.

குறிப்புரை :

விரி - மலர்ந்த. மறுகு - வீதி. திரு - செல்வம். அணி - அழகிய. சீரினால் - சிறந்த நூன்முறைப்படி. வழிபாடு - நித்திய நைமித்திகமாகிய பூசை. ஒழியாதது - ஒரு காலமும் நீங்காததாகிய. செம்மை - செந்நெறி. உன - உன்னுடைய. சீர் அடி - சிறந்த அடிகளை, ஏத்துதும் - துதிப்போம். தேரின் ஆர் மறுகு - ` தேருலாவிய தில்லையுட் கூத்தனை ` எனத் திருநாவுக்கரசு நாயனாரும் அருளுவர் . தலமோ ` அணிதில்லை ` கோயிலோ ` அழகாய சிற்றம்பலம் `, அங்கு அமர்ந்த பெருமானோ ` ஏரினாலமர்ந்தான் ` இவ்வழகிய கூத்தப் பெருமானது பேரழகில் திளைத்த எமது வாகீசப் பெருந்தகையார், ` கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே,` ` சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டாற் பின்னைக் காண்பதென்னே,` என்பன முதலாக அருளினமையும் காண்க. ( தி.4 ப.80 முழுவதும்.)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
one who has adorned yourself with abundant well-blossomed chest-garlands made of koṉṟai flower indian laburnam one who has on the long matted locks the crescent of Chief!
in the beautiful tillai where riches are abundant and which are streets where beautiful temple cars are dragged.
in the ciṟṟampalam which is beautiful by the goodness of ceaseless worship conducted with pomp.
you resided with desire with your beauty.
we shall praise yor famous feet.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thaari naarviri kon'rai yaaymathi thaangku :nee'lsadai yaaythalai vaa:nalla
thaeri naarma'ru kinthiru vaara'ni thillaithannu'l
seeri naalvazhi paadozhi yaathathoar semmai yaalazha kaayasi'r 'rampalam
aeri naalamar:n thaayuna seeradi yaeththuthumae.
சிற்பி