ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு :

சுவாமிகள் கயிலை செல்லும் காதல் கொண்டு திருக் காளத்தியினின்றும் புறப்பட்டுத் திருப்பருப்பதம் வணங்கி , தெலுங்கு , கன்னடம் , மாளவம் , இலாடம் , மத்தியம் ஆகிய நாடுகளைக் கடந்து வாரணாசி சென்று தொழுது கற்சுரத்தை அடைந்து செல்லுகையில் கால்கள் தேய்ந்தமையால் கைகளை ஊன்றிச் செல்ல , அவைகளும் தேய்ந்தன , பின்பு , மார்பால் உந்தியும் புரண்டும் சென்றார் . அதனால் அவ்வுறுப்புக்களும் அழிந்தன . ஆகவே , கயிலைமால்வரையின் தாழ்வரையில் செயலின்றிக்கிடந்தார் . சுவாமிகளது நிலைக்கு இரங்கிய கயிலைப் பரமர் அவர் கயிலையை அணைவதற்கு அருளாராய் ஓர் முனிவராகி எதிர்தோன்றி , ` உம் உறுப்புக்களழிய இப்பாலையில் வந்தது என் கருதி ` என வினவினார் . ` மலைமகளுடன் வட கயிலை அண்டர் நாயகர் இருக்கும் அப்பரிசு அடியேன் கண்டு கும்பிடக் காதலின் அடைந்தேன் ; ஆளும் நாயகன் கயிலையிலிருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் ` என்றார்கள் சுவாமிகள் . இறைவர் சுவாமிகளது மன உறுதியைக் கண்டு அருகிலுள்ள பொய்கையைக் காட்டி , ` இப் பொய்கையில் மூழ்கி நம்மை நீ கயிலையிலிருந்த அம் முறையைத் திருவையாற்றிற்காண் ` எனப் பணித்துமறைந்தருளி னார் . சுவாமிகள் தீங்கு நீங்கிய திருமேனியுடன் இறையருளாணை யின் வண்ணம் திருக்கயிலையில் உள்ள பொய்கையில் ஐந்தெழுத்தோதி மூழ்கி ஐயாற்றில் ஓர் வாவியில் உலகெலாம் வியப்ப எழுந்து , வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் வள்ளலார் கயிலையிலிருந்த கோலம் கண்டு தொழுது பாடியருளியன இது முதல் மூன்று திருப்பதிகங்கள் . கயிலை மலையானையே போற்றியருளியதால் இவைமூன்றும் கயிலைத் திருப்பதிகங்களே ஆயின ( தி .12 திருநாவு . புரா . 381). சுவாமிகள் பொய்கையில் மூழ்கியதைக் குறிக்குமிடத்தில் (370) சேக்கிழார் , ` வேற்று மாகிவிண் ணாகிநின் றார்மொழி விரும்பி ` என்றது , விண்ணிலே மறைந்து அருள் புரிந்த நிலையை நினைந்து மூழ்கி , அந்நினைவோடே ஐயாற்றில் எழுந்து தாண்டகம் தொடங்கி அருளினார் என்றற்கு என்க . குறிப்பு : இத் திருப்பதிகம் போற்றி ( வணக்கம் ) கூறி அருளியது . இதுபோலும் திருப்பதிகங்கள் வேறும் சில உளவாயினும் அகத்தியர் திரட்டினுள் , அருச்சனைக்கு இத் திருப்பதிகமே சிறந்தெடுத்து வைக்கப்பட்டது . அடுத்துவருகின்ற இரு திருப்பதிகங்களும் போற்றித் திருப்பதிகங்களேயாகும் .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.