ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
    கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
    வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
    மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
    செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம். ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன். மீண்டும் அடியேனுக்கு ஒரு பிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா! திருத்தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன்.

குறிப்புரை:

` கருவாகி ` என்றது, கருப்பையில் துளியாய்ப் புக்க நிலையை. ` குழம்பியிருந்து ` என்பது தொகுத்தலாயிற்று, குழம்பி யிருத்தலாவது, ` கை, கால், தலை ` முலியன பிரிந்து தோன்றாது நெகிழ்ந்த பிண்டமாய் இருத்தல். கலித்து - தழைத்து ; அவை பிரிந்து தோன்றி, ` மூளை ` என்புழியும் உம்மை விரிக்க. கருமை, இங்குப் பசுமையைக் குறித்தது. ` ஒன்றாகி ` என்பதனை, ` ஒன்றாக ` எனத் திரிக்க. ` உருவாகி ` என்றது, ` மகனாகி ` என்றவாறு, ` உயிரார் ` என்புழி, ஆர்விகுதி, இழித்தற்கண் வந்தது. கடைபோகாமை இழிபென்க. ` உயிராரும் ` என்னும் சிறப்பும்மையை, ` வளர்க்கப்பட்டு ` என்பதனோடு கூட்டுக. ` கருவாகி ` என்பது முதல், ` வளர்க்கப்பட்டு ` என்பதுகாறும், உயிர், மகனாய்த் தோன்றுதற்கண் உள்ள அருமையை எடுத்தோதியவாறு. அங்ஙனம் தோன்றியும், அந் நிலையிலே நிலைத்து நில்லாது நீங்குதல்பற்றி, ` கடைபோகார் ` என்றருளிச் செய்தார். கடைபோதல் - தான் உள்ள துணையும் அவ்வொரு நிலையிலே நிற்றல். எந்த நேரத்திலும் இறப்பு உளதாதலைக் குறித்து இரங்கியவாறு. இரக்கத்திற்குக் காரணம், பின்னர் அருளினார். மருவு ஆகி - பொருந்துதல் ஆகி, ` நின் அடியே மருவாகி ` எனக் கூட்டுக. ` மறவாவண்ணம் ` என்புழி, ` நினைந்து ` என்பது எஞ்சி நின்றது. எனவே, ` இறவாது இப்பிறப்பிலே இருப்பேனாயின் மறத்தல் நிகழாமைபற்றிச் செம்மாந்திருப்பேன் ; அது கூடாதாகலின், ஒருகால் மீளப் பிறப்பு உண்டாகுமாயின், மறவாமை கூடுங்கொலோ என நினைந்து மனங் கலங்குகின்றேன் ` என்றருளியவாறாம். ` துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இறப்பன், இறந்தால் இருவிசும் பேறுவன் ; ஏறிவந்து பிறப்பன் ; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே.` ( தி.4. ப.113. பா.7.) எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச்செய்தார். இதனுள்ளும், உடலைத் துறத்தல் முதலிய பலவற்றிற்கும் உடம்பட்டு, பிஞ்ஞகன்பேர் மறத்தல் ஒன்றிற்கும் உடம்படாது இரங்கியருளினமை காண்க. மணவாளன் - அழகன். திருத்தெங்கூர், சோழநாட்டுத்தலம். ` செம்பொன்போலும் சிறந்த ஏகம்பம் ` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
गर्भ में पड़ा यह मांस पिंड अस्थि, नसें, दिमाग, मांस खंड आदि से जुड़ा हुआ है। माँ का पाला-पोसा यह प्राण अंततः अस्थिर है। नष्ट होने वाला है। फिर भी प्रभु मैं आपके श्रीचरणों को कभी विस्मृत न होने दूँगा। पुनः जन्म बन्धन में फँसने पर भी मैं यही प्रार्थना करता रहता हूँ कि मैं तुम्हारा विस्मरण न करूँ। तिरुथेंगूर के मेरे प्रभु! कांचि एकम्ब प्रभु! मैं आपकी स्तुति करते-करते गद्गद हो जाता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Gamete,
jelly and gradual growth: then a form Wrought of brains,
fresh veins and white bones.
Thus embodied it comes out and is fostered by a woman;
Yet life abides not (embodied);
bound to Your feet I will not forget You,
O Chief!
O Bridegroom of Tiruvaaroor!
O Lord of Tengkoor!
O auric Yekampan!
Should I be born again,
would I forget You?
Ha,
I stand(utterly) bewildered.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀯𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀼𑀵𑀫𑁆𑀧𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀓𑀮𑀺𑀢𑁆𑀢𑀼 𑀫𑀽𑀴𑁃
𑀓𑀭𑀼𑀦𑀭𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁂𑁆𑀮𑀼𑀫𑁆𑀧𑀼𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀸𑀓𑀺
𑀉𑀭𑀼𑀯𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑀼𑀶𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀺𑀗𑁆 𑀓𑁄𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀺 𑀢𑀷𑁆𑀷𑀸𑀮𑁆
𑀯𑀴𑀭𑁆𑀓𑁆𑀓𑀧𑁆𑀧𑀝𑁆 𑀝𑀼𑀬𑀺𑀭𑀸𑀭𑀼𑀗𑁆 𑀓𑀝𑁃𑀧𑁄 𑀓𑀸𑀭𑀸𑀮𑁆
𑀫𑀭𑀼𑀯𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑁂 𑀫𑀶𑀯𑁂 𑀷𑀫𑁆𑀫𑀸𑀷𑁆
𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀶𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀡𑁆𑀝𑁂𑀮𑁆 𑀫𑀶𑀯𑀸 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀭𑀽𑀭𑁆 𑀫𑀡𑀯𑀸𑀴𑀸 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀗𑁆 𑀓𑀽𑀭𑀸𑀬𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁂 𑀓𑀫𑁆𑀧𑀷𑁂 𑀢𑀺𑀓𑁃𑀢𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুৱাহিক্ কুৰ়ম্বিরুন্দু কলিত্তু মূৰৈ
করুনরম্বুম্ ৱেৰ‍্ৰেলুম্বুঞ্ সের্ন্দোণ্ড্রাহি
উরুৱাহিপ্ পুর়প্পট্টিঙ্ কোরুত্তি তন়্‌ন়াল্
ৱৰর্ক্কপ্পট্ টুযিরারুঙ্ কডৈবো কারাল্
মরুৱাহি নিন়্‌ন়ডিযে মর়ৱে ন়ম্মান়্‌
মর়িত্তোরুহার়্‌ পির়প্পুণ্ডেল্ মর়ৱা ৱণ্ণম্
তিরুৱারূর্ মণৱাৰা তিরুত্তেঙ্ কূরায্
সেম্বোন়ে কম্বন়ে তিহৈত্তিট্ টেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே


Open the Thamizhi Section in a New Tab
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே

Open the Reformed Script Section in a New Tab
करुवाहिक् कुऴम्बिरुन्दु कलित्तु मूळै
करुनरम्बुम् वॆळ्ळॆलुम्बुञ् सेर्न्दॊण्ड्राहि
उरुवाहिप् पुऱप्पट्टिङ् कॊरुत्ति तऩ्ऩाल्
वळर्क्कप्पट् टुयिरारुङ् कडैबो काराल्
मरुवाहि निऩ्ऩडिये मऱवे ऩम्माऩ्
मऱित्तॊरुहाऱ् पिऱप्पुण्डेल् मऱवा वण्णम्
तिरुवारूर् मणवाळा तिरुत्तॆङ् कूराय्
सॆम्बॊऩे कम्बऩे तिहैत्तिट् टेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕರುವಾಹಿಕ್ ಕುೞಂಬಿರುಂದು ಕಲಿತ್ತು ಮೂಳೈ
ಕರುನರಂಬುಂ ವೆಳ್ಳೆಲುಂಬುಞ್ ಸೇರ್ಂದೊಂಡ್ರಾಹಿ
ಉರುವಾಹಿಪ್ ಪುಱಪ್ಪಟ್ಟಿಙ್ ಕೊರುತ್ತಿ ತನ್ನಾಲ್
ವಳರ್ಕ್ಕಪ್ಪಟ್ ಟುಯಿರಾರುಙ್ ಕಡೈಬೋ ಕಾರಾಲ್
ಮರುವಾಹಿ ನಿನ್ನಡಿಯೇ ಮಱವೇ ನಮ್ಮಾನ್
ಮಱಿತ್ತೊರುಹಾಱ್ ಪಿಱಪ್ಪುಂಡೇಲ್ ಮಱವಾ ವಣ್ಣಂ
ತಿರುವಾರೂರ್ ಮಣವಾಳಾ ತಿರುತ್ತೆಙ್ ಕೂರಾಯ್
ಸೆಂಬೊನೇ ಕಂಬನೇ ತಿಹೈತ್ತಿಟ್ ಟೇನೇ
Open the Kannada Section in a New Tab
కరువాహిక్ కుళంబిరుందు కలిత్తు మూళై
కరునరంబుం వెళ్ళెలుంబుఞ్ సేర్ందొండ్రాహి
ఉరువాహిప్ పుఱప్పట్టిఙ్ కొరుత్తి తన్నాల్
వళర్క్కప్పట్ టుయిరారుఙ్ కడైబో కారాల్
మరువాహి నిన్నడియే మఱవే నమ్మాన్
మఱిత్తొరుహాఱ్ పిఱప్పుండేల్ మఱవా వణ్ణం
తిరువారూర్ మణవాళా తిరుత్తెఙ్ కూరాయ్
సెంబొనే కంబనే తిహైత్తిట్ టేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුවාහික් කුළම්බිරුන්දු කලිත්තු මූළෛ
කරුනරම්බුම් වෙළ්ළෙලුම්බුඥ් සේර්න්දොන්‍රාහි
උරුවාහිප් පුරප්පට්ටිඞ් කොරුත්ති තන්නාල්
වළර්ක්කප්පට් ටුයිරාරුඞ් කඩෛබෝ කාරාල්
මරුවාහි නින්නඩියේ මරවේ නම්මාන්
මරිත්තොරුහාර් පිරප්පුණ්ඩේල් මරවා වණ්ණම්
තිරුවාරූර් මණවාළා තිරුත්තෙඞ් කූරාය්
සෙම්බොනේ කම්බනේ තිහෛත්තිට් ටේනේ


Open the Sinhala Section in a New Tab
കരുവാകിക് കുഴംപിരുന്തു കലിത്തു മൂളൈ
കരുനരംപും വെള്ളെലുംപുഞ് ചേര്‍ന്തൊന്‍ റാകി
ഉരുവാകിപ് പുറപ്പട്ടിങ് കൊരുത്തി തന്‍നാല്‍
വളര്‍ക്കപ്പട് ടുയിരാരുങ് കടൈപോ കാരാല്‍
മരുവാകി നിന്‍നടിയേ മറവേ നമ്മാന്‍
മറിത്തൊരുകാറ് പിറപ്പുണ്ടേല്‍ മറവാ വണ്ണം
തിരുവാരൂര്‍ മണവാളാ തിരുത്തെങ് കൂരായ്
ചെംപൊനേ കംപനേ തികൈത്തിട് ടേനേ
Open the Malayalam Section in a New Tab
กะรุวากิก กุฬะมปิรุนถุ กะลิถถุ มูลาย
กะรุนะระมปุม เวะลเละลุมปุญ เจรนโถะณ รากิ
อุรุวากิป ปุระปปะดดิง โกะรุถถิ ถะณณาล
วะละรกกะปปะด ดุยิรารุง กะดายโป การาล
มะรุวากิ นิณณะดิเย มะระเว ณะมมาณ
มะริถโถะรุการ ปิระปปุณเดล มะระวา วะณณะม
ถิรุวารูร มะณะวาลา ถิรุถเถะง กูราย
เจะมโปะเณ กะมปะเณ ถิกายถถิด เดเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုဝာကိက္ ကုလမ္ပိရုန္ထု ကလိထ္ထု မူလဲ
ကရုနရမ္ပုမ္ ေဝ့လ္ေလ့လုမ္ပုည္ ေစရ္န္ေထာ့န္ ရာကိ
အုရုဝာကိပ္ ပုရပ္ပတ္တိင္ ေကာ့ရုထ္ထိ ထန္နာလ္
ဝလရ္က္ကပ္ပတ္ တုယိရာရုင္ ကတဲေပာ ကာရာလ္
မရုဝာကိ နိန္နတိေယ မရေဝ နမ္မာန္
မရိထ္ေထာ့ရုကာရ္ ပိရပ္ပုန္ေတလ္ မရဝာ ဝန္နမ္
ထိရုဝာရူရ္ မနဝာလာ ထိရုထ္ေထ့င္ ကူရာယ္
ေစ့မ္ေပာ့ေန ကမ္ပေန ထိကဲထ္ထိတ္ ေတေန


Open the Burmese Section in a New Tab
カルヴァーキク・ クラミ・ピルニ・トゥ カリタ・トゥ ムーリイ
カルナラミ・プミ・ ヴェリ・レルミ・プニ・ セーリ・ニ・トニ・ ラーキ
ウルヴァーキピ・ プラピ・パタ・ティニ・ コルタ・ティ タニ・ナーリ・
ヴァラリ・ク・カピ・パタ・ トゥヤラールニ・ カタイポー カーラーリ・
マルヴァーキ ニニ・ナティヤエ マラヴェー ナミ・マーニ・
マリタ・トルカーリ・ ピラピ・プニ・テーリ・ マラヴァー ヴァニ・ナミ・
ティルヴァールーリ・ マナヴァーラア ティルタ・テニ・ クーラーヤ・
セミ・ポネー カミ・パネー ティカイタ・ティタ・ テーネー
Open the Japanese Section in a New Tab
garufahig gulaMbirundu galiddu mulai
garunaraMbuM felleluMbun serndondrahi
urufahib burabbadding goruddi dannal
falarggabbad duyirarung gadaibo garal
marufahi ninnadiye marafe namman
mariddoruhar birabbundel marafa fannaM
dirufarur manafala diruddeng guray
seMbone gaMbane dihaiddid dene
Open the Pinyin Section in a New Tab
كَرُوَاحِكْ كُظَنبِرُنْدُ كَلِتُّ مُوضَيْ
كَرُنَرَنبُن وٕضّيَلُنبُنعْ سيَۤرْنْدُونْدْراحِ
اُرُوَاحِبْ بُرَبَّتِّنغْ كُورُتِّ تَنّْالْ
وَضَرْكَّبَّتْ تُیِرارُنغْ كَدَيْبُوۤ كارالْ
مَرُوَاحِ نِنَّْدِیيَۤ مَرَوٕۤ نَمّانْ
مَرِتُّورُحارْ بِرَبُّنْديَۤلْ مَرَوَا وَنَّن
تِرُوَارُورْ مَنَوَاضا تِرُتّيَنغْ كُورایْ
سيَنبُونيَۤ كَنبَنيَۤ تِحَيْتِّتْ تيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨʋɑ:çɪk kʊ˞ɻʌmbɪɾɨn̪d̪ɨ kʌlɪt̪t̪ɨ mu˞:ɭʼʌɪ̯
kʌɾɨn̺ʌɾʌmbʉ̩m ʋɛ̝˞ɭɭɛ̝lɨmbʉ̩ɲ se:rn̪d̪o̞n̺ rɑ:çɪ
ʷʊɾʊʋɑ:çɪp pʊɾʌppʌ˞ʈʈɪŋ ko̞ɾɨt̪t̪ɪ· t̪ʌn̺n̺ɑ:l
ʋʌ˞ɭʼʌrkkʌppʌ˞ʈ ʈɨɪ̯ɪɾɑ:ɾɨŋ kʌ˞ɽʌɪ̯βo· kɑ:ɾɑ:l
mʌɾɨʋɑ:çɪ· n̺ɪn̺n̺ʌ˞ɽɪɪ̯e· mʌɾʌʋe· n̺ʌmmɑ:n̺
mʌɾɪt̪t̪o̞ɾɨxɑ:r pɪɾʌppʉ̩˞ɳɖe:l mʌɾʌʋɑ: ʋʌ˞ɳɳʌm
t̪ɪɾɨʋɑ:ɾu:r mʌ˞ɳʼʌʋɑ˞:ɭʼɑ: t̪ɪɾɨt̪t̪ɛ̝ŋ ku:ɾɑ:ɪ̯
sɛ̝mbo̞n̺e· kʌmbʌn̺e· t̪ɪxʌɪ̯t̪t̪ɪ˞ʈ ʈe:n̺e·
Open the IPA Section in a New Tab
karuvākik kuḻampiruntu kalittu mūḷai
karunarampum veḷḷelumpuñ cērntoṉ ṟāki
uruvākip puṟappaṭṭiṅ korutti taṉṉāl
vaḷarkkappaṭ ṭuyirāruṅ kaṭaipō kārāl
maruvāki niṉṉaṭiyē maṟavē ṉammāṉ
maṟittorukāṟ piṟappuṇṭēl maṟavā vaṇṇam
tiruvārūr maṇavāḷā tirutteṅ kūrāy
cempoṉē kampaṉē tikaittiṭ ṭēṉē
Open the Diacritic Section in a New Tab
карюваакык кюлзaмпырюнтю калыттю мулaы
карюнaрaмпюм вэллэлюмпюгн сэaрнтон раакы
юрюваакып пюрaппaттынг корютты тaннаал
вaлaрккаппaт тюйыраарюнг катaыпоо кaраал
мaрюваакы ныннaтыеa мaрaвэa нaммаан
мaрытторюкaт пырaппюнтэaл мaрaваа вaннaм
тырюваарур мaнaваалаа тырюттэнг кураай
сэмпонэa кампaнэa тыкaыттыт тэaнэa
Open the Russian Section in a New Tab
ka'ruwahkik kushampi'ru:nthu kaliththu muh'lä
ka'ru:na'rampum we'l'lelumpung zeh'r:nthon rahki
u'ruwahkip purappadding ko'ruththi thannahl
wa'la'rkkappad duji'rah'rung kadäpoh kah'rahl
ma'ruwahki :ninnadijeh maraweh nammahn
mariththo'rukahr pirappu'ndehl marawah wa'n'nam
thi'ruwah'ruh'r ma'nawah'lah thi'ruththeng kuh'rahj
zemponeh kampaneh thikäththid dehneh
Open the German Section in a New Tab
karòvaakik kòlzampirònthò kaliththò mölâi
karònarampòm vèlhlhèlòmpògn çèèrnthon rhaaki
òròvaakip pòrhappatding koròththi thannaal
valharkkappat dòyeiraaròng katâipoo kaaraal
maròvaaki ninnadiyèè marhavèè nammaan
marhiththoròkaarh pirhappònhdèèl marhavaa vanhnham
thiròvaarör manhavaalhaa thiròththèng köraaiy
çèmponèè kampanèè thikâiththit dèènèè
caruvaciic culzampiruinthu caliiththu muulhai
carunarampum velhlhelumpuign ceerinthon rhaaci
uruvacip purhappaitting coruiththi thannaal
valhariccappait tuyiiraarung cataipoo caaraal
maruvaci ninnatiyiee marhavee nammaan
marhiiththorucaarh pirhappuinhteel marhava vainhnham
thiruvaruur manhavalhaa thiruiththeng cuuraayi
cemponee campanee thikaiiththiit teenee
karuvaakik kuzhampiru:nthu kaliththu moo'lai
karu:narampum ve'l'lelumpunj saer:nthon 'raaki
uruvaakip pu'rappadding koruththi thannaal
va'larkkappad duyiraarung kadaipoa kaaraal
maruvaaki :ninnadiyae ma'ravae nammaan
ma'riththorukaa'r pi'rappu'ndael ma'ravaa va'n'nam
thiruvaaroor ma'navaa'laa thiruththeng kooraay
semponae kampanae thikaiththid daenae
Open the English Section in a New Tab
কৰুৱাকিক্ কুলম্পিৰুণ্তু কলিত্তু মূলৈ
কৰুণৰম্পুম্ ৱেল্লেলুম্পুঞ্ চেৰ্ণ্তোন্ ৰাকি
উৰুৱাকিপ্ পুৰপ্পইটটিঙ কোৰুত্তি তন্নাল্
ৱলৰ্ক্কপ্পইট টুয়িৰাৰুঙ কটৈপো কাৰাল্
মৰুৱাকি ণিন্নটিয়ে মৰৱে নম্মান্
মৰিত্তোৰুকাৰ্ পিৰপ্পুণ্টেল্ মৰৱা ৱণ্ণম্
তিৰুৱাৰূৰ্ মণৱালা তিৰুত্তেঙ কূৰায়্
চেম্পোনে কম্পনে তিকৈত্তিইট টেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.