நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரெள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெஞ்சமே! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய், அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர். உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள். அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ்.

குறிப்புரை:

நெஞ்சறிவுறூஉ :- முள்குவார் - முயங்கும் மகளிர், ` இளமுலை முகிழ்செய முள்கிய, ( கலித். 125). ` அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது ` ( நற்றிணை 105). ` ஆய்கதிர் முடி நிழல் முனிவர் சரணம் முள்குமே ` ( சூளாமணி. 55). ` நெடுங்கணார்தம் குவிமுலைத் தடத்து முள்கி ` ( சூளாமணி 69). முள்கு என்பது நீண்டு ( மூள்கு ) மூழ்கு என்றாதலுமுண்டு, ` சுற்றுவார் குழலார்தம் துகிற்றடம் முற்று மூழ்கும் பொழுது ` ( சூளாமணி 616), முள்கு + ஆர்ந்து + இருப்பர் = முள்கார்ந்திருப்பர், இது மருவி உட்கார்ந்திருப்பர் என்றாயிற்று, முழங்காலைக் கையால் தழுவிக் கட்டிக்கொண்டு, ஈரடியும் நிலந்தோய முழங்கால் இரண்டும் நெட்டங்காலிட்டிருத்தலை முள்காந்திருத்தல் என்பர். ` பசுப்போல்வர் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர் முசுப்போல முள்காந்திருப்பர் ` ( நன்னூல். 96. சங்கர நமச்சிவாயருரை ). சிந்தாமணி முதலியவற்றில் ` முள்குதல் ` என்னுஞ் சொல்லாட்சி பயின்றுளது. முயற்றி - முயல்கின்றாய், முன்னிலை வினை, வேண்டி முயற்றி என்றதால், வேண்டில் என்பது பிழையெனல் புலப்புடும். எள்குவார் - இகழ்வார். மாயம் - புதுமை, எள்கல் முதலிய மூன்றும் முள்குவார் ( மகளிர் ) வினை. பள்குவார் - அச்சத்தில் ஆழ்பவர், பதுங்கி என்றாருமுளர், ( சூளாமணி 1585). உள்குவார் - நினைப்பவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మనసా! నీవు తలచు స్త్రీలతోడి ఆనందము పొంద పలుకాలము
కొనియాడి యత్నింతువు నీకు కష్టము వచ్చిన తీర్పరు పరిహసింతురు
హీనదశ చూచి నవ్వుదురు వారల వీడి తురివొట్రియూర్ ఏలిక పదముల
మనమున నిలుపు దుఃఖముల పాపు తోడు నీడై ఎల్లపుడు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देह भोगप्रद है, इसे विद्वानों ने दुत्कारा है, इसे माया कहते हैं। इस मायाप्रद काम से निवृŸा हो जाइए, प्रभु भक्त बनकर गीत नृत्य करते भगवान् की स्तुति कीजिए। वे भगवान् मन में ज्योतिः स्वरूप बनकर दर्षन देंगे। वे वोॅट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
my mind!
if you desire the pleasure derived from intercourse with women.
cīvakacintamani 420, 687, 1413, 1514, 1986, 2184 when obstacles occur when you make efforts;
those who despise, will say, this is a deception, being bashful.
the Lord who has oṟṟiyūr as his place dwells in the hearts of those who think of him singing and dancing, being devotees who crouch;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀴𑁆𑀓𑀼𑀯𑀸𑀭𑁆 𑀧𑁄𑀓𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀫𑀼𑀬𑀶𑁆𑀶𑀺𑀬𑀸 𑀮𑀺𑀝𑀭𑁆𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀸𑀮𑁆
𑀏𑁆𑀴𑁆𑀓𑀼𑀯𑀸 𑀭𑁂𑁆𑀴𑁆𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀗𑁆 𑀓𑀺𑀢𑀼𑀯𑁄𑁆𑀭𑀼 𑀫𑀸𑀬 𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆
𑀧𑀴𑁆𑀓𑀼𑀯𑀸𑀭𑁆 𑀧𑀢𑁆𑀢 𑀭𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀬𑀼 𑀫𑀸𑀝𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀴𑁆𑀓𑀼𑀯𑀸 𑀭𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑀸 𑀭𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুৰ‍্গুৱার্ পোহম্ ৱেণ্ডিন়্‌ মুযট্রিযা লিডর্গৰ‍্ ৱন্দাল্
এৰ‍্গুৱা রেৰ‍্গি নিণ্ড্রঙ্ কিদুৱোরু মায মেন়্‌বার্
পৰ‍্গুৱার্ পত্ত রাহিপ্ পাডিযু মাডি নিণ্ড্রুম্
উৰ‍্গুৱা রুৰ‍্ৰত্ তুৰ‍্ৰা রোট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரெள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரெள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
मुळ्गुवार् पोहम् वेण्डिऩ् मुयट्रिया लिडर्गळ् वन्दाल्
ऎळ्गुवा रॆळ्गि निण्ड्रङ् किदुवॊरु माय मॆऩ्बार्
पळ्गुवार् पत्त राहिप् पाडियु माडि निण्ड्रुम्
उळ्गुवा रुळ्ळत् तुळ्ळा रॊट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ಮುಳ್ಗುವಾರ್ ಪೋಹಂ ವೇಂಡಿನ್ ಮುಯಟ್ರಿಯಾ ಲಿಡರ್ಗಳ್ ವಂದಾಲ್
ಎಳ್ಗುವಾ ರೆಳ್ಗಿ ನಿಂಡ್ರಙ್ ಕಿದುವೊರು ಮಾಯ ಮೆನ್ಬಾರ್
ಪಳ್ಗುವಾರ್ ಪತ್ತ ರಾಹಿಪ್ ಪಾಡಿಯು ಮಾಡಿ ನಿಂಡ್ರುಂ
ಉಳ್ಗುವಾ ರುಳ್ಳತ್ ತುಳ್ಳಾ ರೊಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
ముళ్గువార్ పోహం వేండిన్ ముయట్రియా లిడర్గళ్ వందాల్
ఎళ్గువా రెళ్గి నిండ్రఙ్ కిదువొరు మాయ మెన్బార్
పళ్గువార్ పత్త రాహిప్ పాడియు మాడి నిండ్రుం
ఉళ్గువా రుళ్ళత్ తుళ్ళా రొట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුළ්හුවාර් පෝහම් වේණ්ඩින් මුයට්‍රියා ලිඩර්හළ් වන්දාල්
එළ්හුවා රෙළ්හි නින්‍රඞ් කිදුවොරු මාය මෙන්බාර්
පළ්හුවාර් පත්ත රාහිප් පාඩියු මාඩි නින්‍රුම්
උළ්හුවා රුළ්ළත් තුළ්ළා රොට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
മുള്‍കുവാര്‍ പോകം വേണ്ടിന്‍ മുയറ്റിയാ ലിടര്‍കള്‍ വന്താല്‍
എള്‍കുവാ രെള്‍കി നിന്‍റങ് കിതുവൊരു മായ മെന്‍പാര്‍
പള്‍കുവാര്‍ പത്ത രാകിപ് പാടിയു മാടി നിന്‍റും
ഉള്‍കുവാ രുള്ളത് തുള്ളാ രൊറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
มุลกุวาร โปกะม เวณดิณ มุยะรริยา ลิดะรกะล วะนถาล
เอะลกุวา เระลกิ นิณระง กิถุโวะรุ มายะ เมะณปาร
ปะลกุวาร ปะถถะ รากิป ปาดิยุ มาดิ นิณรุม
อุลกุวา รุลละถ ถุลลา โระรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုလ္ကုဝာရ္ ေပာကမ္ ေဝန္တိန္ မုယရ္ရိယာ လိတရ္ကလ္ ဝန္ထာလ္
ေအ့လ္ကုဝာ ေရ့လ္ကိ နိန္ရင္ ကိထုေဝာ့ရု မာယ ေမ့န္ပာရ္
ပလ္ကုဝာရ္ ပထ္ထ ရာကိပ္ ပာတိယု မာတိ နိန္ရုမ္
အုလ္ကုဝာ ရုလ္လထ္ ထုလ္လာ ေရာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
ムリ・クヴァーリ・ ポーカミ・ ヴェーニ・ティニ・ ムヤリ・リヤー リタリ・カリ・ ヴァニ・ターリ・
エリ・クヴァー レリ・キ ニニ・ラニ・ キトゥヴォル マーヤ メニ・パーリ・
パリ・クヴァーリ・ パタ・タ ラーキピ・ パーティユ マーティ ニニ・ルミ・
ウリ・クヴァー ルリ・ラタ・ トゥリ・ラア ロリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
mulgufar bohaM fendin muyadriya lidargal fandal
elgufa relgi nindrang giduforu maya menbar
balgufar badda rahib badiyu madi nindruM
ulgufa rullad dulla rodriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
مُضْغُوَارْ بُوۤحَن وٕۤنْدِنْ مُیَتْرِیا لِدَرْغَضْ وَنْدالْ
يَضْغُوَا ريَضْغِ نِنْدْرَنغْ كِدُوُورُ مایَ ميَنْبارْ
بَضْغُوَارْ بَتَّ راحِبْ بادِیُ مادِ نِنْدْرُن
اُضْغُوَا رُضَّتْ تُضّا رُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʊ˞ɭxɨʋɑ:r po:xʌm ʋe˞:ɳɖɪn̺ mʊɪ̯ʌt̺t̺ʳɪɪ̯ɑ: lɪ˞ɽʌrɣʌ˞ɭ ʋʌn̪d̪ɑ:l
ʲɛ̝˞ɭxɨʋɑ: rɛ̝˞ɭgʲɪ· n̺ɪn̺d̺ʳʌŋ kɪðɨʋo̞ɾɨ mɑ:ɪ̯ə mɛ̝n̺bɑ:r
pʌ˞ɭxɨʋɑ:r pʌt̪t̪ə rɑ:çɪp pɑ˞:ɽɪɪ̯ɨ mɑ˞:ɽɪ· n̺ɪn̺d̺ʳɨm
ʷʊ˞ɭxɨʋɑ: rʊ˞ɭɭʌt̪ t̪ɨ˞ɭɭɑ: ro̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
muḷkuvār pōkam vēṇṭiṉ muyaṟṟiyā liṭarkaḷ vantāl
eḷkuvā reḷki niṉṟaṅ kituvoru māya meṉpār
paḷkuvār patta rākip pāṭiyu māṭi niṉṟum
uḷkuvā ruḷḷat tuḷḷā roṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
мюлкюваар поокам вэaнтын мюятрыяa лытaркал вaнтаал
элкюваа рэлкы нынрaнг кытюворю маая мэнпаар
пaлкюваар пaттa раакып паатыё мааты нынрюм
юлкюваа рюллaт тюллаа ротрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
mu'lkuwah'r pohkam weh'ndin mujarrijah lida'rka'l wa:nthahl
e'lkuwah 're'lki :ninrang kithuwo'ru mahja menpah'r
pa'lkuwah'r paththa 'rahkip pahdiju mahdi :ninrum
u'lkuwah 'ru'l'lath thu'l'lah 'rorrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
mòlhkòvaar pookam vèènhdin mòyarhrhiyaa lidarkalh vanthaal
èlhkòvaa rèlhki ninrhang kithòvorò maaya mènpaar
palhkòvaar paththa raakip paadiyò maadi ninrhòm
òlhkòvaa ròlhlhath thòlhlhaa rorhrhiyö ròtâiya koovèè
mulhcuvar poocam veeinhtin muyarhrhiiyaa litarcalh vainthaal
elhcuva relhci ninrhang cithuvoru maaya menpaar
palhcuvar paiththa raacip paatiyu maati ninrhum
ulhcuva rulhlhaith thulhlhaa rorhrhiyiuu rutaiya coovee
mu'lkuvaar poakam vae'ndin muya'r'riyaa lidarka'l va:nthaal
e'lkuvaa re'lki :nin'rang kithuvoru maaya menpaar
pa'lkuvaar paththa raakip paadiyu maadi :nin'rum
u'lkuvaa ru'l'lath thu'l'laa ro'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
মুল্কুৱাৰ্ পোকম্ ৱেণ্টিন্ মুয়ৰ্ৰিয়া লিতৰ্কল্ ৱণ্তাল্
এল্কুৱা ৰেল্কি ণিন্ৰঙ কিতুৱোৰু মায় মেন্পাৰ্
পল্কুৱাৰ্ পত্ত ৰাকিপ্ পাটিয়ু মাটি ণিন্ৰূম্
উল্কুৱা ৰুল্লত্ তুল্লা ৰোৰ্ৰিয়ূ ৰুটৈয় কোৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.