பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
67 நேச நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5


பதிக வரலாறு :

தொகை
`நேசனுக்கும் அடியேன்' (தி.7 ப.39 பா.11)
வகை
நாட்டம்இட்டு அன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந்
தான்தரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவர்அரையிற்
கூட்டும் அக்கப்படங் கோவண நெய்து கொடுத்துநன்மை
ஈட்டும்அக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.80
விரி
தொகை, பொ-ரை: நேசநாயனார்க்கும் அடியேன்.
வகை, பொ-ரை: சிவனடியார்களுக்கு அவர் இடையில் கட்டும் உடையும் கீளொடு கோவணமும் தாமே நெய்து கொடுத்து, இம்மை யிலேயே நன்மை பெற்ற காம்பீலி நகரில் சாலியர் குலத்து உதித்த நேச நாயனரை, கண்ணைத் தோண்டி மலராக இட்டுத் திருமால் வழிபட வெற்றித் தரும் சக்கரப் படையை அவர்க்கு அளித்த சிவபெருமானின் திருவடி மலர்களைத் தம் மனத்தில் தாங்கப் பெற்றவர் என எடுத்துக் கூறுவர். கு-ரை: அரையில் கூட்டும் - இடுப்பில் கூட்டும். அக்கப்படம் - உள்உடை.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.