பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பதிக வரலாறு :

தொகை ` ......... பேயார்க்கும் அடியேன்`
(தி.7 ப.39 பா.4)
தொகை, பொ-ரை பேய்வடிவை வேண்டிப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கும் அடியேன்.
வகை நம்பன் திருமலை நான்மிதி யேன்என்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்என் னம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பிஉகு காரைக்காலினின் மேய குலதனமே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 28
வகை, பொ-ரை: செழுமையான தேன் பூங்கொம்பில் இருந்து சொட்டும் காரைக்காலின் செல்வமான அம்மையார், `சிவபெருமா னுக்குரிய கயிலை மலையைக் காலால் மிதியேன்` எனத் தம் இருகால்களும் மேலே இருக்குமாறு தலையால் நடந்து செல்ல, உமாதேவியார் புன்முறுவலுடன், `இவர் யார் என்ன,` பொன்போன்ற மேனியையுடைய பெருமானாரால், `இவள் என் அம்மை` எனப் புகழப்பெற்ற பெருமைக்குரியவர் ஆவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.