பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பதிக வரலாறு :

தொகை `திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்`
(தி.7 ப.39 பா.3)
தொகை, பொ-ரை: திருக்குறிப்புத்தொண்டர் எனும் பெயருடைய நாயனாரின் அடியார்க்கும் அடியேன்.
வகை
மண்டும் புனற்சடை யான்றமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா
முண்டம் படர்பாறை முட்டு மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா லியர்தங்கள் தொல்குலமே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 21
வகை, பொ-ரை: பெருகும் கங்கையைத் திருச்சடையின்கண் உடைய பெருமானின் அடியவருடைய உடைகளின் அழுக்கைப் போக்கி, `காய வைத்தற்குத் தடையாக வந்த மழைதரும் மேகம் நீங்கா தொழிந்தால் நான் இறப்பேன்` என வலிய கற்பாறையில் தம் தலையை முட்டிக் கொண்ட அழகிய திருக்குறிப்புத் தொண்டரது குலம், காஞ்சியில் ஏகாலியர்தம் பழைய குலமாம்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.