கொடுங்கோளூரில் சேரமான் பெருமாளின் வழி பாட்டை ஏற்றிருந்த சுந்தரர் , ` ஆரூரானை மறக்கலுமாமே ` என்று திருப்பதிகம் பாடி , ` திருவாரூரைச் சென்று தொழுவேன் ` என்று கூறி எழுந்தருள , சேரர் பெருமான் பிரிவாற்றாமையால் வருந்துவதை யறிந்து , வருந்தாது பகையழித்து உமது பதியின் கண் இருந்து அரசாளும் என்றார் . சேரர் பெருமான் , ` எனக்குப் பாரோடு விசும்பாட்சி உமது பாதமலரே ; ஆயினும் நீர் திருவாரூர்க்கு எழுந்தருள்வதைத் தடுக்க அஞ்சுகின்றேன் ` என்று சொல்ல , சுந்தரர் , ` என்னுயிருக்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை மறந்திரேன் ` என்று கூறி எழுந்தருளினார் . அது கண்ட சேரர் பெருமான் அமைச்சர்கள் வாயிலாக , நவமணி களும் , மணிப்பூண்களும் , துகில் வருக்கம் முதலியவைகளும் ஏவலாளர் தலையின்மேல் நிரம்ப ஏற்றி அனுப்பினார் . வழியில் திருமுருகன்பூண்டிக்கு அருகில் சிவபெருமான் , பூதங்களை வேடர் வடிவாக்கிப் பொருள்களைக் கவர்ந்து வருமாறு அனுப்ப , அவைகள் அவ்வாறே சென்று எல்லாப் பொருள்களையும் பறித்து மறைந்தபின் சுவாமிகள் , திருக்கோயிலை யடைந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . கழறிற் . புரா . 170) குறிப்பு : இத் திருப்பதிகம் , சுந்தரர் ஆறலைப்புண்ட இடத்தில் கோயில் கொண்டிருந்த இறைவரைக் கண்டு , ` அந்தோ ! இக்கொடிய இடத்தில் , இறைவியோடு நீர் ஏன் இருக்கின்றீர் ? அப்பாற் சென்று இருக்கலாகாதோ ?` எனக் கவன்று அருளிச் செய்தது . அன்பின் மிகுதியால் , இறைவரது ஆற்றல் தோன்றாதாயிற்று என்க . இது , நகைவகையான் இகழ்வதுபோலப் புகழ்ந்ததாகாமை , சேக்கிழார் திருமொழியான் அறிக .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, ` திடுகு ` என்றும், ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு, சிறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை:
` விரவல் ` என்னும் தொழிற்பெயர், எதிர்மறை ஆகாரமும், மகர ஐகாரமும் பெற்று நின்றது, ` அழுக்காறாமை ` ( திருக் குறள். அதிகாரம். 17.) என்றதுபோல. அஃது ஆகுபெயராய், அதனையுடைய சொல்லைக் குறித்தது. ` திடுகு, மொட்டு ` என்பன, அச்சுறுத்தும் சில குறிப்புச் சொற்கள். பிறவுங் கொள்வராயினும், எல்லாவற்றையும் எஞ்சாது கொள்ளுதல் தோன்ற ஆறலைப்பாரை, ` கூறைகொள்வார் ` என்றல் வழக்கு என்பதை, ` ஆறுபோயினாரெல்லாங் கூறைகோட் பட்டார் ` என்றல் பற்றி அறிக. ` கூறைகொண்டு ஆறலைக்குமிடம் ` என்றதனை, ` ஆறலைத்துக் கூறைகொள்ளுமிடம் ` எனப் பின்முன்னாக மாற்றி யுரைக்க. இகழும் நகரை, ` மாநகர் ` என்றது, இகழ்ச்சிக் குறிப்பினால். ` இம் முருகன் பூண்டி ` எனச் சுட்டு வருவிக்க. ` மாநகர்வாய் ` என ஒன்றாக ஓதினாரேனும், ` மாநகர் ` எனவும், ` இதன்வாய் ` எனவும் இரண்டாக்கி உரைத்தல் கருத்தென்க. ` எற்றுக்கு ` என்பது, ` எத்துக்கு ` என மருவிற்று. ` இங்கு ` என்றது, திருக்கோயிலை. ` அப்பாற் போகலாகாதோ ?` என்பது, ஆற்றலான் வந்து இயையும். இத்திருப் பாடல்களில், ஈற்றடிகள் நீண்டி சைத்தன. ` எம்பிரானிரே ` என்றோதுதல் பாடமாகாது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
మురుగన్ -పూండి నగరంలో వడుగర్ కులస్తులు దూరాలకుసైతం వ్యాపించే దుర్గంధం మధ్య వసిస్తారు.
వడుగులు ధనుర్బాణాలు గలిగి బూతులాడుతూ తిరుగుతుండే క్రూరమైన దారి దోపిడి గాళ్ళ వలె వేటగాండ్రు ‘దిడుకు- మొడుకు’ అని శబ్దాలు చేస్తూ ప్రయాణికులను భయపెట్టి , గాయపరచి, గద్దించి పూర్తిగా దోచుకొంటారు.
రహ దారులలో మాటు వేసి ప్రయాణికులను దుస్తులతో సహా దోసుకొంటారు.
సున్నితమైన నడుముతో ఉన్న అందగత్తెను సగభాగంగా చేసికొన్న నీవు ఏ కారణంగా ఈ లాంటి చోట వసిస్తున్నావయ్యా!
అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
(कोडुंकोळूर में चेर राजा से आदर सत्कार स्वीकारने के उपरान्त सुन्दरर् तिरुवारूर वापस जाना चाहते थे। सुन्दरर् को बहुत द्रव्य, स्वर्ण आदि देकर राजा ने विदा किया। तिरुमुरुगन पूण्डि के पास स्वयं शिव ने भूत-गणों को भेजकर सुन्दरर् के सारे द्रव्य को लुटवा लिया। दु:खी होकर सुन्दरर् मन्दिर पहुँचे। उस समय प्रस्तुत दशक गाया।)
मेरे प्रभु!
दुर्गन्धिात शरीरवाले ये वडुग जाति के
भयंकर विषैले धानुधर्ाारी भील हैं।
वे आने-जानेवाले पथिकों को
(\\\\\\\'तिगुडु\\\\\\\' \\\\\\\'मोट्टु\\\\\\\' आदि) कटुवचनों से डरा-धामकाकर
उनके कपडे अाभूषण छीन लेते हैं।
ऐसे तिरुमुरुगन पूण्डि नगर में
क्षीण कटिवाली देवी के साथ,
आप यहाँ क्यों रहते हैं?
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
in the big city of Murukaṉ Pūṇṭi where vaṭukar whose bad body-odour spreads to a distance, live.
the vaṭuka hunters who have cruel and bent bows, speaking unfriendly words.
wounding frightening, and rebuking authoritatively travellers by saying tiṭuku and moṭṭu.
is the place where they plunder on the highway and rob travellers of their clothes.
For what purpose did you remain in this place with a young lady of small and minute waist? my Lord!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
Rotten smelling bodied Vatuka thugs wander in Murukanpoondi; with bent bows
cruel hoodlums, frighten the wayfarers with threat-words \\\'tituku and mottu\\\',
and rob robes and possessions, in reckless ruffian ways! In such a big risky city,
why stay with wasp waited slim Uma our Mother for what purpose!
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020