ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை உடையார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
×
6078001பதிக வரலாறு :
வாகீசர் , திருவொற்றியூர் திருப்பாசூர் முதலான பதி களை வணங்கித் திருவாலங்காடு சென்று பணிந்து பாடியருளிய வற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 342) குறிப்பு : இத் திருப்பதிகம் , ` தாமே ` என்னும் முடிபுடைய தொடர் களால் இறைவன் பெருமைகளை வகுத்தருளிச் செய்தது .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
குறிப்புரை:
` உலகு அனைத்தும் ` என்பதனை, இடைநிலைத் தீவகமாக வைத்து, ` உலகம் முழுதும் தனது ஒரு வியாபகத்துள் அடங்கி நிற்கும் பொருளாகும்படி அவையனைத்துமாய் நிறைந்து நின்றார் ` என உரைக்க. இனி, ` ஒன்றாய் உலகனைத்தும் ஆனார் ` எனப் பாடம் ஓதி, ` முன்னர்த் தாமாகிய ஒரு பொருளாய் நின்று. பின்னர் உலகப் பொருள் பலவும் ஆயினார், என்றுரைத்தலே சிறப்பென்க. ` இருள் உளதாய், பகலும் இரவும் இலவாய், சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது தனியே சிவபிரான் ஒருவனே இருந்தான் - ( சுவேதாசுவதரம் ) ` அவன், நான் பலவாகுவேனாக என விரும்பினான் ` எது எது ( முன்பு ) இருந்ததோ அதை அதை எல்லாம் அவன் படைத்தான் - அதனைப் படைத்த பின்பு அதனுள் நுழைந்து, சத்தும் தியத்தும் ஆயினன் - ( தைத்ரீயம் ) என இவ்வாறு வரும் உபநிடதப் பகுதிகள் பலவும் ஈண்டுக் காணத்தக்கன. ` தொறு ` என்பதன் திரிபாகிய, ` தோறு ` என்பதனை, பின்னுள்ள ` ஊழி ` என்புழியும் விரிக்க. ஊழி தோறும் உயர்தல், பல உயிர்களை வீடு பெறுவித்து என்க. நின்று - ஒரு நிலையே நின்று. ` எங்கும் ஆகி நிமிர்ந்தார் ` என்க. நிமிர்தல், இங்குப் பரத்தல் மேலது. கொன்று ஆடும் - உயிர்களைக் கொன்று திரிகின்ற. கோலம் - அழகு. பழனை, ` பழையனூர் ` என்பதன் மரூஉ. ` பழையனூர் என்பது ஊர் ` எனவும், ` ஆலங்காடு என்பது அதனை அடுத்த காடு ` எனவும் கருதப்படுதலின், ஆலங்காட்டுப் பெருமானை அவ்வூரை உடையவனாகவும் அருளிச்செய்தார். சென்று ஆடும் - தேடிச் சென்று மூழ்குகின்ற. ` மூர்த்தி, தலம், தீர்த்தம் ` என்னும் மூன்று வடிவிலும் இறைவன் இருந்து, வழிபடுதல், தங்குதல், மூழ்குதல் ` என்னும் இச் செயல்களின்வழி உயிர்கட்கு அருள்புரிதல் நோக்கி, ` சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார். திருவருளே உண்மைச் செல்வம் ஆதலின், அதனை உடைய சிவபிரானே, ` செல்வன் ` என்றும், ` திருவாளன் ` என்றும் சொல்லப்படுவான். ` செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே ` ( தி.1. ப.80. பா.5.) அதர்வசிகை உபநிடதமும், சர்வைஸ்வரிய சம்பந்நர், ` சர்வேஸ்வரர், சம்பு ` எனக் கூறிற்று.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
78. తిరువాలంగాడు
తిరువళ్ళూర్ - అరక్కోణం రైలుమార్గంలో స్టేషన్ మంచి అయిదు కి.మీ.దూరంలో ఉంది.
నటరాజస్వామి నాట్యమాడే అయిదు సభల్లో ఇది రత్నసభ. కాళికాదేవిని ఊర్థ్వతాండవంలో శివుడు ఓడించిన స్థలం. ఇక్కడ శివుడు పతంజలి కార్క్కోడన్ అనే పేరుతో, వ్యాఘ్రపాదర్ మూంజికేసర్ అనే పేరుతోను వ్యవహరింపబడుతున్నాడు. కారైక్కాలై అమ్మైయార్ (నాయనార్లలో ఒకరు) తలకిందులుగా కైలాస యాత్రకై బయలుదేరిన క్షేత్రం. స్వామిపేరు దేవర సింగప్పెరుమాళ్. ఊర్ధ్వతాండకేశ్వరుడు. దేవేరి వండార్ కుళలి.
లోకాలు, వాటిలోని సర్వమూ తానే అయినవాడు. ప్రళయాలను పెక్కింటిని చూసి ఎన్నో జీవులకు మోక్షాన్ని ప్రసాదించినవాడు. ఒకేస్థితిలో ఉంటూ, సర్వప్రదేశాలకూ చెందినవాడై నీరు, నిప్పు, గాలి, మిన్ను అంతటా నిండినవాడు. చంపే వృత్తిగల యముణ్ని తన్నినవాడు. సర్వపుణ్యతీర్థాలూ తనదైనవాడు. తిరువాలంగాడు క్షేత్రంలో కొలువున్న పరమశివుడే. 1
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
78. तिरुवालंकाडु
प्रभु विष्व भर में सर्वव्यापी हैं। वे अप्रतिम हैं।
प्रलयकाल में विराट स्वरूप लेेने वाले हैं।
प्रभु सर्वत्र व्याप्त हैं।
पंचभूत क्षिति, जल, वायु, अग्नि, आकाष स्वरूप हैं।
मृत्यु देवता ‘यम’ को मारकर दुत्कारने वाले हैं।
सुन्दर पल़यनूर के स्वामी हैं।
तीर्थ-स्थलों में ‘भक्त’ लोग स्नान कर आनन्द का
अनुभव करने वाले तीर्थ स्वरूप हैं।
वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
In His oneness He became all the worlds;
He grew loftier and loftier during each aeon;
Poised in His abiding state He pervades everywhere;
He became water, air, fire and space;
He kicked the killer Yama; He is the Lord
Of lovely Pazhaiyanoor; He is the sacred water
Everywhere sought by pilgrims for holy bath;
He is the opulent One abiding at Tiruvaalangkaadu.
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை உடையார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை உடையார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே