கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள் கண்ணுதலோன்நண்ணுமிடம்அண்ணல்வாயில் நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில் மடுவார்தென் மதுரைநக ரால வாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு குடவாயில் குணவாயி லான வெல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே
×
6071007பதிக வரலாறு :
திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்ட சுவாமிகள் திருநெய்த்தானம் , திருமழபாடி முதலிய தலங்களைப் பணிந்து , திருப்பூந்துருத்தி சேர்ந்து , பெருமானைப் பரிவோடு வணங்கி இருப்போந்திருவடிக்கீழ் நாம் என்னும் திருக்குறுந்தொகை முதலிய பல பதிகங்கள் அருளிச்செய்து திங்களும் ஞாயிறுந் தோயுந் திருமடம் அமைத்துத் திருத்தொண்டு செய்திருக்கும் நாள்களில் பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 390) குறிப்பு : இத்திருப்பதிகம் , மேலைத்திருப்பதிகத்துள் ஓதியருளியன வும் , பிறவுமாகிய தலங்களைப் பெயர் ஒற்றுமையால் வகைப்படுத்து அருளிச்செய்தது , அப்பெயர்கள்தாம் சத்தகோடி மகாமந்திரங்கள் போல ஒருபெற்றியனவான பல்வேறு முடிபுடையனவாய் இயைந்து , ஓதுவார் உள்ளத்தில் எளிதிற் பொருந்தி நின்று பயன் தருமாகலின் . சுவாமிகளும் இதனுள் பெரும்பாலும் அத்தலப் பெயர்களைச் சொல்லுதலையே வலியுறுத்தி யருளினார் . ` அடைவு , முறைமை ` என்பன ஒரு பொருட் சொற்கள் . முறைமையாவது ஒரு தன்மைப்பட்ட பொருள்கள் தொடர்ந்து வருதல் .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும் கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடு வாயில், பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.
குறிப்புரை:
இத்திருத்தாண்டகம், ` வாயில் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.
` முல்லை வாயில் ` என்னும் பெயருடைய தலங்கள் தொண்டைநாட்டில் ஒன்றும், சோழநாட்டில் ஒன்றும் உள்ளன ; அவை முறையே, ` வட திருமுல்லைவாயில், தென் றிருமுல்லை வாயில் ` என வழங்கப்படும். ` ஆலவாய் ` என்பதே மதுரைத் திருக்கோயிற் பெயராயினும் ` ஆலவாயில் ` என்றலும் வழக்காதல் பற்றி, ` மதுரை நகர் ஆலவாயில் ` என்று அருளிச்செய்தார் ; ` நீள்கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே ` ( தி.3. ப.52. பா.1) என்று அருளிச் செய்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாடலிலும், ` ஆலவாயில் ` என வந்தது என்றலே சிறப்புடைத்தாதல் அறிக.
புனவாயில், பாண்டிநாட்டுத் தலம். குடவாயில் சோழநாட்டுத் தலம்.
அண்ணல்வாயில், நெடுவாயில் நெய்தல்வாயில், ஞாழல் வாயில், குணவாயில் இவை வைப்புத் தலங்கள்.
கடு வாயர் - கடுக்காயைத் தின்னும் வாயினை யுடையவர் ; சமணர். கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்னுதல் சுவைப் புலனை விரும்பச் செய்யும் நாவினது ஆற்றலைக் கெடுத்தற் பொருட்டு. ` மடு ` என்றது வையை ஆற்றினை. ` மடுவார் ` என்றாயினும், ` மடு ஆர் ` என்றாயினும் கொள்க. ` ஆன ` என்புழி, ` வாயில் ` என்பது எஞ்சி நின்றது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
చేదుకాయలను తినే అలవాటున్న జైనులనుంచి తప్పించి, నన్ను దాసుని చేసుకున్న కరుణామూర్తియైన పరమశివుడు ఇష్టపడి కొలువున్న స్థలాలైన అణ్ణల్వాయిల్, నెడువాయిల్, పంట పాలాలు మిక్కుటంగా ఉన్న నెయ్దల్వాయిల్, ముల్లైవాయిల్, జ్ఞాయల్వాయిల్, మదురైనగరంలోని ఆలవాయిల్, అలలు ఎగసిపడే పునవాయిల్, ఎత్తైన భవనాలున్న కుడవాయిల్, కుణవాయిల్, మొదలైన క్షేత్రాలను దర్శించి అర్చిస్తే పాపకార్యాలను చెయ్యలేరు. 7
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
कटु मुखवाले श्रमणों के चंगुल से मुझे बचाकर
अपनानेवाले प्रभु षिव अण्णलवायिल्, नेॅडुवायिल्,
नेय्दल नायिल्, तिरुमुल्लैवायिल्, ज्ञाल़ल्वायिल्,
दक्षिण मदुरै आलवायिल्, तिरुप्पुनवायिल्,
कुडवायिल्, गुणवायिल्, में प्रतिष्ठित हैं।
वहाँ जाकर प्रभु की स्तुति करने पर सभी
कर्म बन्धन विनष्ट हो जायेंगे।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Cruel karma gets not attached to them who enter
All the Vaayils such as Annalvaayil in which abides
The Lord who has an eye in His forehead and who
Redeemed me from the company of myrobalan-eaters,
Neduvaayil, Neithalvaayil rich in fertile fields,
Mullaivayil, Gnaazhalvaayil, Aalavaayil
Of the city of Madurai in the South, rich in tanks,
Punavaayil upon the billowy sea, Kudavaayil
Abounding in lofty mansions and Gunavaayil.