காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.
குறிப்புரை:
ஓதுவித்தாய் - ஓதச்செய்தனை. முன் - இளமையில் ; அமண் சார்புறுமுன் எனலுமாம். அறவுரை - தருமசாத்திரம் ; சமண் சமயத்துத் தரும போதம். காட்டி - அறிவுறுத்தி. காதுவித்தாய் - கொல் வித்தாய். அமணரோடே சேர்வித்து, அவர் என்னைக் கொல்லுமாறு முயலச் செய்தாய் என்றவாறு.
கட்ட நோய் பிணி தீர்த்தாய் :- கட்டம் - துன்பம். கலந்தருளி - என் உயிர்க்குயிராய்த் தோன்றாத் துணையாய்க் கலந்தருளி, போது வித்தாய் - சமண் சமயத்தின் நீங்கிய சைவ சமயத்திற் புகச் செய்தாய். புகுது என்பதன் மரூஉவே போது என்பது. புகுதுக - போதுக. ` போ ` முதனிலையாயின், பொருள் வேறுபடல் அறிக.
நின் பணி - நின் திருவடித் தொண்டு. பிழைக்கின் - வழுவி னால். புளியம் வளாரால் - புளியமரத்தின் வளாரினால் . மோதுவிப்பாய் - மோதச் செய்வாய். ` வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் ` ( சித்தியார் 2:- 15).
உகப்பாய் முனிவாய் - விரும்புவாய் வெறுப்பாய். ( விருப்பும் வெறுப்பும் கொள்வாய் ). ` காயத்திடுவாய் நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே ` ( தி.8 திருவாசகம் ). ` எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவும் என்றும் ` ( சித்தியார். 2:- 16) ` தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்த ` ` சரிதப் பகுதிக்கும் சமண் சமயம் புகுந்த சரிதப் பகுதிக்கும் அகச் சான்று இதிற் காண்க `. ( திரு. சி. கே. எஸ் உரை ). அறவுரை என்று நம்பிச் சென்ற அப்பர் கொன்றன்ன இன்னா செய்யப் பெற்றார் ஆதலின், ` அறவுரை காட்டிக் காதுவித்தாய் ` என்றார்.
உகப்பு - அமணர் செய்த கொடுமைகளின் பயன் சமண் புக்க பாவத்தின் கழுவாய் ஆதலின், அது திருவருளுவப்புணர்த்தும். முனிவு :- அக்கொடுமைகளின் ஏது ஆதலின் சிவனார் முனிவாயிற்று. அவன் முனிவின்றேல் அமணர் அது செய்ய வல்லரோ ? சூலை தந்ததும் முனிவே. துன்பங்களின் உய்ந்தது உகப்பு.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
कच्चियेकम्बम् में प्रतिष्ठित प्रभु!
आपने मुझे बचपन में षिक्षा प्रदान की।
फिर श्रमणों के संग उनके धर्मग्रन्थों को दिखाकर
उनके संग में रहने के लिए बाध्य किया,
मुझे दुःखाया।
शूल रोग से पीडि़त करवाकर
उस रोग से मुझे मुक्त किया।
मेरे हृदय में प्रभु प्रतिष्ठित हैं।
प्रभु मैं आपकी सेवा करते समय कुछ अपराध करूँ
तो मुझे इमली पेड़ की लकड़ी से मारिए।
मेरे अपराध को क्षमा प्रदान करें।
भक्तों को कृपा प्रदान कर रक्षा करें।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
God! you taught works on moral instruction, making me understand them.
you were the cause for the amaṇar to put an end to my life; by making me embrace their religion.
you cured me of my difficulties, physical ailments and mental worries.
residing within me you made me embrace caivam again.
if I commit any wrong in my service to you, you lash me with a tender twig of the tamarind tree.
you will be pleased with me.
you will be angry with me you can do anything to me.
ēkampaṉ in kacci?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
オートゥヴィタ・ ターヤ・ムニ・ ナラヴリイ カータ・ティ ヤマナロテー カートゥヴィタ・ ターヤ・カタ・タ ノーヤ・ピニ ティーリ・タ・ターヤ・ カラニ・タルリピ・ ポートゥヴィタ・ ターヤ・ニニ・ パニピリイク・ キリ・プリ ヤミ・ヴァラアラーリ・ モートゥヴィピ・ パーユカピ・ パーヤ・ムニ ヴァーヤ・カシ・チ ヤエカミ・パネー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
odufid daymun narafurai gaddi yamanarode gadufid daygadda noybini dirdday galandarulib bodufid daynin banibilaig girbuli yamfalaral modufib bayuhab baymuni faygaddi yehaMbane
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
ōtuvit tāymuṉ ṉaṟavurai kāṭṭi yamaṇaroṭē kātuvit tāykaṭṭa nōypiṇi tīrttāy kalantaruḷip pōtuvit tāyniṉ paṇipiḻaik kiṟpuḷi yamvaḷārāl mōtuvip pāyukap pāymuṉi vāykacci yēkampaṉē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
оотювыт тааймюн нaрaвюрaы кaтты ямaнaротэa кaтювыт таайкаттa ноойпыны тирттаай калaнтaрюлып поотювыт таайнын пaныпылзaык кытпюлы ямвaлаараал моотювып пааёкап пааймюны ваайкачсы еaкампaнэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ohthuwith thahjmun narawu'rä kahddi jama'na'rodeh kahthuwith thahjkadda :nohjpi'ni thih'rththahj kala:ntha'ru'lip pohthuwith thahj:nin pa'nipishäk kirpu'li jamwa'lah'rahl mohthuwip pahjukap pahjmuni wahjkachzi jehkampaneh Open the German Section in a New Tab
oathuvith thaaymun na'ravurai kaaddi yama'narodae kaathuvith thaaykadda :noaypi'ni theerththaay kala:ntharu'lip poathuvith thaay:nin pa'nipizhaik ki'rpu'li yamva'laaraal moathuvip paayukap paaymuni vaaykachchi yaekampanae
Open the English Section in a New Tab