தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்
.
×
4009001பதிக வரலாறு :
திருப்பூந்துருத்தியில் அமர்ந்த செஞ்சடையானாகிய பொய்யிலியைக் கண்டு, அவன் திருவடிக்கீழ் இருப்போம் என்று இருந்து, பேரின்பம் நுகர்ந்து, திருத்தொண்டு புரிந்து, தம்பிரா னார் அருள் பெற்றுத் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று செய்து பல்வகைத் தாண்டகமும் தனித் திருத்தாண்டகமும் சிவதலங்களின் அடைவு திருத்தாண்டகமும் பிறவும் பாடிய பின்னர், நம்மனோர் செல்கதியைக் காட்டிடப் போற்றி யியம்பிய திருப்பதிகம் இத் திருவங்கமாலை.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
குறிப்புரை:
தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது. மகாநாராயணோபநிடதம் சிவபிரானுக்கே எவ்வுயிர்களின் வணக்கமும் உரியது என்கின்றது. பலிதேர்வோன் எனினும் தலைவனே. ஏனையோர் தேரும்பலி தத்தம் வறுமையைக் குறித்து. (தாம் உய்யும் பொருட்டு). இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங் கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற (பிச்சைப்) பாத்திரம். சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறு கோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. `தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே` (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?` ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே. அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை (பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. `யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூரம்மான் அத்தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே` (தி.2 ப.44 பா.6). `கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே` (தி.3 ப.26 பா.8). `தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே` (தி.3 ப.26 பா.9). இத் திருமுறைக் கருத்தே கொண்டு, `எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணம் இலவே` என்றார் பொய்யாமொழியார். ஆசிரியரது திருத்தலை, ஏனையோர் தலையும் பெருவிரல் இறை ஊன்றலும் பொறாது பற்கழல அங்காந்து அலறி வீழ்ந்த வரைபொரு தோளரக்கன் தலையும் போலாது இருவரும் ஒருவனாய அவ்வள்ளல் திருவடி சுமந்து கொண்டு திரியும் (தி.4 ப.75 பா.10) பெருமையதாதலின், `தலையே` என்று அதன் பயிற்சி தோன்ற விளித்தார். ஏனைக் கண், செவி முதலியவற்றிற்கும் இவ்வாறு பொருந்துவன கொள்க. இருமுறை கூறியதன் கருத்து:- வணங்கிப் பயின்ற தலை முதலிய உறுப்புகளை யுடையாராயினும், தமக்குத் தாமே தூண்டிக்கொள்ளும் வகையில் ஒருமுறைக்கு இருமுறை தம் வாயால் ஏவிக்கொண்டு, தம் உடலின் பயனைத் தம் தலைவன் வழிபாட்டுத் திறத்தில் நிலைபெறுவித்துக்கொள்வாரானார் தாண்டகச் சதுரர். `தலைசுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா` (தி.4 ப.69 பா.2)ப் பொய்வாழ்வு வேண்டா. மெய் வாழ்வு வேண்டின், `தலையே நீ வணங்காய்` என்று ஏவுகின்றார்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
ఓతలా నీవు నమస్కరించు చిగురు -
లతల నునులేతమొగ్గల తలను ధరించి
ఓ తల పునుక కొని తిరిపెమెత్తు -
ఆతని తల వంచి నమస్కరించు
అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
(तिरुवैयारु में बहनेवाली नदी में स्नानोपरान्त अनुभव किया कि विषाल मंदिर कैलास बन गया। वहाँ अप्पर ने षिव के दर्षन किये। सर्वत्र उन्हें षिव ही दिखाई पड़े। इस भव्य दृष्य को देखकर आनन्दातिरेक में नाचने व गाने लगे। उसी सिलसिले में प्रस्तुत अंगमालै का वर्णन है।)
शीष! तुम षिव की वन्दना करो।
तुम शीषमालाधारी,
शीष-कपाल में भिक्षा प्राप्त करने वाले,
उस ‘आदि-पुरुष’ का नमन करो।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
my head!
having adorned his head with a garland of skulls.
you bow down to the chief who collects alms in a skull.
my head, you bow down to Civaṉ .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
O, Head, bow unto the Lord with garland crowned crest
Collecting offerings in a cephalic bowl, won\\\\\\\\\\\\\\\'t you?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013