செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.
குறிப்புரை:
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும் விடை கூறியருள வேண்டுதலும் அமையப்பாடியிருத்தல்பற்றி, இவற்றை `வினாவுரை` என்றனர். இத்தலைப்புடைய பிற மூன்றும் காண்க. இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன் திருமுடிச்சார்புடையது. ஈற்று வினா, திருவடிச்சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம். காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம் என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்தவரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும். திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது, மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் இயல்பே இதன் இயல்பு. முதற் பத்துத் திருப்பாடல்களுள்ளும் `சொலீர்` என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு, `வேண்டுதல் வேண்டாமை இல்லான்` ஆகிய சிவபிரான் சடையில், பகை நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச் சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது,`பிறவி ஐவாய் அரவம் பொரும் பெருமான்` (திருவாசகம் 139) என்ற கருத்தினது. `தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என அமைத்தவாறே` (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6.)
`சோழவளநாடு சோறுடைத்து` இதிலுள்ள செந்நெல் அம் கழனிப்பழனம் உடைமை, சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர், புரை - ஒத்த. துன்னி-நெருங்கி. துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. `புன்னை பொன்தாது உதிர்மல்கும் அந்தண்புகலி` (தி.3.ப.7.பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
ఎవరి పాద పద్మములను దేవతల శిరస్సున గల కిరీటములు తాకుతుంటాయో, ఆతడు, పుండరీకము లో, ఒక కొలను చెంత, నలుప్రక్కల ఎర్రని పైరుతోనిండిన వరిచేనుకు చేరువలో, పూవై పుష్పములు తెల్లని వస్త్రముపై పరచిన ఎర్రని పగడములను బ్రోలియుండ, వేంచేసియున్నాడు. ఓ ! పరంధామా! నీవు ఎర్రగా అందముగా చుట్టబెట్టిన కేశములపై త్రాచును జోడించి నెలవంకను ఎందులకు ధరించావో మాకు తెలియచేయుము
Oh Lord with whose feet the crowns of the good tevar closely come into contact, in Pūntarāy, where by the sides of the tanks adjacent to the red paddy fields, the flowers of Puṉṉai (mast-wood tree) resemble coral lying on a white cloth!
please tell me the reason for having placed the crescent with the cobra in the red and entwining caṭai.
[The decade on Kaṇtiyūr Vīrattam and Tiruvalañcuḻi are in the form of questions put to the devotees and the God respectively]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
セニ・ネ ラニ・カラ ニピ・パラ ナタ・タヤ レーセルミ・
プニ・ニイ ヴェニ・キリ ヤリ・パヴァ ラミ・プリイ プーニ・タラーヤ・
トゥニ・ニ ナリ・リマイ ョーリ・ムティ トーヤ・カラ リーリ・チョリーリ・
ピニ・ヌ セニ・サタイ ヤリ・ピリイ パーミ・プタニ・ ヴイタ・タテー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
senne langgala nibbala naddaya leseluM
bunnai fengili yirbafa laMburai bundaray
dunni nallimai yormudi doygala lirsolir
binnu sendadai yirbirai baMbudan faiddade
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
cenne laṅkaḻa ṉippaḻa ṉattaya lēceḻum
puṉṉai veṇkiḻi yiṟpava ḷampurai pūntarāy
tuṉṉi nallimai yōrmuṭi tōykaḻa līrcolīr
piṉṉu ceñcaṭai yiṟpiṟai pāmpuṭaṉ vaittatē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
сэннэ лaнгкалзa ныппaлзa нaттaя лэaсэлзюм
пюннaы вэнкылзы йытпaвa лaмпюрaы пунтaраай
тюнны нaллымaы йоормюты тоойкалзa лирсолир
пынню сэгнсaтaы йытпырaы паампютaн вaыттaтэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ze:n:ne langkasha nippasha naththaja lehzeshum
punnä we'nkishi jirpawa 'lampu'rä puh:ntha'rahj
thunni :nallimä joh'rmudi thohjkasha lih'rzolih'r
pinnu zengzadä jirpirä pahmpudan wäththatheh Open the German Section in a New Tab
se:n:ne langkazha nippazha naththaya laesezhum
punnai ve'nkizhi yi'rpava 'lampurai poo:ntharaay
thunni :nallimai yoarmudi thoaykazha leersoleer
pinnu senjsadai yi'rpi'rai paampudan vaiththathae
Open the English Section in a New Tab