திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனா ரோடு திருவீழிமிழலையில் வீற்றிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டாக , அப்பசியால் உயிர்கள் வாடின . அடியார்களும் வருந்தினர் . அதுகண்ட நாயன்மார்கள் ` கண்ணுதலான் திருநீற்றுச் சார்பினோர்க்கும் கவலை வருமோ ` எனத் திருவுளத்து எண்ணித் துயின்றனர் . அன்று இரவு இறைவன் கனவில் தோன்றி , ` கால மாறுதலினால் நீங்கள் கவல்வீரல்லீர் ; எனினும் உங்கள் அடியார் களின் வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும்வரை பீடத்தின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலுமாகப் படிக்காசு ஒவ்வொன்று அளிக்கின்றோம் ` என்று அருள் செய்தனர் . விடியலில் இருவரும் சென்று அவ்வாறே இருக்கக் கண்டு எடுத்து வந்து அடியார்கட்கு அமுதளித்தனர் . வாகீசர் திருமடத்தில் காலம் தாழ்க்காது அமுதூட்டப் பெறுதலையும் தமதுகாசு வட்டம் கொடுத்து மாற்றப் பெறுதலையும் அறிந்த சிவஞானப்பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சென்று ` வாசி தீரவே ` என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்து வாசியில்லாக் காசு பெற்று , சிவனடியார்களுக்கு நேரத்தோடு திருவமுதளித்து எழுந்தருளியிருந்தனர் . சில நாள்களில் பஞ்சம் நீங்கிற்று .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.
குறிப்புரை:
வாசி - உயர்வு தாழ்வு. (வட்டமாகக் கழிக்கும் பணம்.) மாசு - குற்றம். ஏசல் - நிந்தனை.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
కళంకమెరుగని యందు వెలసి అనుగ్రహించుచున్న ఓ ఈశ్వరా!
భక్తునకు దయతో అనుగ్రహించు సంపద విలువలు తగ్గకుండునట్లుచేసెడి ధనమును ప్రసాదించుము.
దానివలన మీకు ఎటువంటి అపకీర్తి కలుగదు! , ,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
×
ಕನ್ನಡ / கன்னடம்
92. ತಿರುವೀಳಿ ಮಿಳಲೈ
ದೋಷರಹಿತವವಾದ ತಿರುವಿಳೀಮಿಳಲೈಯಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಶಿವಮಹಾದೇವನೇ ಈ ದಾಸನಿಗೆ ಕೊಟ್ಟು ಅನುಗ್ರಹಿಸುವ ಹಣದಲ್ಲಿರುವ ಶ್ರೇಷ್ಠತೆ ಹಾಗೂ ಕನಿಷ್ಠತೆಯಾಗಲೀ ನೀಗುವಂತೆ ಮಾಡಿ ನಂತರದಲ್ಲಿ ಆ ಹಣವನ್ನು ನೀಡು ಅದರಿಂದ ನಿನಗೆ ಯಾವ ದೋಷವೂ, ನಿಂದನೆಯೂ ಇರದು.
निर्दोष मिल़लै में प्रतिष्ठित मेरे प्रभु
हमें भेदभाव मिटाने अशर्फ़ी ही दे दो।
इस मांग को प्रभु! निन्दा न समझें।
विशेष: भेदभाव का तात्पर्य यह है कि मुद्रा को
अशर्फ़ी प्रदान करो। जनश्रुति है कि अप्पर
मठ के भक्तों को अशर्फ़ी मिल गई, परन्तु
ज्ञानसंबंधर के मठ के भक्तों को स्वर्ण-मुद्रा
प्राप्त हुआ, मुद्रा को पिघलाने में देरी होते
देख ज्ञानसंबन्धर प्रार्थना करने लगे कि
प्रभु यह भेद-भाव दूर करें।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Civaṉ in Miḻalai which has no blemish.
grant me coins without discount in changing them.
there is no reproach.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)