குடவாயில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாயகி உடனுறை கோணேசுவரர்


மரம்: வாழை
குளம்: காவிரி, அமிர்த தீர்த்தம்

பதிகங்கள்: திகழுந்திருமா -2 -22 திருஞானசம்பந்தர்
கலைவாழும் -2 -58 திருஞானசம்பந்தர்

முகவரி: குடவாசல் அஞ்சல்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 612601
தொபே. 9443959839

`திருணபிந்து முனிவர்க்குச் சிவபெருமான் குடத்தின் வாயில் வெளிப்பட்டுக் குட்டநோய் தீர்த்தருளிய காரணம்பற்றி`, இப்பெயர் பெற்றது என்பர்`.

கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் 15.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. தஞ்சாவூர் - திருவாரூர் தொடர்வண்டிப் பாதையிலுள்ள கொரடாச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடக்கே 9.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரையில் தொண்ணூற்று நாலாவது தலமாகும். திருவாரூர், கும்பகோணத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

திருணபிந்து முனிவர் பூசித்துப் பேறுபெற்றார். கருடன் பூசித்து அமுதம்பெற்றுத் தானும் தன்தாயும் சாபம் நீங்கப்பெற்ற தலம். அது காரணமாகவே திருமதிலின்மேல் கருடன் உருவங்கள் வைக்கப் பெற்றுள்ளன. இத்தலத்தை ஞானசம்பந்தர் மாத்திரம் பாடியுள்ளார். அவர் பதிகங்கள் இரண்டாகும்.

இங்குள்ள கோயில் பெருங்கோயில் (மாடக் கோயில்) அமைப்பு உடையது.

``மகிழும் பெருமான் குடவாயின் மன்னி
நிகழும் பெருங் கோயி னிலாயவனே``
என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதியால் அறியலாம்.



கல்வெட்டு:

இக்கோயிலில் அம்மன் கோயில் நில மட்டத்தில் இருக்கிறது. முன் கோபுரம் பூர்த்தியாகவில்லை. கோயிலின் முன்னால் ஒரு குளம் இருக்கிறது. கோயிலின் அளவு 97மீ. X 52 மீ . ஆகும். திருக்கோயிலின் மதில் மண்டபம் கருடன்போல் இருக்கிற தென்பர்.

கோச்செங்கணான் இக்கோயிலை மாடக்கோயிலாக்கினான். இராஜ கோபுரத்திலும், இரண்டாம் கோபுரத்திலும் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. படி எடுக்கவில்லை.

குடவாயிலில் நல்லாதனார், கீரத்தனார் என இருவர் சங்கப்புலவர் வாழ்ந்திருந்தனர். நல்லாதனார் திரிகடுகம் பாடியவர். புறம் 74இல் சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன்செங் கண்ணானோடு போர்புரிந்து குடவாயில் கோட்டத்தில் சிறைகிடந்த செய்தி கிடைக்கிறது. ஆகவே சோழர் காலத்தில் இவ்வூர் சிறைக்கோட்டமாக இருந்ததெனலாம்.

இவ்வூர்ப் புராணம் உரைநடையில் உள்ளது. செய்யுள்நூல் அச்சாகவில்லை.

 
 
சிற்பி சிற்பி