கானூர் (திருக்கானூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர்


மரம்: வன்னி மரம், வில்வ மரம்
குளம்: கொள்ளிட நதி

பதிகங்கள்: வானார்சோதி -1 -73 திருஞானசம்பந்தர்
திருவினாதனுஞ் -5 -76 திருநாவுக்கரசர்

முகவரி: விட்டுணாம்பேட்டை அஞ்சல்
திருக்காட்டுப்பள்ளி
தஞ்சாவூர் மாவட்டம், 613105
தொபே. 04362 320067

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். இது பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்தில் வருவோர் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும்.

உமாதேவியார் சிவயோகத்து எழுந்தருளியிருந்தபோது இறைவன் செந்தீவண்ணராகத் திருவுருக்காட்டிய தலம். இதனை அப்பர்சுவாமிகள் `கானூரில் பரமனாய பரஞ்சுடர்` என்பார்கள். சுவாமி செம்மேனிநாதர். அம்மை சிவயோகநாயகி.



கல்வெட்டு:

இத்தலம் வடகரை இராஜராஜவளநாட்டுப் பொய்கையூர் நாட்டுப் பணிபதிமங்கலமாகிய கரிகாலசோழ சதுர்வேதி மங்கலத்துத் திருக்கானூர் என்று குறிக்கப்படுகிறது. சுவாமி பெயர் இட்சுபுரீசுவரர் என்று கல்வெட்டுக் குறிப்பாளர் எழுதுகிறார். கி.பி.1268-1308 ஆண்ட மாறவர்மன் குலசேகரதேவன் ஏதோ நிவந்தம் அளித்திருக்கிறான். பெரிய நப்பனான உத்தம சோழ நாடாள்வான் கிராமக் காவலனாக இருந்தான். இராஜாதி ராஜதேவனுடைய நான்காம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் கரிகாற் சோழீசுரமுடைய மகாதேவர் கோயில் ஒன்று குறிக்கப்படுகிறது. இங்கே திருமேற்கோயில் என்னும் விஷ்ணு கோயில் இருந்ததையும் அது குறிப்பிடுகிறது(164 of 1911).

 
 
சிற்பி சிற்பி