கச்சிநெறிக்காரைக்காடு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காமாட்சியம்மை உடனுறை காரைத் திருநாதர்


மரம்: காரை
குளம்: இந்திர தீர்த்தம்

பதிகம்: வாரணவு -3 -65 திருஞானசம்பந்தர்

முகவரி: திருக்காலிமேடு
காஞ்சிபுரம் மாவட்டம், 631501



கல்வெட்டு:

இது திருக்கச்சியில் காரைவனத்தில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. இக்காலம், திருக்காலீஸ்வரன்கோயில் என்று வழங்கப்பெறுகின்றது. இது தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்று. இது காஞ்சிபுரத்தின் வடகிழக்கில் கொல்லைவெளியில் இருக்கின்றது. இத்தலத்தில் இந்திரன். புதன் இவர்கள் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

இறைவரின் திருப்பெயர் - காரைத் திருநாதர். இறைவியின் திருப்பெயர் - காமாட்சியம்மை. தீர்த்தம் - இந்திர தீர்த்தம். மரம் - காரை, திருஞானசம்பந்தர் திருவாய்மலர்ந்தருளிய ஒரு பதிகத்தை உடையது.

 
 
சிற்பி சிற்பி