ஈங்கோய்மலை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகதாசலர்


குளம்: அமிர்த தீர்த்தம்

பதிகம்: அடியும்முடியும் -11 -10 நக்கீரதேவர்
வானத்துயர்தண் -1 -70 திருஞானசம்பந்தர்

முகவரி: மணமேடு
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம், 621209
தொபே. 04326 262744

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளி - நாமக்கல் பேருந்து வழியில் அகண்ட காவிரியின் வடகரையிலுள்ளது. தற்காலம் திருவிங்கநாதமலை என மருவி வழங்குகின்றது. அகத்தியர் ஈ உருவாய்ப் பூசித்துப் பேறு பெற்றமையின் இப்பெயர் எய்தியது.

காவிரித் தென்கரையில் உள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும் இத்தலத்தை மாலையிலும், ஒரேநாளில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும். `காலைக் கடம்பர் மத்தியானச் சொக்கர் மாலைத் திருவிங்கநாதர்` என்பது பழமொழி. கோயில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.



கல்வெட்டு:

திரிபுவனச்சக்ரவர்த்தி வீரதேவனது 36 ஆம் ஆண்டில் இராஜராஜவளநாட்டுத் திருவாலிநாட்டுத் திருவீங்கோய்மலை என வழங்கப்பட்டது. இறைவன்பெயர் திருவீங்கோய் ஊருடையார் என்று கல்வெட்டு கூறும். இக்கோயிலில் ஆளுடைய பிள்ளையார்க்கும், திருநாவுக்கரசுதேவர்க்கும், ஆலாலசுந்தரப் பெருமானுக்கும், நக்கீர தேவர்க்கும், திருப்படிமாற்றுக்கும், வியஞ்சநத்துக்கும் வடகரை இராஜ ராஜ வளநாட்டு மலை ஷ்ரீ ஜயங்கொண்டசோழ சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குடி மகாசபையார் நிலம் விற்றுக்கொடுத்தனர்.

 
 
சிற்பி சிற்பி