இரும்பைமாகாளம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு குயில்மொழிநாயகி உடனுறை மாகாளேசுவரர்


மரம்: இலுப்பை
குளம்: மாகாள தீர்த்தம்

பதிகம்: மண்டுகங்கை -2 -117 திருஞானசம்பந்தர்

முகவரி: இரும்பை அஞ்சல்
வானூர் வட்டம்
கடலூர் மாவட்டம், 605010
தொபே. 9443465502

மாகாளர் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் இது மாகாளம் எனப்பெயர் பெற்றது. இரும்பைப்பதியிலுள்ள மாகாளம் என்னும் கோயில் என்பது இத்தொடரின் பொருளாகும்.

இது புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 7.கி.மீ. தூரத்திலுள்ளது. பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) செல்லும் பேருந்துகளில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்துள்ள இரும்பை கைகாட்டி அருகே இறங்கி இவ்வூரை அடையலாம். இது தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

இத்தலத்துக்கு திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது. கோயில்முன் பெரிய இலுப்பைத் தோப்பு இருக்கிறது. கோயில் ஒழுங்காகக் கட்டப்படவில்லை. மூலத் தானத்திற்குப் பின்னது முருகன் கோயில். மூலத்தானம் கற்பணி. மற்றவை செங்கல்வேலை. ஊர் சிறியது.


கல்வெட்டு:

இக்கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன.

1. குலோத்துங்கசோழன் VI கி.பி. 1207ல் கோயிலுக்கு நிலம் 25 வேலி கொல்லைநிலம் 50 வேலி முதலியன தரப்பட்டன.

2. விக்கிரமபாண்டியன் 2 ஆம் ஆண்டு கி.பி. 1285 இக்கோயிலுக்கும் அரசிலிகோயிலுக்குமாக நிலம் விடப்பட்டது.மற்றொன்று அதுபோல நிலவரிகளுடன் தரப்பட்டது.

3. இராசராசராயர் சம்புவராயன் என்ற சிற்றரசனது 10ஆம் ஆண்டில் (190/22-193/02) பலவித வரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இரண்டு கோயில்களுக்கும் நிலதானம் செய்யப்பட்டது. இக்கல்வெட்டுக்களின்படி இந்நாடு ஜயங்கொண்ட சோழமண்டலத்து மாத்தூர்நாடு என்றும், ஊர் இரும்பைமாகாளம் என்றும், இறைவன் பெயர் திருமாகாளமுடையார் என்றும் தெரிகின்றன. இவ்வூர் சோழருக்குப் பிறகு பாண்டியனுக்கும், பிறகு சம்புவராயனுக்கும் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் அடங்கியிருந்தது அறியத்தக்கது.

இத் திருக்கோயில் கல்வெட்டுக்கள் சிதைந்தும், உள்ளே வைத்துக் கட்டப்பெற்றுமுள்ளன.இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவிரும்பை உடையார், திருமாகாளமுடைய நாயனார் என்னும் திருப்பெயரால் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளனர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இருஞ்சேரி அழகிய மணவாளப்பெருமாள் இத்திருக்கோயிலைக்கற்றளியாக்கினார்.

இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மாத்தூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது. சகலலோக சக்கரவர்த்திகள் இராச நாராயண சம்புவராயருக்கு ஆண்டு பத்தாவதில் நிலம் வாங்கி அளிக்கப்பெற்றது.(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902, 1937 No. 190-193, 176-178. See also the South Indian Inscriptions, Volume VII.)

 
 
சிற்பி சிற்பி