இரும்பூளை (ஆலங்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை காசியாரணியர்


மரம்: பூளை
குளம்: காவிரி

பதிகம்: சீரார்கழலே -2 -36 திருஞானசம்பந்தர்

முகவரி: ஆலங்குடி அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612801
தொபே. 04374 269407

பூளை என்ற செடியைத் தலத்துக்குறியாக உடைமையால் இது இப்பெயர் பெற்றது. இது இப்பொழுது ஆலங்குடி என்று வழங்கப் பெறுகின்றது.

இது தஞ்சாவூர் -கும்பகோணம் - நீடாமங்கலம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். பேருந்து வசதிகள் உள்ளன.இது காவிரியின் தென்கரையில் உள்ள தொண்ணூற்றெட்டாவது பதி. இறைவரின் திருப்பெயர் காசியாரணியர்; வட மொழியில் ஆபத்சகாயர். இறைவியாரின் திருப்பெயர் ஏலவார்குழலி.

விசுவாமித்திரர் பூசித்துப் பேறுபெற்ற பதி. இதற்குத் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ஒன்று இருக்கிறது. கோயிலில் தெற்குக் கோபுரம் பெரியது. கிழக்குக்கோபுரம் சிறியது. முப்புறமும் அகழி போன்ற திருக்குளம் சூழ்ந்திருக்கின்றது. வெகு அழகாக இருக்கிறது. குருஸ்தலம் தட்சிணாமூர்த்தி விழா சிறப்பானது. அவருக்கு உற்சவரும் மூலவரும் உண்டு. அம்மன் கோயில் தனி. இரண்டிற்கும் இடையில் ஒரு மண்டபம் உண்டு. புராணம் உண்டு.



கல்வெட்டு:

5 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1891, 1894, 1899, 1920, No. 44, 165, 3-5, 496-523).

1. குலோத்துங்கன் I காலத்து 45-ஆம் ஆண்டு (இதில் கி.பி. 1111ல்) அரசன் கலிங்கத்தின்மீது படையெடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்தப்போர் இரண்டாவது போராக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். கலிங்கப் போர் கி.பி. 1055ல் நடந்தது. ஆகவே இந்தப்போர் வட கலிங்கத்தின் மீது அநந்தவர்மன் பொருட்டு ஏற்பட்டதாம்.

2. விக்கிரமசோழன் (கி.பி. 1118-1135) காலத்து கல்வெட்டு அரசனது ஆணைமுழுவதும் பெரிதாக வெளிவந்திருக்கின்றது(See South Indian Inscriptions, Vol. V and VII).

3. இராஜராஜன் II (கி.பி.1171-1180) கல்வெட்டில் புது நிலத்தீர்வை போடப்பட்டமை கூறப்படுகிறது.

4. இராஜராஜன் II காலத்திலே 14-2-1152 தேதியில் ஏற்படுத்தப்பட்டது.

இக்கல்வெட்டுக்களில் சுத்தமலிவளநாடு முடிச்சோணாடு திரு இரும்பூளை என்கின்ற ஜனநாத சதுர்வேதிமங்கலம் என்ற பிரமதேயமாக இவ்வூர் கூறப்படுகிறது. விளக்குக்காக நிலம், பணம் முதலிய தானங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இராஜராஜன் காலத்தில் குளத்தைச்சுற்றி மாடவீதிகள், சட்டம், திட்டம் ஏற்படுத்தப்பட்டன. வரட்சிக்காலத்தில் நிலத்தைப் பழுதுபார்க்கக் கடன் கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களின் கல்வெட்டுக்களும் பாண்டியர்களில் மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவர் காலத்திலும், நாயக்க அரசர்களில் அரியப்பநாயக்கர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவ்வூரின் பழம் பெயர் இரும்பூளை ஆகும். இது முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் நித்தவிநோதவளநாட்டு முடிச்சோழ நாட்டுப் பிர்மதேயம் ஸிம்ஹவிஷ்ணு சதுர்வேதிமங்கலத்தில் அடங்கியிருந்தது. முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் கல்யாணபுரம் கொண்ட சோழவளநாட்டுப் பிர்மதேயம் ஜனநாத சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர்பெற்றது.

மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவ பாண்டியன் காலத்தில் இது ஆலங்குடியாகிய ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்னும் பெயர்பெற்றது. அந்த ஆலங்குடி என்ற பெயரே இக்காலத்தில் நிலவுவதாயிற்று.

சிவபெருமான் திரு இரும்பூளை உடைய மகாதேவர் என்னும் திருப்பெயரால் கல்வெட்டில் கூறப்பெறுகின்றனர்.

இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தைக் கட்டுவித்தவர் வாணாதிராயர் என்கிற இராசேந்திரக் கொத்தமங்கல நாடாள்வார். இக்கோயில் முதற் பிராகாரத்து மேற்குத் திருமாளிகையின் வடகோடியில் சிவஞான ஈஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்து அவருக்கு நிவந்தம் அளித்தவர் பிரம்பலூர் உடைய பெருமாள் என்கின்ற பிள்ளை கோசலராயர் ஆவர்.

அது நிகழ்ந்த காலம் சகம் 1182. அதாவது கி.பி. 1260 ஆகும். இவ்வூரில் ஏழிசைநாயக மடம் ஒன்று இருந்தது.

அரியப்பநாயக்கர் திரு இரும்பூளை உடைய மகாதேவருக்கு குடையாளி மான்யமாக ஒருவேலி நிலத்தை கங்கைகொண்ட சோழ நல்லூரில் விட்டுள்ளனர். மாறவர்மன் குலசேகரதேவ பாண்டியன் ஐந்தாம்நாள் விழாவிற்கு இருவேலி நிலத்தை அளித்துள்ளான்.(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1891, 1894, 1899, 1920, No. 44, 165, 3-5, 496-563.See also the South Indian Inscriptions, Volume VII.)

 
 
சிற்பி சிற்பி