இராமனதீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர்

மரம்: செண்பகம்
குளம்: இராமதீர்த்தம்

பதிகம்: சங்கொளிர் -1 -115 திருஞானசம்பந்தர்

முகவரி: திருகண்ணபுரம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், 609704
தொபே. 04366 292300

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். இடம் திருப் புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, கண்ணபுரம் சென்று கிழக்கேசென்றால் இத்தலத்தை அடையலாம். இராமன் பூசித்துப் பேறுபெற்றனராதலின் இப்பெயர் எய்தியது.



கல்வெட்டு:

இத்தலம் திருக்கண்ணபுரம் கல்வெட்டுக்களிற்சேர்த்தே அரசியலாரால் படியெடுக்கப்பெற்றுள்ளது. ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் இராமனதீச்சரமுடையார் என வழங்கப்பெறுவர். குலோத்துங்கசோழன் இக்கோயில் பூசைக்காகவும், அமுதுபடிக்காகவும் நிலம் அளித்தான். இந்நிலம் பின்னர் சிவபாதசேகரமங்கலம் என்று வழங்கப்பெற்றது. கோயிலைத் திருப்பணிசெய்தவனும் இவனே(533 of 1922). பின்னர், திருமலைதேவமகாராயரின் (சகம் 1397) விக்ரமாதித்தன் என்னும் அரசகாரியம் பார்ப்பவன் கோயிலைப் பழுதுபார்த்திருக்கிறான். பூசைக்கும், அமுதுக்கும் நிலம் அளித்திருக்கின்றான்(534).

கோனேரின்மை கண்டான் (யார் என்று அறியக்கூடவில்லை) காலத்தில் அருச்சகருக்குள் உரிமைப்போர் நிகழ்ந்திருக்கின்றது. அதனை நீக்கி, திருமன்னுசோழ பிரமராயனுக்கும், மானவரையனுக்கும் பூசை உரிமைகள் வழங்கப்பெற்றன(536). தனியூரான தில்லையிலிருந்த மாகேசுவரர்களால் இக்கோயில் நிலம் பஞ்சத்தால் விளையாதுபோக, இராஜராஜபாண்டிமண்டலம், வீரசோழமண்டலம், நடுவில்நாடு, ஜெயங்கொண்டசோழமண்டலம் முதலியவற்றில் உள்ள கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்துதவும்படி உத்தரவிட்டிருக்கின்றனர். இது கோயில் நிர்வாகத்தின் தனிச்சிறப்பைக் குறிப்பதாகும்(537 of 1922).

 
 
சிற்பி சிற்பி