ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களநாயகி உடனுறை பசுபதீசுவரர்

மரம்: அரச மரம்
குளம்: பிரமதீர்த்தம்

பதிகம்: புண்ணியர்பூதி -1 -8 திருஞானசம்பந்தர்

முகவரி: ஆவூர் அஞ்சல்,
வலங்கைமான் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612701
தொபே. 9486303484

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிஉள்ளது. இப்பெயரமைப்பால் தலத்தின் பெயர் ஆவூர் என்பதும், கோயிலின் பெயர் பசுபதீச்சரம் என்பதும் அறியலாம். இந்திரன், சப்தரிஷிகள், பசுக்கள் பூசித்த தலம்.



கல்வெட்டு:

அரசாங்கத்தாரால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கர்ப்பக்கிருகத்துக்கு மேல்தளம் அடிப்பக்கத்தில் இருக்கின்றது. திரிபுவனச் சக்கரவர்த்தியான மூன்றாம் இராஜேந்திர சோழதேவன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் நித்தவினோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்துப் பசுபதீஸ்வரமுடையார் கோயிலுக்கு நிலங்கள் அளித்தமையைத் தெரிவிக்கிறது(-181 of 1911).

 
 
சிற்பி சிற்பி