இடைக்கழி (திருவிடைக்கழி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு திருக்காமேசுவரர்


குளம்: சரவணப்பொய்கை
மரம்: குரா

திருக்கோயிலின் கருவறையில் முருகப் பெருமான் திருமேனி முதலில் இருக்கிறது. அவர் திருமேனிக்குச் சற்றுவடமேற்குப் பாகத்தில் இலிங்கத் திருமேனி இருக்கின்றது. இருவருக்கும் இம்முறைப்படியே விமானங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தெய்வயானை அம்மையார்க்குத் தனிக்கோயில் இருக்கின்றது. சிவபெருமானுக்குரிய அம்மன்கோயில் இக்கோயிலில் இல்லை.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் திருவிடைக்கழி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருவிடைக்கழி செல்லப் பேருந்துகள் உள.


கல்வெட்டு:

See the Annual Report on South Indian Epigraphy for the year 1925 - Nos. 263 - 2771

இக்கோயில் கல்வெட்டுக்களில் முருகப்பெருமான் திருக்குராத்துடையார் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இவ்வூரில் சேனாபதிப் பிள்ளைப் பெருந்தெருவில் குறும்பனாங்குடையான் கூத்தன் சிவதவகன் என்னும் வியாபாரி எழுந்தருளுவித்துள்ள ஐந்நூற்றுவப் பிள்ளையார்க்கு வழிபாட்டிற்குத் திருநாமத்துக் காணியாக திருவிடைக்கழிப் பெருமக்கள் நிலத்தைத் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழனின் 11-ஆம் ஆட்சியாண்டில் அளித்துள்ளனர். இவ்வூரில் திருவலஞ்சுழியுடையான் மண்டபம் என்று ஒரு மண்டபம் இருந்தது.

திருக்குடந்தைமடம் என்று ஒரு மடம் இருந்தது. அம்மடத்தில் கோக்காட்டு நாராயணன்ராமன் அருளாளப்பெருமாளை எழுந்தருளு வித்துள்ளான். அதற்குப் பொன்னம்பலநம்பி நல்லாடை மாங்குடியில் இரண்டுமா நிலத்தைக் கொடுத்துள்ளான். இது நிகழ்ந்தது திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 19-ஆம் ஆட்சியாண்டில் ஆகும்.

குன்றத்துநாராயணன், இவ்வூரில் மடம் ஒன்றை நிறுவி அதன் பொருட்டுப் போதிமங்கலத்தில் 5 வேலி சொச்சம் நிலத்தை விலைக்கு வாங்கி அம்மடத்தில் மலையாளத்திலிருந்து வந்து வேதம் படிக்கும் பிராமண மாணவர்களின் செலவினங்கட்குக் கொடுத்துள்ளான். திருவிடைக்கழிச்சபையார் அந்நிலத்தை இறையிலியாகச் செய்தனர். இந்நிகழ்ச்சி திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 13ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

அரசனுடைய கட்டளைப்படி, நான்குவேலி நிலம் இராஜராஜன் பெருவிலையாக 20750 காசுக்குப் பூவனூர் சிவதானப் பெருமாளுக்கு விற்கப்பட்டது. அச்சிவதானப்பெருமாள் அந்நிலத்தைத் திருவிடைக்கழிப் பெருமானுக்குச் சிறுகாலைச் சந்திக்குக் கொடுத்துள்ளான். இந்நிகழ்ச்சி இராஜராஜதேவரின் 8 ஆம் ஆண்டு 26ஆம் நாளில் நிகழ்ந்தது.

கற்பகஞ்சேரி நாராயணன் கட்டிய ஒரு மடத்துக்குத் திரு விடைக்கழியிலும் மற்றுமுள்ள ஊர்களிலும் அரசன் கட்டளைப்படி நிலங்கள் விடப்பட்டன. இது கோனேரின்மை கொண்டானின் 21 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்.

இரண்டாம் பிராகாரத்து வடக்குமதில் சுவரில் இரண்டு பிரதிமங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் தலைப்பில் பொற்கோயில் நம்பி, தில்லைமூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பிரதிமங்களின்கீழ், ஒரு மேடையில் ரிஷபம், அதன்கீழ் ஒரு இடையன், குடம், பாம்பு இவைகளும், இவைகளுக்கு மேற்கில் அதே சுவரில் ஆறு உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவது உருவம் ஓர் அரசனாகக் காட்சியளிக்கிறது. இந்நிகழ்ச்சி இத்தல வரலாற்றைக் குறிக்கலாம்.

 
 
சிற்பி சிற்பி