வெண்பாக்கம் (திருவெண்பாக்கம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மின்னலொளியம்மை உடனுறை ஊன்றீசுரர்


மரம்: இலந்தை
குளம்: அக்கினி

பதிகம்: பிளையுளன -7 -89 சுந்தரர்

முகவரி: பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
திருவள்ளூர் மாவட்டம், 602023
தொபே. 044 27693559

இது தொண்டை நாட்டுத்தலங்களுள் ஒன்று. வெவ்வளூர் நிலையத்துக்கு பதினோரு கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இவ்வூர்ப் பதிகத்தில் `உளோம் போகீர்` என்று வருவதால் இப்பக்கத்தவர் இவ்வூரை உளம்பூதூர் என்றே கூறுவர். சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் வசதியின் பொருட்டு இக்கோயில் அடியோடு பெயர்த்து வேறு ஒரு இடத்தில் வைத்துக்கட்டப்பட்டுள்ளது.

இவ்வூரின் பெயர் வெண்பாக்கம் ஆயினும், இங்குள்ள கோயிலின் பெயர் வெண்கோயில் என்பதாகும். இது இவ்வூர்ப் பதிகத்தில் பத்தாம் திருப்பாட்டில் `வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன` என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவாக்கால் அறியக்கிடக்கின்றது.

ஒற்றியூரில் ஊன்றுகோல் அருளுமாறு வேண்டியதற்கு, இத்தலத்தில் அதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கொடுத்தருளினார். இச் செய்தி `ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே` என்னும் இத்தலத்துத் தேவார அடியால் விளங்கும்.

இறைவர்: ஊன்றீசுரர். இறைவி: மின்னலொளியம்மை. சுந்தர மூர்த்தி நாயனார் காஞ்சீபுரம் போகும் வரையில் அவர்முன்னே இறைவியார் மின்னல்போலத் தோன்றித் தோன்றி மறைந்த காரணத்தால் இப்பெயர் வந்தது என்பர். தல விருட்சம்: இலந்தை மரம்.

இங்குள்ள நந்தியெம்பெருமானின் வலது கொம்பு சிறிதளவு ஒடிந்திருக்கின்றது. சுந்தமூர்த்தி சுவாமிகளின் ஊன்றுகோல் பட்டு அது ஒடிந்துவிட்டது என்பர். இந்நந்திதேவர்க்கு அருகில் சுந்தரமூர்த்தி நாயனாரது கல் பிரதிமை ஊன்றுகோலுடன் எழுந்தருளிவிக்கப்பட்டுள்ளது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி