மாந்துறை (திருமாந்துறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அழகம்மை உடனுறை ஆம்பிரவனீசுவரர்


மரம்: மா மரம்
தீர்த்தம்: கணபதி வாய்க்கால்

பதிகம்: செம்பொனார் -2 -110 திருஞானசம்பந்தர்

முகவரி: இலால்குடி வழி
இலால்குடி வட்டம்
திருச்சி மாவட்டம், 621703
தொபே. 9942740062

இது வடகரை மாந்துறை என்று வழங்குகின்றது. காவிரிக்குத் தென்கரையில் ஒரு மாந்துறை இருக்கின்றது. இதை வேறு பிரித்துக் காட்டுதற்கு வடகரை மாந்துறை என்னும் பெயர் வழங்குகிறது. தென்கரைமாந்துறை வைப்புத் தலமாகும். தனக்கெனத் தனிப்பதிக மின்றி, வேறு ஓர் பதியில் வைத்துப் பாடப்பட்டது வைப்புத் தலம் என்னும் பெயர்பெறும்.

இது லால்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கில் 5.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரி வடகரையில் ஐம்பத்தெட்டாவது தலமாகும். திருச்சிராப்பள்ளியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

இறைவர் திருப்பெயர் ஆம்பிரவனநாதர். இறைவி திருப் பெயர் அழகம்மை.

மருதவானவரும் (மருத்துக்களும்) கண்ணுவ முனிவரும் பூசித்துப் பேறுபெற்றனர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

இதற்கு ஆம்பிரவனம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆம்பிரவனம் என்றால் மாமரங்கள் உள்ள காடு என்று பொருள்.



கல்வெட்டு:

சோழர் கல்வெட்டுக்கள் இரண்டு (22-234/27) படியெடுக்கப் பட்டன. இராஜராஜன் பதினைந்தாம் ஆண்டு வானவ நாயக்கன் பெருந்திருக் குடிகள் வரி கொடுக்க முடியாது வெளி யேறவே, மீண்டும் அவர்களை அங்கே குடிவைத்தமையைத் தெரிவிக்கிறது.

இராஜராஜன் பதினாறாம் ஆண்டுக் கல்வெட்டு நந்தவனம் வைப்பதற்காகக் கொடுத்த நிலத்தின் வரியைத் தள்ளுபடி செய்ததைக் கூறுகிறது.

 
 
சிற்பி சிற்பி