மாகறல் (திருமாகறல்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு புவனநாயகி உடனுறை அடைக்கலங்காத்த நாதர்


மரம்: எலுமிச்சை
குளம்: அக்கினி தீர்த்தம் சேயாறு

பதிகம்: விங்குவிளை -3 -72 திருஞானசம்பந்தர்

முகவரி: மாகறல் கிராமம் அஞ்சல்
காஞ்சிபுரம் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631603
தொபே. 044 27240294

காஞ்சீபுரத்திற்குத் தெற்கே 20. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தொண்டைநாட்டுத் தலங்களுள் இது ஏழாவது. பிள்ளையார் - பொய்யாப்பிள்ளையார். இறைவரின் திருப்பெயர் அடைக்கலங்காத்த நாதர், அகத்தீசுவரர். இறைவியின் திருப்பெயர் புவனநாயகி. தீர்த்தம் 1. அக்நிதீர்த்தம். இது கோயிலுக்கு அக்நிமூலையில் இருக்கிறது. இதில் நீராடி அகத்தீசுவரரை வணங்கினால் எமலோக பயம் நீங்கி சிவலோகத்தில் எப்பொழுதும் வாழலாம் என்னும் கருத்துப்பட வடமொழியில் ஒரு சுலோகம் இருக்கிறது என்பர். 2. சேயாறு. இது இத்தலத்திற்குத் தெற்கில் ஓடுகிறது. இத்தலத்தில் சோமவார தரிசனம் விசேடமாகும். பிள்ளைப்பேறு இல்லாதவர் இக்கோயிலை உடலால் வலம் வந்தால் பிள்ளைப்பேற்றை அடைவர் என்பர். இத்தலத்தைத் தேவேந்திரன் வழிபட்டுப் பேறுபெற்றான். இறைவரின் திருமேனி உடும்பைப்போல் இருக்கின்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

இவ்வூர்த் திருக்கோயிலில் சோழமன்னர்களில் ``பூமேவி வளர் திருப்பொன்மாது புணர நாமேவு கலைமகள் நலம் பெரிது சிறப்ப`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவர், ``கடல் சூழ்ந்த பார்மன்னரும் சீர்மாதரும் அடல்சூழ்ந்த போர்மாதரு அமர்ந்துவாழ`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், மூன்றாங் குலோத்துங்க சோழதேவர், இவர்கள் காலங்களிலும்; பாண்டியரில் ``எம்மண்டலமும் கொண்டருளிய`` சுந்தரபாண்டிய தேவர் காலத்திலும் விசயநகரவேந்தர்களில் வீரதேவமகாராயர், கம்பண்ண உடையார் இவர்கள் காலங்களிலும், தெலுங்குச் சோழரில் விசயகண்டகோபால தேவன் காலத்திலும் செதுக்கப்பட்ட கல் வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளுள் இறைவர் ஆளுடையார் திரு அகத்தீச்சரமுடையார், மாகறல் உடைய நாயனார், திரு அகத்தீச்சர முடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டுக்கு உட்பட்டிருந்தது.

கோச்சடைய பன்மரான எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவரின் ஏழாவது ஆண்டில் இந்த அகத்தீசுவர முடைய நாயனாரின் சந்நிதியில் புதிதாகத் திருவீதிகளும் கண்டு, திருமடைவிளாகமும் ஏற்றினவன், மாகறல் பட்டியர் போயன் காமன் வரதன் ஆவன்.

அளிக்கப்பெற்ற நிவந்தங்களில் சில:

மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில், எயில்கோட்டத்து இருமரமான குலோத்துங்கசோழ நல்லூரில் விளைநிலம் முப்பது வேலியும் ஏரியும், ஊர்நத்தமும் கொல்லை நிலம் பதினொரு வேலியும் ஆக இந்த நாற்பத்தொரு வேலியும் பழந்தேவதான இறையிலி என்று இந்த அகத்தீச்சரமுடையார்க்குத் தேவதான இறையிலியாக விடப்பட்டுள்ளது. கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவர் திருவிளாகம் பெரும்பற்றப் புலியூரில் எழுந்தருளியிருக்கப் பெரிய உடையார் தேவரத்தே கேட்டருளி இத்தேவர்க்குத் தேவதான இறையிலியாக எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு இருமரமான குலோத்துங்க சோழ நல்லூரில் ஈராயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைங்கலனே முக்குறுணி நெல் விளையக் கூடிய நிலத்தை விடுமாறு திருவாய் மொழிந்தருளினார் என்று ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

முருகன் கோயிலைப்பற்றிய செய்தி:

இவ்வூரில் திருமேற்கோயில் என்னும் திருமால் திருக்கோயில் இருக்கின்றது. அது இக்காலம் வைகுந்தப்பெருமாள் கோயில் எனக் கூறப்படுகிறது. அக்கோயில் தாயார் சந்நிதியில் உள்ள கல்வெட்டு, முருகன் திருக்கோயிலைக் கட்டியவன் அண்டம்பாக்கம்கிழான் காழன் ஆவன் என்பதை உணர்த்துகின்றது.

 
 
சிற்பி சிற்பி