புள்ளமங்கை (திருப்புள்ளமங்கை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அல்லியங்கோதை உடனுறை ஆலந்துறைநாதர்


குளம்: காவிரி

பதிகம்: பாலுந்துறு -1 -16 திருஞானசம்பந்தர்

முகவரி: பசுபதிகோயில் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 614206
தொபே. 04374 241257

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். பசுபதிகோயில் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3. கி.மீ. தஞ்சையை அடுத்துள்ள ஐயம்பேட்டையிலிருந்து கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் உள்ளது. ஊர்ப்பெயர் - புள்ளமங்கை. கோயிற்பெயர் ஆலந்துறை. தேவர்கள் அமுதங் கடைந்தபோது உண்டான விடத்தை அமுதுசெய்த இடம் ஆதலின் ஆலந்துறை எனத் திருக்கோயில் வழங்கப்பெறுகின்றது. தலம் திருப்புள்ளமங்கை. இன்று பசுபதிகோயில் எனவும் வேளாளப் பசுபதிகோயில் என அடைமொழி சேர்த்தும் வழங்குகிறது. பிரமன் பூசித்ததலம். புள்ளமங்கை என்பதற்கேற்பக் கோபுரத்தில் கழுகுகள் எப்பொழுதும் வசித்துவருகின்றன. `பொந்தின் இடை தேனூறிய` என்னும் அருளாளர் வாக்கிற்கியையப் பொந்துகளில் எல்லாம் தேனடைகள் காணப்படும்.

திருச்சக்கரப்பள்ளியின் சப்த ஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் ஆலந்துறைநாதர், இறைவி அல்லியங்கோதை. பசுபதிநாதர் எனவும் வழங்கும். தீர்த்தம் காவிரி.



கல்வெட்டு:

அரசியலாரால் கி.பி. 1921 இல் படியெடுக்கப்பட்ட 546 முதல் 559 வரையுள்ள பதின்மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன.

 
 
சிற்பி சிற்பி