ஆப்பாடி (திருவாப்பாடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாயகியம்மை உடனுறை பாலுகந்தநாதர்


மரம்: ஆத்தி
குளம்: தீர குண்டம்

பதிகம்: கடலகமேழினோ -4 -48 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பனந்தாள் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612504
தொபே. 9442167104

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப் பனந்தாளுக்குத் தென்மேற்கில் 2. கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது இத் திருத்தலம்.

தொறுப்பாடி` என்றும் ஓர் ஊர் இப்பொருளில் உளது. பண்ணொடு பாடல்தன்னைப் பரவுவார் பாங்கர்` (பா. 468) `இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியார்` (பா. 471) `பண்திறல் கேட்டுகந்தபரமர் ஆப்பாடியார் (பா. 475) என்றவற்றால், இத்தலத்தின் இறைவரது பெயர் `பாடலுகந்தார்` என்று இருந்து மருவியது போலும். ஆப்பாடி என்றதன் ஆவைநோக்கிப் பாலுகந்த நாதர் என்பதும் பொருத்தமாகத் தோன்றும். அஃது உண்மை ஆகாது.

தலச்சிறப்பு: இத்தலத்தின் தனிச்சிறப்பு `சண்டேசுர நாயனார் வெண் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்துப் பூசித்த வரலாறாகும். சேய்நலூரில் வாழ்ந்த சண்டேசுர நாயனார் இத்தலத்தில் ஆனிரைகளை மேய்த்து ஆத்தியின்கீழ் ஆலமர் செல்வனுக்கு ஆவின்பாலைக்கறந்து அபிஷேகித்து, இறைவனால் தொண்டர்களுக்கு அதிபனாக்கப்பெற்று இறைவன் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் தந்தருளப் பெற்றார். சண்டீசர் என்ற பதமும் இவர்க்கு இத்தலத்தில்தான் கிடைக்கப்பெற்றது.

இதனைப் பெரியபுராணத்துள்(தி.12) சண்டேசுர நாயனார் புராணப் பகுதியில் விரிவாகக் காணலாம். தேவாரத் திருப்பதிகங்கள் பலவற்றிலும் இவர்கள் வரலாறு குறிக்கப்பெற்றுள்ளது.

``சண்டியார்க் கருள்கள் செய்த தலைவர் ஆப்பாடி யாரே``
என்று அப்பரடிகள் அருளிச்செய்கின்றார்கள்.

இத்தலத்தைக்குறித்த மற்றொரு வரலாறும் உண்டு. ஆப்பாடியில் இருந்த இடையர்குலத் தோன்றல் ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச்செல்லும்போது வழியில் நாடோறும் கால் தடுக்கிப் பாற்குடம் கவிழ்ந்து கொண்டுவருதலை அறிந்து அவ்விடத்தைச் சினங்கொண்டு கையிலிருந்த அரிவாளால் வெட்டினான். அவ்விடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதிபடிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார்.

இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தந்தணித்து இறைவன் இன்னருள் புரிந்தார் என்பது.

இத்தலத்திற்கு அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரத் திருப் பதிகம் ஒன்று உள்ளது. இத்தலம் முன்பு திருப்பனந்தாள் ஷ்ரீ காசி மடத்துக்குச் சொந்த மாயிருந்தது. இப்போது அறங்காவலர் குழுவினர் இத் திருக் கோயிலைப் பரிபாலித்து வருகின்றார்கள்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பிற்காலச் சோழ மன்னர்களில் இரண்டாம் இராஜராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியரில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியதேவர் காலத்திலும்; பிற்காலப் பல்லவ மன்னரில் சகல புவனச் சக்கரவர்த்தி கோப்பெருஞ் சிங்கதேவர் காலத்திலும்; விசய நகர பரம்பரையினரில் வீர பொக்கண்ண உடையார் மகனார் அரியப்ப உடையார் காலத்திலும்; தேவராய மகனார் மல்லிகார்ச்சுன மகாதேவர் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

See the Annual Reports on South Indian Epigraphy for the year 1932 No. 81-88.
இக்கல்வெட்டுக்களில் இறைவர் திரு ஆப்பாடி உடையார் என்றும், நடராசர், சொக்கக்கூத்தர் என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

இரண்டாம் இராஜராஜசோழதேவர் காலத்தில் இக்கோயில் தைப்பூச விழாவிற்கும், மூன்றாங் குலோத்துங்கசோழதேவர் காலத் தில் சொக்கக் கூத்தருக்கும் நிவந்தங்கள் அளிக்கப் பெற்றிருந்தன. இவைகளுள் சொக்கக் கூத்தர்க்கு நிவந்தம் அளித்தவர் மிழலைநாட்டுச் சேய்ஞலூர் உய்யக்கொண்ட பிள்ளை ஆவர்.

இவ்வூர் மிழலை நாட்டிற்கு உட்பட்டிருந்தது. அரியப்ப உடையார் காலத்துக் கல்வெட்டு ஆகவராமன் பணம் என்னும் ஒரு நாணயத்தின் பெயரைக் குறிப்பிடுகின்றது.

 
 
சிற்பி சிற்பி