பழுவூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார்


மரம்: ஆலமரம்
குளம்: காவிரி

பதிகம்: முத்தன்மிகு -2 -34 திருஞானசம்பந்தர்

முகவரி: கீழ்ப்பழவூர் அஞ்சல்
அரியலூர் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம், 621707
தொபே. 9865078578

ஆலமரத்தைத் தலமரமாக உடைமையால் இது இப்பெயர் பெற்றது. பழு - ஆலமரம். பழுவூர் மேலப்பழுவூர், கீழப்பழூவூர் என்னும் இரு பகுதிகளாக இருக்கின்றது. இவற்றுள் மேலப்பழுவூர் மறவனீச்சரம் என்னும் கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது. கீழப்பழுவூரே தேவாரம் பெற்ற தலம்.

திருவையாற்றிலிருந்து அரியலூருக்குப் போகும் பேருந்துப் பெருவழியில் இருக்கின்றது.

காவிரிக்கு வடகரையில் ஐம்பத்தைந்தாவது தலம். இறைவர் திருப்பெயர் வடமூலநாதர். இறைவி திருப்பெயர் அருந்தவநாயகி. இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. பரசுராமர் தம் தாயைக்கொன்ற பழி நீங்கப் பூசித்த தலம்.

சோழ சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப்பற்றிய கல்வெட்டுக்கள் மேலப்பழூவூரில் காணக்கிடைக்கின்றன. அவர்கள் இங்குவந்த காலத்திலேயே இக்கோயில் பூசனைக்கு மலையாள அந்தணர்களை உடன் கொண்டுவந்துள்ளார்கள். அது காரணம் பற்றியே,

``அந்தணர்க ளான மலையாள ரவரேத்தும்
பந்த மலிகின்ற பழுவூ ரரனை``
என ஞானசம்பந்தர் குறிப்பிட்டிருக்கவேண்டும்.



கல்வெட்டு:

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. எல்லாம் சோழர்களுடையன. இரண்டுநாழி அரிசிக்கு இரண்டுமா நிலம் தரப்பட்டது. திருமஞ்சனத்திற்கு 50 காசு தானம் நிலக்கிரயம், விளக்குத்தானம். பொன்னாபரண தானம், செப்புப் பாத்திரதானம், விளக்குக்காக இரண்டு கழஞ்சு தானம், நித்தியபடித் தானம், இரண்டு நாழி அரிசிக்கு மூன்றரைமா தானம் முதலியன இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

சோழர்வம்சம் முழுவதும் இக்கல்வெட்டுக்களில் எழுதி யிருக்கிறபடியால் இந்தக்கோயில் சிறந்து விளங்கியிருக்கவேண்டும். இக்கல்வெட்டுக்களால் பல அரசியல் செய்திகளை அறியமுடிகிறது. இக்கோயிலுக்குப் பலர் விளக்குவைப்பதற்காக ஆடுகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுள் ஆடவரும் பெண்டிரும் உளர்.

விஜயநகரத்தார் நாளில் மல்லிகார்ச்சுனராயன் காலத்தில் மூன்று ஊர்களில் முப்பது பொன்வரி தள்ளுபடி செய்யப்பட்டது. மல்லரச தண்ட நாயக்கர், ஆராதனைக்காக ஒரு ஊரைச் சர்வமானிய மாகக் கொடுத்தார். இரவிமணியன் என்பான் இக்கோயிலுக்கு ஒரு மண்டபங்கட்டிக் கொடுத்துள்ளான்.

 
 
சிற்பி சிற்பி