பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஆவுடைநாயகி உடனுறை பரங்கிரிநாதர்


மரம்: வில்வம்
குளம்: சரவணப்பொய்கை. காசிதீர்த்தம்

பதிகங்கள்: நீடலர்சோதி -1 -100 திருஞானசம்பந்தர்
கோத்திட்டை -7 -2 சுந்தரர்

முகவரி: திருப்பரங்குன்றம் அஞ்சல்
மதுரை மாவட்டம், 625005
தொபே. 0452 2482248

பாண்டிய நாட்டுத்தலம். மதுரைக்கு அருகில் மேற்குத் திசை யில் உள்ளது. பேருந்துகள் பல உள்ளன.

இது முருகனது ஆறு படைவீடுகளில் ஒன்று. முருகன் தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்ட தலம். முருகன் வழி பட்ட தலம். சுவாமி பெயர் பரங்கிரிநாதர். அம்மை ஆவுடைநாயகி. தீர்த்தம் சரவணப்பொய்கை. மலைமேல் காசிதீர்த்தம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் பலரக மீன்கள் பார்ப்போர் கண்ணைக்கவரும். நக்கீரர் வாழ்ந்த நன்னகரம். இத்தலம் மதுரைக்குத் தென்மேற்கில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.



கல்வெட்டு:

இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பவை பதினொன்று. ஆனால் அவைகள் தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல. கி.பி. 1843 இல் வீரசிம்மநாயுடு என்பவன் மரபில் வந்த மங்கம்மாள் கோயிலுக்குச் சிறிது தானம் வழங்கினாள். சுந்தரபாண்டியதேவன், வீரநாராயண குளத்திற்குக் கீழ்ப்புறமிருந்த அம்பாண்டியபுரமாகிய புளிங்குன்றூர் கிராமத்தைப் பூசைக்கும் பணிக்கும் அளித்தான். அதில் கடவுள் பெயர் சுந்தரபாண்டீசுவர முடையார் என்று குறிக்கப்படுகிறது. முகம்மதிய அரசாங்கத்தில் திவானாயிருந்த ராஜகோபாலராயர் ஐரோப்பியர் படை மதுரையில் புகுந்து, கோயிலை அழித்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, வயிராவி முத்துக்கருப்பன் குமாரன் குட்டி என்பவன் எதிரிப்படை களைத் தடுப்பதற்காகக் கோபுரத்திலிருந்து கீழே விழ, அவன் பரம்பரையினருக்கு இறையிலியாகச் சில நிலங்கள் அளித்த செய்தி அறியப்படுகிறது.

 
 
சிற்பி சிற்பி