பயற்றூர் (திருப்பயற்றூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காவியங்கண்ணி உடனுறை திருபயற்றுநாதர்


மரம்: சிலந்தி மரம்
குளம்: கருணா தீர்த்தம்

பதிகம்: உரித்திட்டார் -4 -32 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பயத்தங்குடி அஞ்சல்
கங்காளஞ்சேரி
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609701
தொபே. 04366 272423

இத் தலம் காவிரியின் தென்கரையில் நாகை மாவட்டத்தில் நன்னிலம் கூற்றத்தில் மயிலாடுதுறை - காரைக்குடி புகைவண்டி வழியில் திருவாரூருக்கு முன் உள்ள விற்குடிப் புகைவண்டி நிலையத்தில் இருந்து கிழக்கே 5. கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

தல வரலாறு: இத் தலத்தே பயிரவ மகரிஷி பெருமானைப் பூசித்திருக்கிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்புகொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடற்றுறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டு தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். அவர் வேண்டுகோளின்படி மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாயின.

வணிகரும் மகிழ்ந்து வரியில்லாமல் சென்றார். பின் பயறு மிளகாகியது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது. பஞ்சநதவாணன் என்பவனின் கண்ணோய் நீங்குதற்காக நிலம் கொடுத்த செய்தி இத்தலத்தின் முதல் கல்வெட்டினால் அறியப்படுவதால் யாரேனும் கண்ணோய் அடைந்திருப்பின் இத்தலத்தினை அடைந்து கருணாதீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும் திருப்பயற்றுநாதனையும் வழிபடின் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.



கல்வெட்டு:

கருவறையின்மேல் புறச்சுவர் அடிப்பகுதியில் உள்ளது. ``ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்குயாண்டு 25 ஆவதின் எதிராமாண்டு(இதனால், சௌரமானம் தமிழகத்திலிருந்த உண்மை புலனாகும். `திங்கள்` சாந்திரமானம் குறித்தது. முத்து. சு.)கன்னி நாயிற்றுப் பூர்வபட்சத்துப் பஞ்சமியும் புதன்கிழமையும் பெற்ற உரோகிணி நாள் திருப்பயற்றூரில் திருநாமத்துக்காணியாக விற்றுக்கொண்ட பயற்றூருடையான் பஞ்சநத வாணன். ஆன கண் பெற இனமக்களால் பொன் ஆழ வீசித் தனம் பெற்று உடைய கொண்ட புத்த.....திருச்சிற்றம்பல முடையா னெழுத்து கண்ணாக விலை கொண்ட கிடங்கு நிலம் அரைமாவுக்கும் அறுநூறுகாசு விலையாக முரனிழுமாழிதித்.......பியச் சிலவும் எழுதினது இப்படி இவை புத்தமங்கலமுடையான் திருச்சிற்றம்பல முடையான் எழுத்து என்றும் இப்படிக்கு.....வாருடையான்.....வீதி விடங்கப்பெருமான் எழுத்தென்றும் மேற்படி இப்படி அறிவேன் பயற்றூருடையான் தில்லைநாயகன் பெரு.......எழுத்தென்றும் மேற்படி.....யான் பிச்சதேவன் எழுத்தென்றும் மேற்படி இப்படி அறிவேன் புலியூர்க்கிழவன் உன்னாகிட்டார் எழுத்து என்றும் மேற்படி பிரமாணம் எழுதினமைக்கு இவ்வூர் மத்யஸ்தன் பூசங்குடையார் திருவையாறுடையான் சங்க.......எழுத்து அறுநூறும் கிட்டதுவ``.

முதல் கல்வெட்டில் கூறப்பெற்ற செய்திகள்: இத் திருப்பயற்றூரில் பஞ்சநதவாணன் என்பவனுக்கு நோயால் வருந்திய கண் நன்றாகும்படி, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர்.

கல்வெட்டின் தொடக்கத்தில் ஸ்வஸ்தி என்று இருப்பது மங்களம் உண்டாகுக என்ற பொருளைத் தருகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குத் தலைவன் என்ற பொருளைத் தருகிறது.

இதில் குறிக்கப்பெற்ற சோழ அரசன் இரண்டாம் இராஜராஜன் அல்லது மூன்றாம் இராஜராஜனாக இருக்கவேண்டும்.

இரண்டாம் இராஜராஜன் என்பவன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்த இரண்டாம் குலோத்துங்கனுடைய மகன் ஆவான். இந்த இராஜராஜன் கி.பி. 1146 இல் சிங்காதன மேறினான். மூவருலா என்ற நூலுள் ஒட்டக்கூத்தர் இவனை இரண்டாவது உலாவின் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியுள்ளார். மூன்றாம் இராஜராஜனாயின் இவன் காலம் 12 ஆம் நுற்றாண்டின் கடைப்பகுதி யாக இருக்கவேண்டும். எனவே இக் கல்வெட்டுக்கள் சுமார் 750 ஆண்டுகட்கு முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன.

 
 
சிற்பி சிற்பி