நாலூர்மயானம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீச்சரர்


மரம்: பாலச மரம்
குளம்: ஞான தீர்த்தம்

பதிகம்: பாலூருமலைப் -2 -46 திருஞானசம்பந்தர்

முகவரி: திருச்சேறை அஞ்சல்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 612605
தொபே. 9443959839

கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 16 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையில் தொண்ணூற்றாறாவது தலம், கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் ஞானபுரீச்சரர். இறைவி திருப்பெயர் ஞானாம்பிகை. இது நான்கு வேதங்களும் வணங்கிய பதி. ஆபத்தம்ப இருடியால் பூசிக்கப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

இவ்வூரார் அடிக்கடி சிவபெருமான் திருமேனிமேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்குப் ``பாலூருமலைப்பாம்பும் பனிமதியுமத்த மும் மேலூரும் செஞ்சடையான்`` என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.



கல்வெட்டு:

இக்கோவிலில் 23 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் சோழர்களுடைய எழுத்துக்களே. கி.பி. 10, 11, 12,13 நூற்றாண்டுகளில் நாலூர் என்பது செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம். சுவாமிபெயர் திருமயானத்துப் பரமசுவாமி, மூலத்தானத்து மகாதேவர், பிரமீசுரத்து மகாதேவர், என்று உள்ளன. மேலும் கோயிலில் அகத்தீசுவரரை உடையர் கோயில் இருக்கிறது. அதற்குத் தனியாக ஆதாரங்கள் செய்யப்பட்டன. நாலூர் வானவர்மாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் பெற்றிருந்தது. நாலூரில் திருக்கச்சபீசுரத்துப் பெருமாள் காமபரமேசுரத்துப் பெருமாள் திருநாராயண விண்ணகரம் முதலிய தளிகளும் இருந்தன. நாலூரில் ஊர்ச் சபை இருந்தது.

காவிரியின் தென்கரையில் செம்பியன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஒரு ஊர் இருந்தது. கடைத்தெருவில் அங்காடிக்கூலி என்ற ஒரு வரி வசூலித்துக் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோயிலுக்கு முன்னால் இராஜராஜன் என்ற பெயரில் ஒரு பெரிய மண்டபம் இருந்தது. அதில் ஊர்ச்சபையார் கூடித் தீர்மானங்கள் செய்தனர், நாலூர் வியாபாரி நாரணன் சோழமகன் ஆன திருநாறக் காயன் 12 விளக்குக்களுக்காக 12 ஈழக்காசு தந்தான். செம்பியன் குடவாயில் என்ற ஆலப்பொழில் பெண் ஒருத்தி இக்கோயிலுக்கு 2 விளக்குக்களைத் தந்தாள். நாலூரில் ஒரு புளிய மரத்தின்கீழ் ஊரார் கூடிக் கோயிலுக்கு விரோதமாக இருக்கும் ஆட்கள் கிராமத் துரோகிகள் ஆகி சிவனைத் தொட மாட்டார் ஆவார்கள் என்று தீர்மானம் செய்தார்கள். (இராஜராஜன் 3 காலம்)

 
 
சிற்பி சிற்பி