நறையூர்ச்சித்தீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அழகம்மை உடனுறை சித்திநாதர்


மரம்: பவளமல்லிகை
குளம்: பிரம தீர்த்தம், தேன்சித்தி தீர்த்தம்

பதிகங்கள்: ஊருலாவுபலி -1 29 திருஞானசம்பந்தர்
பிறைகொள் -1 -71 திருஞானசம்பந்தர்
நேரியனாகு -2 -87 திருஞானசம்பந்தர்
நீரும்மலரும் -7 -93 சுந்தரர்

முகவரி: நாச்சியார்கோயில் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612102
தொபே. 0435 2467343

சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலம். கும்பகோணம் நாச்சியார்கோயில் பேருந்தின் வழியே நறையூரை அடையலாம்.

தலத்தின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச் சரம். சித்தர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற இடமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் சித்திநாதர். அம்மை அழகம்மை. பிள்ளையார் ஆண்ட பிள்ளையார். இங்கு வழிபட்டுய்ந்தோர் குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடபால் உள்ளது. தேன்சித்தி தீர்த்தம் என்ற ஒன்றும் உள்ளதென்பர்.



கல்வெட்டு:

இத்தலத்தில் அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 24 உள்ளன. அவற்றுள், முதல் இராஜராஜன் காலமுதல் குலோத்துங்கன் IIIகாலம் வரையிலுள்ள சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கி.பி. 1118 முதல் 1135 வரை ஆண்ட விக்கிரமனே இத்தலத்தில் மிக ஈடுபாடுடையவன் என்பது தெரிகின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற அரசர்கள் இராஜராஜன்I, வீரராஜேந்திரன் II,குலோத்துங்கன்I,II,III,விக்ரமசோழன், இராஜராஜன் II, இராஜாதிராஜன்II. இவைகளில், இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருநறையூர் நாட்டுத் திருநறையூர் எனவும், அருண் மொழித்தேவவளநாட்டுத் திருநறையூர் எனவும், விக்கிரமன் முதற் குலோத்துங்கன் இவர்கள் காலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திருநறையூர் எனவும் பஞ்சவன் மாதேவியான சதுர்வேதி மங்கலத்துத் திருநறையூர் எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

சுவாமிபெயர் சித்தநாதேஸ்வரமுடையதேவர் எனவும் சித்தநாதேஸ்வரமுடையார் எனவும் வழங்கும்(161 of 1908) . இங்குள்ள பிக்ஷாடன தேவர் சிறப்புடையார். இவருக்குத் திருநறையூர்ச் சிவப்பிராமணர் ஒருவர் 30 காசு பொன்னை நிவேதனத்திற்காக அளித்தார் 1. இங்கு வழிபாட்டிற்காக வரும் சிவயோகிகட்கு உணவுக்காக மண்ணி நாட்டுக்கருப்பூர் உடையான் ஒருவர் நிலம் விட்டார். இத்தலத்துள்ள பிடாரிகோயிலுக்கு நிலம்விட்ட செய்தியும் குறிக்கப்பெறுகிறது(175 of 1908). ஏனைய கல்வெட்டுகள் விளக்குக்காகவும் நிவேதனத்திற்காகவும் பலர் நிலமும் பொன்னும் அளித்ததை அறிவிக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி